Home / General / Is your monitor display upside down?

Is your monitor display upside down?

கணினித் திரையில் காட்சிகள் தலை கீழாக மாறி விட்டதா? 
உங்கள் கணினித் திரையில் காட்சிகள் தலை கீழாக மாறி விட்டதா? கவலை வேண்டாம். விண்டோஸ் இயங்கு தளத்தில் கணினித் திரையை மறுபடி பழைய நிலைக்குக் கொண்டு வர பல வழிகள் உள்ளன.
விசைப் பலகையில் Ctrl-Alt விசைகளை ஒரே நேரத்தில் அழுத்தியவாறே மேல் நோக்கிய அம்புக் குறி  (up arrow) விசையை அழுத்துங்கள். உடனே கணினித் திரை வழமையான நிலைக்கு மாறுவதைக் காண்லாம். மேலும் Ctrl-Alt  விசைச் சேர்மானத்துடன் ஏனைய அம்புக் குறி விசைகளை அழுத்தும் போதும் அவை காட்டும் திசைகளில் கணினித் திரை மாறும்.  
இந்த விசைச் சேர்மானம் இயங்காமல் போனால் கண்ட்ரோல் பேணலில் Display தெரிவு செய்து வ்ரும் டயலொக் பொக்ஸில் Settings டேபில் க்ளிக் செய்து கிழுள்ள Advanced பட்டணில் க்ளிக் செய்யுங்கள். அங்கு Orientation என்பதைத் தெரிவு செய்தும் விரும்பிய கோணத்தில் திரையை மாற்றிக் கொள்ளலாம். .
உங்கள் கணினிய்ல் மூன்றாம் தரப்பு வீடியோ அடெப்டர் மென்பொருள் கருவிகள் நிறுவியிருப்பின் சாவிச் சேர்மாங்கள் இயாங்காமல் போவதுடன் மேற்சொன்ன Orientation தெரிவும் காணப்படாது. அவ்வாறு மூன்றாம் தரப்பு மென்பொருள் கருவிகள் நிறுவியிருக்கும் சந்தர்ப்பங்களில் டாஸ்க் பாரின் வலது புறம் System trayபகுதியில் உங்கள் கணினியில் நிறுவப் பட்டிருக்கும் வீடியோ  ட்ரைவர் மென்பொருளுக்குரிய ஐக்கனில் right-click செய்து வரும் விண்டோவில் rotation settings தெரிவுகளை மெற் கொள்ளலாம்.  

இன்னும் உங்களால் கணினித் திரையை ஒழுங்கமைக்க முடிய வில்லையா? அப்படியாயின் கணினியை Safe Modeஇல் இயக்குங்கள். . (அதற்குக் கணினி இயங்க்ம் போது F8 விசையை அழுத்த வேண்டும்.)   பின்னர் மேற் சொன்ன வழிகளில் முயன்று பாருங்கள். முடியாமல் போனால் உங்கள் வீடியோ ட்ரைவர் மென்பொருளை நீக்கி விட்டு மறுபடி அதனைக் கணினியில் நிறுவுங்கள். அப்போதும் முடியாது போனால் உங்கள் வீடியா ட்ரைவருக்குரிய புதிய பதிப்பை  இணையத்திலிருந்து டவுன் லோட் செய்து நிறுவிக் கொள்ளுங்கள். 

-அனூப்- 

About Imthiyas Anoof

Check Also

BlueStacks X-Play Android Games in Your Browser

BlueStacks X-Play Android Games in Your Browser PBlueStacks X-Play Android Games in Your Browser விண்டோஸில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *