Home / Software / Lock your computer using Pen drive

Lock your computer using Pen drive

கணினியை லொக் செய்யும் பென்ட்ரைவ்
கணினியை அனுமதியின்றி எவரும் பயன் படுத்தாமல் இருக்க விண்டோஸ் இயங்கு தளத்தில் கடவுச் சொற்கள்  வழங்கிப் பலரும் பயன் படுத்துவதுண்டு. எனினும் அந்தக் கடவுச் சொல்லை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டியது அவசியம். மாறாக  Rohos Logon Key எனும் சிறிய மென்பொருள் பாஸ்வர்டுக்குப் பதிலாக உங்கள் பென் ட்ரைவையே பாஸ்வர்டாக பயன் படுத்தக் கூடிய  வசதியைத் தருகிறது
இந்த மென்பொருளை rohos.comஎனும் இனைய தளத்திலிருந்து டவுன் லோட் செய்து நிறுவிக் கொள்ளுங்கள். பின்னர் உங்கள் பென் ட்ரைவை கணினியில் செருகி மென்பொருளை இயக்குங்கள். அதனை இயக்கியதும் தோன்றும் சிறிய விண்டோவில் Setup USB Keyஎன்பதைத் தெரிவு செய்து கொள்ளுங்கள். அப்போது தோன்றும் சிறிய பெட்டியில் உங்கள் பென் ட்ரைவுக்குரிய எழுத்தைத் தெரிவு செய்து உங்கள் பயனர் கணக்குக்குரிய விண்டோஸ் பாஸ்வர்டை வழங்கி Setup USB Key  என்பதைக் க்ளிக் செய்யுங்கள்.
இப்போது பென்ட்ரைவைக் கணினியிலிருந்து அகற்றி மறுபடி கணினியை இயக்குங்கள். இப்போது கணினி இயங்க அரம்பித்ததும் லொக் ஓன் திரையுடன் நின்று விடும். அப்போது பென்ட்ரைவை மறுபடியும் கணினியில் செருகுங்கள்உடனே டெஸ்க்டொப் திரைக்கு வந்து விடும்.

அனூப்

About Imthiyas Anoof

Check Also

Steps Recorder-Windows 10

Steps Recorder-Windows 10 விண்டோஸ் 10 இல்  ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் என்பது உங்கள் கம்பியூட்டரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *