
Mozilla Firefox
2. Mozilla Thunderbird
மொஸில்லா தண்டர்பர்ட் இமெயில்கள் அனுப்பவும் பெறவும் பயன்படுத்தப்படும் மற்றுமொரு ஓபன் சோர்ஸ் இமெயில் க்ளையண்ட். மென்பொருளாகும். பல்வேறு வசதிகளுடன் ஸ்பாம் எனும் குப்பை அஞ்சல்களை வடிகட்டுவதில் சிறப்பாகச் செயற்படுகிறது. தண்டர்பார்ட்.
மைக்ரோஸொப்ட் ஒபிஸ் மென்பொருள் தொகுப்புக்கு இணையாக உருவாக்கப்பட்டிருக்கும் ஓபன் சோர்ஸ் மென்பொருள் தொகுப்பே ஓபன் ஒபிஸ். எம்.எஸ்.ஓபிஸில் போன்று Word Processing, Spreadsheet, Presentation, Graphics, Database மென்பொருள்களும் அடங்கியுள்ளன. இது ஏனைய ஒபிஸ் மென்பொருள்களுடன் ஒத்திசையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளtதால் இதன் மூலம் எம்.எஸ்.வர்ட்., எக்ஸல் பைல் வகைகளைக் கூட கையாளலாம்.
4. GIMP
அடோபி நிறுவனத்தின் (Photoshop) போட்டோசொப் போன்ற ஒளிப்படங்களைக் கையாளக் கூடிய ஒரு போட்டோ எடிட்டிங் மென்பொருளே ஜிம்ப். கிரபிக்ஸ் டிசைனிங் பயன்பாடில் உதவக் கூடிய ஒரு சிறந்த மென்பொருளாக ஜிம்ப் விளங்கிகிறது.. போட்டோசொப் கொண்டு உருவாக்கப்படும் PSD பைல்களையும் கூட இதன் மூலம் கையாள முடியும்.
5. Pidgin
இணைய உரையாடலில் பயன்படுத்தப்படும் ஓபன் சோஸ் மென்பொருளே பிட்ஜின். முன்னணியிலுள்ள Yahoo, MSN, GTalk, ICQ போன்ற உடனடி செய்தி (Instant Messenger) பரிமாற்றத்தில் பயன் படுத்தப்படும், மென்பொருள்களுடன் இது ஒத்திசையக் கூடியது. முன்னர் இது GAIM என்ப் பெயரிடப்பட்டிருந்தது,
6. VLC Media Player
ஒலி மற்றும் ஒளி வடிவிலானா பைல்களைக் கையாளக்கூடிய ஒரு சிறந்த ஓபன் சோர்ஸ் மீடியா ப்ளேயர் மென்பொருள்.. MPEG1, MPEG2, MPEG4, DivX, MP3, VCD, DVD, Audio CD, என ஏராளமானா ஓடியோ வீடியோ பைல் வகைகளை இதன் மூலம் கையாள் முடியும். .
7. ClamWIN
இது விண்டோஸ் இயங்கு தளத்திற்கென உருவாக்கப் பட்டிருக்கும் ஓபன் சோஸ் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள். ஏனைய வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்களைவிட கூடிய விகிதத்தில் வைரஸ் மற்றும் ஸ்பைவேர்களைக் கண்டறிகிறது. வியாபார நோக்கில் உருவாக்கப்படும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்களுக்கு நிகராக் ஒழுங்கான கால இடைவெளியில் வைரஸ் ஸ்கேன் செய்தல், அதனை அப்டேட் செய்து கொள்ளல் போன்ற வசதிகளையும் கொண்டுள்ள்து.
8. 7-Zip
வின்ஸிப், வின்ரார் போன்ற பைல் அளவினைச் சுருக்க வல்ல (File Ccompression) ஒரு ஓபன் சோர்ஸ் மென்பொருள். வின்ஸிப் (WinZip) , மற்றும் வின்ராருடன் (WinRAR) ஒப்பிடும் போது இதன் பைல்களாச் சுருக்கும் விகிதம் மேம்பட்டதாயுள்ளது. மேலும் ஏரளமான பைல்களைச் சுருக்கும் மென்பொருள்களுடன் ஒத்திசைவது இதன் சிறப்பம்சம். எனலாம்.
9. FileZilla
இது எந்த ஒரு இயங்கு தளத்திலும் இயங்கத் தக்க பைல்களை இணையம் வழியே பரிமாறக் கூடிய ஒரு FTP (File Transfer Protocol) மென்பொருள். விண்டோஸ் தளத்திற்கென உருவாக்கப் பட்டிருக்கும் FTP மென்பொருள்களில் சிறந்ததாக பைல்ஸிலா கருதப்படுகிறது,
10.Audacity
ஒடேசிட்டி என்பது ஒலிப்பதிவு செய்யவும் ஒலிக் கோப்புகளை (sound files) எடிட் செய்யவும் என உருவாக்கப்பட்டுள்ள் ஒரு ஓபனசோர்ஸ் மென்பொருள். ஒடேசிட்டி மூலம் ஒலிப்பதிவு செய்வது மட்டுமன்றி பல்வேறு ஒலி சார்ந்த செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும். எவரும் இலகுவாகப் பயன்படுத்தக் கூடிய ஒரு எளிமையயன இடை முகப்பையும் கொண்டுள்ளது வர்ததக நோக்கில் உருவாக்கப்படும் ஒலிப்பதிவு செய்யக் கூடிய மென்பொருள்களை விட தரம் மிக்கதாக ஒடேசிட்டி விளங்கிகுகிறது.
அறிவியல் சார்ந்த தகவல்களை சிறந்தமுறையில் வெளியிடுதம் தங்களுக்கு என்றும் நன்றிகள். சொல்சரிபார்ப்பை நீக்கி விட்டால் கருத்துரையிடுவதற்கு எளிதாக இருக்கமல்லவா?