Home / General / Internet – 40 years

Internet – 40 years

இணையத்தின் வயது 40 -சில வரலாற்றுப் பதிவுகள்

1969 செப்டெம்பர் 2 – ஆம் திகதி லொஸ் ஏஞல்ஸ் நகரிலுள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் Leonard Kleinrock என்பவரின் கணினி ஆய்வு கூடட்தில் இரண்டு கணினிகளுக்கிடையே டேட்டா பரிமாறுவதில் வெற்றியீட்டப் படுகிறது. இதுவே நம் அன்றாட வாழ்க்கையோடு ஒன்றிணைந்து விட்ட இணையத்தின் துவக்க நாளாகும். அதாவது கடந்த செப்டபர் 2 ஆம் திகதி தனது 40 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடியது இண்டர்நெட்.

இரானுவ தேவைக்காக, தனது பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் சில பல்கலைக் கழகங்களை இணைத்து எந்த ஒரு பேரழிவு எற்பட்டு அதன் ஒரு பகுதி சேதமுற்றாலும் எஞ்சியுள்ள மற்றொரு பகுதியூடாக் டேட்டாவைப் பரிமாறிக் கொள்ளக் கூடியதாக் ஒரு கணினி வலயமைப்பை உருவாக்க நினைக்கும் அமெரிக்கா அந்தப் பொறுப்பை Advanced Research Project Agency எனும் நிறுவனத்திடம் ஒப்படைக்கிறது. இந்த வலையமைப்புக்கு ARPANET எனும் பெயர் வழங்கப் படுகிறது.. இன்று கூகில் என்றும், பேஸ்புக் என்றும், யூடியூப் என்றும் இமாலய வளர்ச்சியடைந்துள்ள இணையத்தின் துவக்க நாளில் அர்த்தமறற டேட்டாவே முதன் முதலில் ARPANET இல் பறிமாறிக் கொள்ளப்பட்டன.

எனினும் இந்த் டேட்டா பரிமாற்றம் முழுமையான வெற்றியாக அப்போது கருதப் படவில்லை. அதன் பின்னர் அதே வருடம் ஒக்டோபர் 29 ஆம் திகதியே அவர்களின் முயற்சியில் முழு வெற்றி கிடைக்கிறது.

1971 Ray Tomlinson, எனும் பொறியியலாளர் கணினி வலயமைப்பில் முதல் மின்னஞ்சல் செய்தியை அனுப்புகிறார். பயனர் பெயரையும் டொமேன் பெயரையும் பிரிக்கும் “@” எனும் குறியீட்டையும் இவரே அறிமுகப் படுத்துகிறார்.
1973 அமெரிக்கவிற்கு மட்டுமே சொந்தமாயிருந்த ARPANET எனும் கணினி வலயமைப்பில் ஐக்கிய ராஜ்யம், மறும் நோர்வே நாடுகளும் இணைகின்றன.
1974 அமெரிக்க கணினித் துறை நிபுண்ர்களான Vinton Cerf மற்றும் Bob kahn என்போரால் The Internet and Transmission Control Protocols (TCP/IP) எனும் இனைய விதிமுறைகள வடிவமைக்கப்படுகிறது. இது இணைய வரலாற்றில் ஒரு புரட்சிகர முன்னேறறம் எனலாம்.

1979 CompuServe எனும் நிறுவனம் இணையத்தில் பயனருக்கான online சேவையை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் கட்டணம் செலுத்தி இணையம் வழியே செய்திகளை வாசித்தறிந்தார்கள்

1980 CB Simulator எனும் பெயரில் இணையம் வழியே (Chat) உரை யாடும் சேவை அறிமுகமாகிறது.

1983 : இணையத்தளங்களுக்கு “.com”.”.gov” , “.net”, “.edu” எனும் Domain Name System அறிமுகப் படுத்தப்பட்டது.

1988 Robert T. Morris எனும் பலகலைக கழக மாணவன் இணையத்தின் வழியே முதல் கணினி வைரசை பரப்பி விடுகிறார். மோரிஸ் இதனை ஒரு சோதனை முயற்சியாகாவே செய்ததாக்ச் சொன்னாலும் ஆயிரக் கணக்கில் கணினிகளை பழுதடையச் செய்ததனால் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்.. தற்போது இவர் ஒரு கணினித் துறைப் பேரசியராக கடமையாற்றுகிறர்ர்.

1989 Quantum Computer Services எனும் நிறுவனம், கணினி விளையாட் டுக்கள், மற்றும் இணைய உரையாடலுக்கான America Online எனும் சேவையை இணையத்தின் வழியே அறிமுகப்படுத்துகிறது.

1990 அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலிருந்த ARPANET எனும் கணினி வலையமைப்பு உலக நடுகள் அனைத்தும் இணைந்து கொள்ளக் கூடியதாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு இண்டர்நெட் எனும் பெயரில் அறிமுகமாகிறது.

Tim Berners-Lee எனும் ஆங்கிலேயரால் இணைய சேவைகளில் ஒன்றான World Wide Web. உலகில் அறிமுகப்படுத்தப்பட்டுகிறது. இதுவே இணைய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும்.

1993 Mosaic எனும் முதல் வெப் பிரவுஸரை Marc Andreessen அறிமுகப் படுத்துகிறார்.

1994 Mosaic இல் பணியார்றிய சிலர் இணைந்து Netscape எனும் வெப் பிரவுஸரை வியாபார நோகில் உருவாக்குகின்றனர்.

1994 David Filo மற்றும் Jerry Yang என்போரால் Yahoo. நிறுவனம் தோறுவிக்கப் படுகிறது.

1998 – Larry Page மற்றும் Sergey Brin என்போரால் Google நிறுவனம் தோற்றுவிக்கப்படுகிறது

1999 ப்லோக் எனும் வலைப்பதிவு அறிமுகமாகியது.

2005 இணையத்தில் வழியே வீடியோ காட்சிகளைப் பகிர்ந்து கொள்ளும் YouTube சேவை அறிமுகமாகிறது.

2006 Mark Zuckerberg எனும் ஹாவாட் பல்கலைக் கழக மாணவனால் 2004 ஆம் அண்டில் உருவாக்கப்பட்ட் thefacebook.com 2006 ஆம் வருடத்திலிருந்து வயது வித்தியாசமின்றி எவரும் இணைந்து கொள்ள அனுமதிக்க்ப் பட்டதும் facebook பெரு வ்ளர்ச்சியடைகிறது.

இதே ஆண்டு 2001 அண்டில் உருவாக்கப்பட்ட விக்கிபீடியா எனும் ஓன்லைன் த்கவல் களஞ்சியத்தில் . (online encyclopedia) வெளியிடப் பட்டுள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு மில்லியன் இலக்கை அடைகிறது.

2007 Apple நிறுவனம் Iphone எனும் கையடக்கத் தொலைபேசியை வெளியிட்டது. இதன் மூலம் அதி வேக கம்பியில்லா இணையம் பாவனைக்கு வந்த்து.

  -அனூப் –

About Imthiyas Anoof

Check Also

BlueStacks X-Play Android Games in Your Browser

BlueStacks X-Play Android Games in Your Browser PBlueStacks X-Play Android Games in Your Browser விண்டோஸில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *