Home / Software / M File Anti-copy

M File Anti-copy

 M File Anti-copy

பைல் ஒன்றைப் பிரதி செய்வதிலிருந்தும் அதன் பெயரை மாற்றுவதிலிருந்தும் தடுப்பதற்கான வசதிவிண்டோஸ் இயங்கு தளத்தில்தரப்படவில்லை. இதற்கான மூன்றம் தரப்பு மென்பொருளே M File Anti-copy. இதன்  மூலம் பைல் ஒன்றைப் பிரதி செய்யாமலும் பெயரை மாற்றாமலும் தடுக்க முடிவதோடு அதனை இடமாற்றம் செய்வது  அழிப்பது (டெலீட்) போன்ற செயற்பாடுகளிலிருந்தும் தடுக்கலாம். மேலும் பைல்களைப் பிறர் திறந்து பார்க்க முடியாமல் அவற்றிற்குப் பாஸ்வர்ட் பாதுகாப்பும் கூட வழங்கலாம்.
இவை தவிர விண்டோஸிலுள்ள  folder options, Task manager, Registry Editor, Search போன்றவற்றை செயற்படாமல் முடக்கி விடவும் முடிகிறது. இந்த மென்பொருள் கருவியைக் கணினியில் நிறுவி விட்டு “Enable or Disable Protection பட்டனில் க்ளிக் செய்து பிரதி செய்வதிலிருந்து தடுப்பதற்கான பைல்களைக் காட்டி விடுங்கள். இதன் மூலம் பைல்களை மட்டுமன்றி போல்டர் ட்ரைவ் போன்றவற்றிற்கும் பாதுகாப்பு வழங்க முடியும்.
விண்டோஸ் இயங்கு தளத்தின் எந்தப் பதிப்பிலும் இயங்கும் இதனை http://www.softpedia.com/ எனும் இனையதளத்திலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். இது ஒரு ஷேர்வெயார் (Shareware) என்பதால் 20 தடவைகள்  மட்டும் இயக்கிப் பரீட்சித்துப் பார்க்கலாம்பைல் அளவு 1.8 மெகாபைட்.

-அனூப்-

About Imthiyas Anoof

Check Also

Steps Recorder-Windows 10

Steps Recorder-Windows 10 விண்டோஸ் 10 இல்  ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் என்பது உங்கள் கம்பியூட்டரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *