Home / Android / Kodular – No Code Android App Maker
kodular

Kodular – No Code Android App Maker

Kodular கோடுலர் /கோடியுலர் (code + modular => Kodular ஆனது) என்பது அண்ட்ராயிட்  மொபைல் செயலிகளை உருவாக்க உதவும் ஒரு திறந்த மூல நிரல் (?) ஆன்லைன் கருவியாகும். இதன் மூலம் எந்தவித கணினி செய்நிரலாக்க மொழி அறிவும் (programming knowledge) இல்லாமல்  அண்ட்ராயிட் செயலிகளை  உருவாக்க முடிகிறது.

99011012 1693962057411262 178704032884326400 n

கணினி செய்நிரல்களை  உருவாக்க வெண்டுமானால் ஏதாவது ஒரு கணினி மொழியில் ஆழமான புலமை இருக்க வேண்டும். குறிப்பாக அண்ட்ராயிட் மொபைல் செயலிகளை உருவாக்க ஜாவா எனும் கணினி மொழியைத் திறமையாக் கையாளத் தெரிய வேண்டும்

அனேகமாக அண்ட்ராயிட் செயலிகள் ஜாவா கணினி செய்நிரலாக்க மொழியினைப்  பயன் படுத்தி Android Studio எனும் IDE (Integrated Development Environment) உதவியுன் உருவாக்கப்படுகின்றன.

ஆனால் இதற்கு மாறாக கோடுலர் https://www.kodular.io/ தளத்தின் மூலம்  அதிக தொழில்நுட்ப அறிவு இல்லாதவர்களாலும்  கோடிங்ஸ் எனும் கடினமான செய்நிரல் குறியீடுகள்  எதுவும் எழுதாமல் இலகுவாக  ”இழுத்துப் போடும்” (drag & drop) வசதி மூலம் எவ்வகையான  அண்ட்ராய்டு செயலிகளையும் உருவாக்க முடியும்.  

kodul

கோடிங்ஸ் எதுவும் எழுதாதனால் இதனை ஒரு நோ-கோட் அண்ட்ராயிட்  ஆப் டெவலப்மன்ட் ப்லாட்ஃபார்ம் (No code Android App development Platform) எனவும் குறிப்பிடலாம். இது Scratch, Arduino, Microbit  போன்ற தொகுதி அடிப்படையிலான (Block based) ஒரு பயனர் வரைகலை இடைமுகத்தைக் கொண்டுள்ளது.

கம்பியூட்ட ப்ரோக்ரம்மிங் பற்றிய அறிவு இல்லாமல் அண்ட்ராயிட் செயலிகளை உருவாக்க உதவும் வேறு ஆன்லைன் தளங்களும் பயன்பாட்டில் உள்ளன.  அவற்றிற்கு உதாரணமாக MIT App Inventor, Thunkable, AppyBuilder போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுள் எப்பி பில்டரை AppyBuilder தளத்தை தற்போது கோடுலர் நிறுவனம் கையகப்படுத்தி கோடுலருடன் இணைத்துக் கொண்டு விட்டது. http://appybuilder.com/ சென்று பாருங்கள். அது உங்களை https://creator.kodular.io/ தளத்திற்கு அழைத்துச் செல்லும்.

86875327 1601671296640339 6369898462355390464 n

தங்கபல் (Thunkable – தங்கப் பல் அல்ல)  மேடை கோடுலர் போன்று இலவசமானதல்ல. அதன் சேவைகளைப் பெற கட்டணம் செலுத்த வெண்டும். எனினும் தங்கபல்  மூலம்  அண்ட்ராயிட் மாத்திரமல்லாமல் iOS செயலிகளையும் உருவாக்க முடியும்.

கோடுலர் முதலில்  மேக்-ராய்ட் (Makedroid) எனும் பெயரில் 2017 ஆம் அண்டில் அறிமுகமானது, இதனை ஸ்பெயின் நாட்டு  இளம் மாணவரான டியாகோ பாரேரோ Diego Barreiro பல நாடுகளைச் சேர்ந்த இளம் கணினி செய்நிரலாலர்களுடன்  இணைந்து மேக்-ராய்டை அறிமுகம் செய்தார்.

அப்போது அந்த டெவலப்பர்கள் அனைவரும் தங்கள் டீன் ஏஜ் வயதில் ( சின்ன பொடியன்மார்)  இருந்ததாக் கூறப்படுகிறது. (https://www.kodular.io/team கோடுலர் தளத்தில் இதனை உருவாக்கியவர்களின் விவரங்களைக் காணலாம்)

1 09 9V13 DBDpkGw7sNYMg

Makedroid தளம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதிக பயனர்களின் வருகையை சமாளிக்க முடியாமல் சில மாதங்களில் அப்போது அதனை தற்காலிகமாக மூட வேண்டியேற்பட்டது. அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டில் அதிக தொழிற்நுட்ப வசதியுடன் Kodular எனும் பெயரில் மறுபடி வெளியிடப்பட்டது.

கோடுலரில் செயலி ஒன்றை உருவாக்குவதற்கு முதலில்  உங்களுக்கென ஒரு கோடுலர் கணக்கை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.  .

கோடுலர் கணக்கை  உருவாக்கி உள் நுழைந்தும் செயலியை உருவாக்குவதற்கான ப்ரோஜெக்டை ஆரம்பித்ததும் தோன்றும் திரையில் மூன்று நிரல்கள் காண்பிக்கப்படும். அங்கு நடுவிலுள்ள ஸ்மார்ட்போன் படத்தின் மீது  இடப்புறமுள்ள நிரலிலிருந்து தேவையான  “கூறுகளை (components) ” இழுத்துப் போட்டு அந்தக் கூறுகள் ஒவ்வொன்றும் எவ்வாறு தொழிற் பட வேண்டும் என்பதை ப்லோக்ஸ் டேபில் (tab) க்ளிக் செய்து தேவையான ப்லொக்ஸ்ஸை தேர்வு செய்து வரையறுக்க வேண்டும். வலப்புறமுள்ள நிரலின் மூலம் கூறுகளின் பண்புகளை மாற்றியமைக்கலாம்.

Player

ஆனால் இங்கு கோடிங்ஸ் அறிவு இல்லாவிடாலும் இந்த ப்லோக்ஸ் (blocks) ஒவ்வொன்றும் எவ்வாறு தொழிற்படுகின்றன என்பதை ஆழமாகப் புரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும் logical thinking எனும் தர்க்க ரீதியான சிந்தனையும் இருத்தல் அவசியம் உண்மையில் இந்த ப்லோக்ஸ் ஒவ்வொன்றினதும் பின்னணியில் இயங்குபவை கோடிங்ஸ் (coding) எனும் செய் நிரல் கூறுகளே. ஆனால் அவை உங்கள் பார்வையில் வராது.  

kod app

கோடுலரைப் பயன்படுத்தி செயலியொன்றை உருவாக்கும்போது செயலி  முழுதும் பூர்த்தியாகாத நிலையில்   நிகழ் நேரத்திலேயே (real time) அண்ட்ராயிட் கருவியொன்றில்  சோதித்துப் பார்க்க முடியும்.  அதற்கு கோடுலர் கம்பேனியன் (Kodular Companion) எனும் மற்றுமொரு அண்ட்ராயிட் செயலி பயன்படுத்தப்படுகிறது.

kod com

செயலியை உருவாக்கிய பின்னர் அதனை APK கோப்பாக மாற்றி எவருடனும்  பகிர்ந்து கொள்ளலாம். அண்ட்ராயிட் கருவி யொன்றில் நிறுவிக் கொள்ளலாம் அல்லது அதனை கூகுல் ப்லே ஸ்டோரிலும் வெளியிடலாம்.  

ப்லேஸ்டோரில் வெளியிடும் போது எட்மொப் (Admob)  எனும் விளம்பர கூறினை இணைத்து அதன் மூலம் வருமானம் பெறவும் முடியும். எனினும் எட்மொப் விளம்பர கூறினை இணைப்பதானால் உங்கள் விளம்பர வருமானத்தில் சிறு பகுதியை கோடுலர்  நிறுவனம் எடுத்துக் கொள்ளும். அதனால் கோடுலரை முற்று முழுதான ஒரு திறந்த மூல நிரல் மேடையாகக் கருத முடியாது.

admob

கூகுள் பிளே ஸ்டோருக்கு மாற்றாக ஒரு ஆன்லைன் ஆப் ஸ்டோரையும் https://store.kodular.io கோடுலர் வழங்குகிறது. கோடுலர் தளத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில் புதிய கூறுகளை உருவாக்கவல்ல மேம்பட்ட பயனர்களுக்கான (advanced users) நீட்டிப்பு ஐ-டி-இ (Extension IDE) ஒன்றிணைந்த விருத்தியாக்க சூழல் நீட்சி எனும் வசதியையும்  கோடுலர்  வழங்குகிறது

கோடுலர் பற்றிய உங்கள் சந்தேகங்கள்  தொடர்பான உதவியைப் கோடுலர்  சமூகத்தைப் (Community) பயன்படுத்திப் பெறலாம். அங்கு  கோடுலரை மேம்படுத்த உதவக் கூடிய உங்கள் கருத்துக்களைச் சமர்ப்பிக்கவும் நீங்கள் கோடுலர் பயன் படுத்தும் போது எதிர் கொள்ளும் வழுக்கள்  குறித்து முறையிடவும் முடியும். இந்த  கோடுலர் சமூகத்தில்  உங்களுக்கு உதவும் பல பயனர்களைக் உள்ளனர். இதன் பொருள் உங்களுடைய எந்தவொரு கேள்விக்கும் சில நிமிடங்களில் சரியான பதிலைப் பெற முடியும்.

கோடுலர் அல்லாத வேறு தளங்களில் முன்னர் உருவாக்கிய அண்ட்ராயிட் செயலிகளையும் கோடுலரிற்கு இம்போட் (import)  செய்து எடிட் (edit)  செய்யலாம் அஅதற்கு உங்களிடம் அந்த செயலியிற்குரிய .aia எனும் கோப்பு இருத்தல் அவசியம்.

கோடுலரை ஆன்லைனில் https://www.kodular.io/ தளத்தினூடு அணுகலாம்.

kodular app

About admin

Check Also

Windows 11 Medium

Microsoft Officially Released Windows 11

Microsoft Officially Released Windows 11 Microsoft Officially Released Windows 11 விண்டோஸ் 11 பதிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது; …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *