Home / General / Micro Blog என்றால் என்ன?

Micro Blog என்றால் என்ன?

ப்லோக் – Blog (Web Log;) என்பதைப் பலரும் அறிந்திருக்கலாம். இதனைத் தமிழில் வலைப்பதிவுஇ வலைப்பூ எனும் பெயர;களில் அழைக்கப்படும்.  அன்றாடம் மனதில் தோன்றும் எண்ணங்களை இணையம் வழியே பதிவு செய்வதையே வலைப்பதிவு எனப்படுகிறது.

microblog Copyமைக்ரோ ப்லோக் (microblog) என்பதும் வலைப்பதிவு போன்றதே. ஆனால் இங்கு சொல்ல வரும் கருத்துக்களும் தகவல்களும் நீண்டதாக அல்லாமல் மிகச் சுருக்கமாக இணையம் வழியே பதியப்படுவதுடன் அவை அடிக்கடி புதுப்பிக்கவும் படுகின்றன.

மேலும் ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள வலைப்பதிவிற்கான சேவைகளை வழங்கி வரும் ப்லோக்ஸ்பொட், வர்ட்ப்ரெஸ் போன்றல்லாது மைக்ரோ ப்லோக் எனப்படுபவை ட்விட்டர், பேஸ்புக் ;போன்ற தளங்களில் பதிவுகள் இடம் பெறுகின்றன.

பலராலும் அறியப்பட்ட மைக்ரோப்லோக் தளமாக ட்விட்டரைக் குறிப்பிடலாம். டிவிட்டரில் நீங்கள் ;அதிகபட்சம் 140 எழுத்துக்களுடன் பதிவிடலாம். இப்பதிவுகள் ட்வீட்ஸ் எனப்படுகின்றன. இந்த ட்வீட்ஸில் ;ஹேஸ்டேக் (#hashtags)> வேறு ட்விட்டர் பயனர்களுக்கான இணைப்புக்கள், படங்கள், வீடியோ மற்றும் பிற இணையதளங்களுக்கான இணைப்புக்கள ;என பலவகைகள் அடங்குகின்றன.

ட்விட்டர் எனும் மைக்ரோ ப்லோக்கில் உங்கள் பதிவுகளை உங்களைப் பின்தொடரும் (followers) அனைத்து ட்விட்டர் பயனரும்  பார்வையிடலாம். மேலும் ட்விட்டர் பதிவுகளை உலகெங்குமுள்ள சாதாரண கையடக்கத் தொலைபேசி வலையமைப்புக்களுக்கூடாக குறுஞ்செய்திகளாக (SMS) பெறமுடியுமாயிருப்பது ட்விட்டரின் சிறப்பம்சமாகக் கொள்ளலாம்.

பேஸ்புக் வழங்கும் மைக்ரோ ப்லோக் வசதியானது ட்விட்டரைவிட பயனுள்ளதாகக் கருதலாம். ஏனெனில் பேஸ்புக்கில ;நீண்ட கட்டுரைகளையும் ;பதிவிட முடிவதோடு வீடியோ மற்றும் படங்களையும் உள்ளடக்கலாம். மேலும் உங்கள் பதிவுகளை பிறருடன் பகிர்ந்து கொள்ளவும் (share)முடிகிறது. டிவிட்டரில்கூட ரீ-ட்வீட ;செய்யும் வசதியுண்டு.

பேஸ்புக் தளத்தில் பதிவுகளை இடுவதும் புதுப்பித்தலும் மிக இலகுவான விடயமாகக இருந்தாலும் சமூக வலையமைப்பு எனும் அடையாளத்துடன் ;மிளிர்வதிலேயே அதன் கவனம் முழுவதும் இருப்பதால ;ட்விட்டர் தளமானது இன்று வரை மைக்ரோ ப்லோக் சேவையில் பிரபல்யம் பெற்று விளங்குகிறது..

பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்கள் மைக்ரோ ப்லோக ;உலகில் ஆதிக்கம் செலுத்தினாலும் இன்னும் ஏராளமான தளங்கள் மைக்ரொ ப்லோக் சேவையை வழங்கி வருகின்றன. அவற்றுள் யாகூவின் Tumblr மற்றும் கூகிலின் Google+  போன்றவற்றையும் குறிப்பிடலாம். மேலும் பேஸ்புக நிறுவனம் தன்வசமாக்கிய படங்களைப் பகிர்வதற்கான ஐளெவயபசயஅ மற்றும் சிறிய வீடியோ படங்களைப் பகிர்வதற்கான ட்விட்டரின் Vine போன்றவற்றையும் மைக்ரோப்லோக் தளங்களுக்கு உதாரணங்களாகக் ;குறிப்பிடலாம்.

About admin

Check Also

140015606 475183587208466 4218723517675140001 o

Freesat Satellite Television Service to be launched in Sri Lanka soon

Freesat Satellite Television Service Freesat எனும் பெயரில் இலவச செய்மதி தொலைக் காட்சி சேவையொன்று விரைவில் இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page கொப்பி பண்ணாதீங்கய்யா, சுயமா எழுதுங்க!