மடிக் கணினி பயன்படுத்துகிறீர்களா?

பேட்டரியின் ஆயுட் காலத்தை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பது அனேகன்மாக ஒவ்வொரு மடிக் கணினி பயனர்களும் தங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்ளும் ஒரு கேள்வி என்பதை உறுதியாகக் கூறலாம். பேட்டரியின் ஆயுட் காலத்தை மடிக் கணினிக்கான மின் சக்தியை நேரடியாக Power Cord பயன்படுத்தி வழங்குவதன் மூலம் அதிகரிக்க முடியுமா எனக் கேட்டால் இதற்கான பதில் ‘ஆம்’ என்றுதான் சொல்ல வேண்டும்.
மடிக்கணினிகளில் பயன் படுத்தப்படும் மின் களங்களுக்கும் அவை செயற் படக் கூடிய ஒரு கால எல்லை உண்டு. Lithium-Ion எனும் வகையிலான பேட்டரிகள் 1000 தடவைகள் மீள் சக்தியளிக்கவோ அல்லது 2 முதல் 4 வருடங்கள் வரை பயன் படுத்தக் கூடியதாகவோ இருக்கும் எனவே வசதியான இடங்களில் பவர் கோட் பயன் படுத்துவதன் மூலம் அக்கால எல்லையை மேலும் சில காலம் நீடிக்கச் செய்யலலாம்
.மடிக் கணினிகளில் பேட்டரியின் ஆயுட் காலத்தை அதிகரிப்பதற்கான சில ஆலோசனைகளை இங்கே பட்டியலிடுகிறேன்.
-
முறையான கால இடை வெளிகளில் ஹாட் டிஸ்கை டிப்ரேக்மண்ட் (Defragment) செய்து கொள்ளுங்கள். ஏனெனில் ஹாட் டிஸ்கிலுள்ள டேட்டாவைப் படிப்பதற்கு அதிக் நேரம் எடுக்குமாயின் ஹாட் ட்ரைவ் அதிக தடவை சுழல் வேண்டியிருக்கும். ஹாட் டிஸ்க் ட்ரைவ் அதிக நேரம் சுழல வேண்டி ஏற்பட்டால் மடிக் கணினி பேட்டரியின் சக்திய அதிகமாக நுகரும். எனவே டிப்ரெகமண்ட் செய்வதன் மூலம் ஒரு பைலுக்குரிய பகுதிகள் அனைத்தும் ஹாட் டிஸ்கில் அருகருகே நிறுத்தப்படும். இதன் மூலம் ஹாட் டிஸ்கிலிருந்து ஒரு ஃபைலை வேகமாக அணுகக் கூடியதாயிருக்கும்.
-
லேப்டொப் திரையின் பிரகாசத் தனமையக் (brightness) குறைத்து விடுங்கள். இதற்கான வசதி கீபோர்டில் தரப்பட்டிருக்கும். எனினும் இந்த .விசை கணினிக்குக் கணினி மாறுபடலாம்
-
பின்னணியில் இயங்கும் ஸ்க்ரீன் சேவர் போன்ற ப்ரோக்ரம்களையும் மற்றும் நீங்கள் பயன் படுத்தாத எப்லிகேசன்களையும் நிறுத்தி விடுங்கள். இதன் மூலம் சீபியூ வின் பயன்பாடு வெகுவாகக் குறைகிறது. அதனால் சிபியூ நுகரும் மின் சக்தியின் அளவும் குறைகிறது. விண்டோஸ் இயங்கு தளத்தில் Ctrl+Alt+Del விசைகளை ஒரே தடவையில் அழுத்துவதன் மூலம் டாஸ்க் மேனெஜரை வரவழைத்து அங்கு Processes தெரிவு செய்து தேவையற்ற ப்ரோக்ரம்களை நிறுத்தி விடலாம்.
-
மடிக் கணினி பேட்டரியின் உலோகப் பகுதியை அற்ககோலில் தோய்க்கப்பட்ட ஒரு துணி கொண்டு சுத்தம் செய்து விடுங்கள். இதன் மூலம் பேட்டரியிலிருந்து மடிக் கணினிக்கு மின் சக்தி மேலும் திறன்பட வழங்கப்பட்டும்.
-
முறையானதோர் மின் வலு திட்டமொன்றை (Power Scheme) உங்கள் மடிக் கணியில் பேணுங்கள். இதற்கான வசதி விண்டோஸ் எக்ஸ்பீ, விஸ்டா மற்றும் செவன் பதிப்புகளில் தரப்பட்டுள்ளது. முடிந்தளவு Low Power Mode இல்மடிக்கணினியை ப் பயன் படுத்துங்கள்.
-
வை-ஃபை, ப்லூடூத் போன்ற கம்பியில்லா இணைப்புக்கள் அதிக மின் சக்தியைப் பயன் படுத்துகின்றன. எனவே அவற்றைப் பயன் படுத்தாத போது நிறுத்தி விடுங்கள். இதன் மூலாம் அதிக மின் வலுவை சேமிக்க முடியும்.
- – மடிக் கணினி பேட்டரியில் இயங்கும் போது ஒரே சமயத்தில் ஒரு எப்லிகேசனில் மாத்திரம் பனியாற்றுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட எப்லி கேசன் களை இயக்கும் போது (multitask) அவை அதிக மின் சக்திய நுகர வேண்டியிருக்கும்.
-
USB போர்ட் மூலம் இணைக்கப்படும் வயர்லஸ் மவுஸ், டிஜிட்டல் கேமரா போன்ற புற சாதனங்களை அவற்றைப் பயன் படுத்தாத் போது அகற்றி விடுங்கள்.
-
CD / DVD போன்றவற்றை நீங்கள் பயன் படுத்தா விடினும அவற்றை சிடி ட்ரைவில் இட்டு வைக்காதீர்கள். ஏனேனில் சீடி ட்ரைவ் சுழல்வதாலும் பேட்டரியின் ஆயுட் காலம் குறைந்து விடும்.
-
மடிக் கணினியை குறுகிய நேரத்திற்கு நிறுத்தி வைக்க விரும்பின் standby நிலையில் வைப்பதை விட Hibernate நிலையில் வைப்பதன் மூலம் பேட்டரிய்ல் அதிக மின் சக்தியை சேமிக்கலாம். ஏனெனில் Stand By நிலையில் ஹாட் டிஸ்க் மற்றும் திரையின் இயக்கம் நிறுத்தப் பட்டாலும் நினைவகம் இயக்கத்திலிருக்கும். இதனால் மின் சக்தியும் விரயமாகும். எனவே ஸ்டேண்ட் பை நிலையில் கணினியை வைக்காமல் ஹைபனேட் செய்து விடுங்கள். ஹைபனேட் செய்வதன் மூலம் கனினியியில் இறுதியாக நடை பெற்றுக் கொண்டிருந்த செயற்பாட்டை சேமித்து விட்டு கணினி முழுமையாக ஓய்வுக்குச் செல்கிறது.
- மடிக் கணினியில் வெப்பத்தை வெளியேற்ற வென அமைக்கப்படிருக்கும் துவாரங்கள் அடைக்கப்படாததை உறுதி செய்து கொள்ளுங்கள். துவாரங்கள் அடைக்கப்படின் கணினி மேலும் வெப்பமடைந்து பேட்டரியின் ஆயுட் காலத்தை குறைத்து விட வாய்புள்ளது. எனவே மடிக் கணினி பயன் படுதும் இடத்தை காற்றோட்டமுள்ளதாயும் தூசுகள் படியாதவாறு சுத்தமான இடத்திலும் வைத்திருங்கள்.
-அனூப்-