Home / General / Moodle என்றால் என்ன?

Moodle என்றால் என்ன?

மூட்ல் என்பது ஒரு வலைத் தளம் சார்ந்த (web based)  திறந்த மூல நிரல் மென்பொருள்.Modular Object-Oriented Dynamic Learning Environment என்பதன் சுருக்கமே மூட்ல்.  இது Martin Dougiamas  என்பவரால் உருவாக்கப்பட்டது.  இது உலககெங்கும் பயன் பாட்டிலுள்ள ஒரு முறைப்படுத்திய இடை முகப்பைக் கொண்ட கற்றல் முகாமை  (LMS-Learning Management System)  மென்பொருளாகும்.  ஏராளமான கல்வி நிறுவனங்கள் பல்கலைக் கழகங்கள் மின்னணு கற்கை நெறிகளை அல்லது இணையம் வழி கற்கை நெறிகளை மூட்ல் மென்பொருல்ளைப்  பயன் படுத்தி (platform)  வழங்குகின்றன.

இவை தவிர தொடரறா பல் தேர்வு வினாக்கள்,  புதிர்கள்,  மாணவர்கள் தங்கள் சந்தேகங்களைக்  கேட்பதற்கும்  கருத்துக்களைப் பதிவிடவும்  கருத்துக்களங்கள்,  மன்றங்கள். கலைச் சொற்களுக்கான விளக்கங்கள், பிற இணைய தளங்களுக்கான இணைப்புக்கள் என பல்வேறு வசதிகளை உள்ளடக்கியுள்ளது.

.மூட்ல் மூலம் இணையம் வழியே கற்கை நெறிகளை உருவாக்க முடியும். அதன் மூலம மாணவர்கள்  தொலவிலிருந்த படியே கற்கை நெறிகளைத் தொடர முடிகிறது. மெய்நிகர் வகுப்பறை (virtual classroom)  பொதுவாக மூடில் மென்பொருள் மூலம் உருவாக்கப்படும் ஓன்லைன் தொடரறா இணைய தளங்கலில் முகப்புப் பக்கத்தில் அந்தப் பாட நெறியைப் பயிலும் மாணவர்களின் பட்டியல், கற்பிக்கும் விரிவுரையாளர்களின் விவரங்கள் உட்பட  பாட நெறிகான  நாட்காட்டி, மேலும் வழங்கப்பட்ட ஒப்படைகள் போன்றன  முகப்புப் பக்கத்திலேயே காண்பிக்கப்படும்

இது ஒரு திறந்த மூல நிரல் மென்பொருள் என்பதால் வணிக நோக்கிலான மின்னணு கற்றல் மென்பொருள்களுக்கு ஒரு சிறந்த மாற்றீடாகக் கருத்தப்படுகிறது.

About admin

Check Also

WhatsApp rolls out Message Yourself feature

நீங்களே உங்களுக்கு செய்திகளை அனுப்பக் கூடிய வசதியை வாட்சப் தற்போது அறிமுகம் செய்துள்ளது. Message Yourself  எனும்  இந்த அம்சம் மூலம்  பயனர்கள் வாட்சப்பில் குறிப்புகள்-notes, படங்கள்-images நினைவூட்டல்கள்-reminders மற்றும் இணைப்புகள்-links  போன்றவற்றை  தங்களுக்கே அனுப்பி அவற்றை சேமித்து தேவையான போது பயன் படுத்திக்  கொள்ள முடியும் இந்த அம்சத்தைப் பெற வாட்சப்பின் புதிய பதிப்பிற்கு அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.  வாட்சப் வெப் -இல் தற்போது இதனைப் பயன் படுத்த …

Leave a Reply