கணித சமன்பாடுகளை உள்ளீடு செய்ய..
கணித சமன்பாடுகளை டைப் செய்வதற்கென எம்.எஸ்.வர்ட் மென்பொருளின் 2007 மற்றும் அதற்குப் பிந்திய பதிப்புகளில் ஈகுவேசன் (Equation) எனும் வசதியுள்ளதை நீங்கள் அறிந்திருக்கலாம். எனினும் அதனை விட இலகுவாக கணித சமன்பாடுகளை உள்ளீடு செய்யும் வசதியைத் தருகிறது மேத் இன்புட் பேனல் (Math Input Panel) எனும் மென்பொருள் கருவி. இக்கருவி விண்டோஸ் இயங்கு தளத்தின் 7 , 8.1 மற்றும் அண்மைய 10 பதிப்புகளில் இன்ணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ட்ரோயிங் பேட் (Drawing Pad) போன்ற சிறிய விண்டோவில் மவுசைப் பயன்படுத்தி விரும்பிய சமன்பாடுகளை பேனா கொண்டு எழுதுவது போல் எழுதும் போது அக்கையெழுத்தை இனம் கண்டு சமன்பாடாக மாற்றிவிடுகிறது இக்கருவி.
இதனைப் பயன் படுத்துவகு ஸ்டாட் மெனுவின் கீழுள்ள தேடல் பெட்டியில் Math Input Panel என டைப் செய்யும் போது ஸ்டார்ட் மெனுவில் அதன் பெயரைக் காட்சிப்படுத்தும். அதில் க்ளிக் செய்து இக்கருவியைத் திறந்து கொள்ளலாம். பின்னர் அந்தப் பேனலில் மவுஸைக் கொண்டு சமன்பாடுகளை எழுதும் போது அதனைக் கண்டறிந்து சரியான வடிவில் மாற்றி விடுகிறது, பின்னர் அதனை எம்.எஸ்.வர்ட் போன்ற மென்பொருள்களில் நுழைத்துக் கொள்ளலாம். கணித சமன்பாடுகளை அதிகமாக டைப் செய்ய வேண்டிய நேரங்களில் பயன் படுத்தக் கூடிய உபயோகமான ஒரு கருவியே மேத் இன்புட் பேனல்.
-அனூப்-