Home / General / Malicious Software Removal Tool

Malicious Software Removal Tool

தற்போது வைரஸ் என்பது கணினிப் பாவனையாளர்களுக்கு பெரும் தொல்லையாகவே இருந்து வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து காத்துக் கொள்ள ஒவ்வொரு கணினிப் பாவனையாளரும் படும் அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல. அதே வேளை உலகில் கணினி பயன்படுத்துவோரில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே முறையான வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் நிறுவிக் கணினியைப் பாதுகாப்பதாகவும் ஏனையோர் வைரஸைக் கணினிக்குக் கணினி பரவச் செய்வதில் துணை புரிபவர்களாகவே இருப்பதாகவும் ஒரு மதிப்பீடு சொல்கிறது. இந்த நிலையை மாற்றி அமைக்கும் வண்ணம் மைக்ரோஸொப்ட் நிறுவனம் வெளிIட்டிருப்பதே Malicious Software Removal Tool எனும் வைரஸ் நீக்கும் மென்பொருள் கருவியாகும்.

விண்டோஸ் 2000, எக்ஸ்.பீ, மற்றும் விஸ்டா பதிப்புகளுக்கென மைரோஸொப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் கருவியான இந்த Microsoft Malicious Software Removal Tool இதற்கு முன்னர் மைக்ரோஸொப்ட் நிறுவனத்தல் வெளியிடப்பட்டுள்ள வைரஸ் எதிர்ப்புக் கருவிகள் அனைத்தையும் விட மேம்பட்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் நீக்கியை மைரோஸொப்ட் நிறுவனம் இலவசமாகவே வழங்குBறது.

வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் கருவியை முதன் முதலாக 2005 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்த மைக்ரோஸொப்ட் நிறுவனம் அதன் புதிய பதிப்பை (Updates) ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது செவ்வாய்க் கிழமைகளில் இணையம் வழியே வெளியிடுகிறது. விண்டோஸிலுள்ள Automatic Updates இயங்கு நிலையிலிருந்தால் நீங்கள் இணையத்தில் இணையும் போது ஒவ்வொரு மாதமும் இந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் தானாகப் பதிவிறக்கப்படுவதோடு கணினி வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளதா என முழுமையான வைரஸ் சோதனையை நடத்தும். பின்னர் விண்டோஸை மீள ஆரம்பிக்கும் போது உங்கள் கணினியில் வைரஸ் நிலைமையை ஒரு அறிக்கையாகக் காண்பிக்கும். இந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் கருவியை நிறுவிய பின்னர் நீங்களாக இயக்க வேண்டுமானால் , Start  Run டயலொக் பொகஸில் mrt என டைப் செய்து ஓ.கே சொல்ல வேண்டும்.

எனினும் இந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருளானது வைரஸ் தாக்குதலை ஓரளவுக்குக் குறைக்குமே தவிர முழுமையான ஒரு வைரஸ் எதிர்ப்பு மென்பொருளாக செயற்படாது. அதாவது நோட்டன், மெகாபே போன்ற பிற நிறுவனங்களின் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளுக்கு இது ஈடாகாது. இவ்வாறு நான் சொல்லவில்லை. இதனை மைக்ரோஸொப்ட் நிறுவனமே சொல்லி வைக்Bறது. எனவே மைக்ரோஸொப்ட் நிறுவனத்தின் இந்த வைரஸ் நீக்கியை, மாத்திரம் நம்பியிராமல் பிற நிறுவனங்களின் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளையும் கணினியில் னிறுவிக் கொள்வது நல்லது.

இந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் கருவியை மைக்ரோஸொப்ட் னிறுவன இணையதளத்தின் கீழுள்ள இணைப்பிலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். http://go.microsoft.com/fwlink/?LinkId=௪0௫௮௭

-அனூப்-

About Imthiyas Anoof

Check Also

What is DOS?  

What is DOS? Disk Operating System “டிஸ்க் ஆப்பரேட்டிங் சிஸ்டம்” என்பதன் சுருக்கமே  DOS.  ஐபிஎம்-மற்றும் அதற்கு இணக்கமான …

Leave a Reply