Home / Software / MS Windows – 25 years old

MS Windows – 25 years old

எம்.எஸ்.விண்டோஸ் :  வயது  25

கடந்த வாரம் (நவம்பர் 20) தனது 25 ஆவது ஆண்டில் தடம் பதித்தது மைக்ரோஸொப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்கு தளம். முதலாவது பதிப்பான (version) விண்டோஸ் 1 ஐ 1985 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் திகதி முதன் முதலில் வெளியிட்டது மைக்ரோஸொப்ட். நிறுவனம். அதன் பின்னர் த்ற்போதைய விண்டோஸ் செவன் வரை கடந்த 25 ஆண்டுகளில் பல வெற்றிப் படிகளைத் தாண்டி முன்னேறி வந்திருக்கிறது விண்டோஸ்.

விண்டோஸ் இயங்கு தளம (Operating System) தற்போது உலகில் 90 வீத்மான தனி நபர் கணினிகளில் பயன் படுத்தப்படுகிறது. கணினிப் பயன் பாட்டை எவரும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையாக்கியதுடன் ஜன ரஞ்சகப் படுத்த்த்தியது விண்டோஸ். அத்தோடு கணினியோடு தொடர்பு பட்ட அத்தனை தொழில் நுட்பங்களையும் கணினிப் பயனரிடம் இலகுவாய் கொண்டு போய்ச் சேர்க்கிறது விண்டோஸ். ஒரு காலத்தில் படித்த பட்டதாரிகளால் மட்டுமே கணினியில் பணியாற்றலாம் என்றிருந்த நிலையை மாற்றி படிக்காத பாமரர்களையும் கணினியின் பக்கம் ஈர்க்ச் செய்தது விண்டோஸ். இன்று நானும் நீங்களும் அல்லும் பகலும் கணினியோடு ஒட்டி உறவாடுகிறோம் என்றால் அதற்கு விண்டோஸே காரணம் எனலாம். மொத்தத்தில் விண்டொஸின் வருகையானது உல்கின் போக்கையே மாற்றியது என்றால் அது மிகையல்ல.

விண்டோஸ் அறிமுகமாவதற்கு முன்பு மைக்ரொஸொப்ட் நிறுவனத்தின் MS-DOS இயங்கு தளமே பாவனையில் இருந்தது. Command Line Interface எனும் அவ்விடை முகப்பில் கணினியோடு தொடர்பாடுவதற்கும் எந்தப் பணியை நிறை வேற்றுவதற்கும் உரிய கட்டளைகளை நினைவில் வைத்திருந்து கீபோட் மூலம் டைப் செய்ய வேண்டியிருந்தது. இந்த இடை முகப்பு சாதாரண கணினிப் பயனர்களுக்குக் கடினமானதாகவே இருந்தது. ஏனவே அவர்கள் கணினியின் அருகில் செல்வதற்குக் கூட அஞ்சினர்.

எனினும் இதற்கு மாறாக விண்டோஸ் Graphical User Interface (GUI) எனும் அனைத்தையும் கிரபிக்ஸ் மூலமாகக் காட்சிப் படுத்தும் இடை முகப்புடன் வெளி வந்தது. இங்கு கட்டளைகளை டைப் செய்யாமல் மவுஸ் கொண்டு க்ளிக் செய்வதன் மூலம் தெரிவு செய்து கணினியை இயக்கி எமது பணிகளை நிறை வேற்ற முடிகிறது. .இவ்வாறான பணிச் சூழலை User friendly எனப்படுகிறது. இன்று கலவி அறிவு இல்லாதவர்களும், குழந்தைகளும் கூட கணினியில் எந்த சிரமுமின்றிப் பணியாற்றுகிறார்கள் என்றால் அதற்கு இந்த GUI இடை முகப்பே காரணம். எனினும் உலகில் முதம் முதலில் GUI இடை முகப்புடன் வெளி வந்த இயங்கு த்ளம் என விண்டோஸைக் குறிப்பிட முடியாது. ஏனேனில் அதற்கு முதலே Apple Macintosh நிறுவனம் உலகின் முதல் GUI இடை முகப்போடு கூடிய இயங்கு தளத்தை வெளியிட்டிருந்தது.

மைக்ரோஸொப்ட் நிறுவனம் ஆரம்பத்தில் விண்டோஸ் 1 இயங்கு தளத்தை இடை முகப்பு நிர்வாகியென்றே (Interface Manager) பெயரிட்டிருந்தது. இந்த விண்டோஸ் 1 இயங்கு தளம் உலகில் புரட்சிகரமான மாற்றத்திற்கு அடித்தளமாக அமையும் என மைக்ரோஸொப்ட் நிறுவனம் கூட அப்போது எதிர் பார்த்திருந்திருக்காது. .

விண்டோஸ் 1 வெளியிடப் பட்ட உடனேயே அது வரவேற்பைப் பெற்று விடவில்லை.விண்டோஸ் 1 அறிமுகமாகிப் பத்து வருடங்களின் பின்பே அது கணினிப் பயனரிடையே வரவேற்பைப் பெற ஆரம்பித்தது. இன்று நமக்குப் பரிச்சயமான விண்டோஸில் உள்ள Desktop Background, Screen Saver, Shortcuts போன்ற பல அம்சங்கள் 95 பதிப்பிலேயே அறிமுகமாகின, விணடோஸ் 1 லிருந்து விண்டோஸ் 7 வரைக்கும் பயணிக்க மைக்ரோஸொப்ட் நிறுவனத்திற்கு 25 ஆண்டுகள் கடந்துள்ளன. இந்த 25 வருட காலத்தில் விண்டோஸ் படிப்படியான மாற்றங்களுக்குட்பட்டு இன்று இமாலய வளர்ச்சியை எட்டியுள்ளது. இக்காலப் பகுதியில் பல பின்னடைவுகளைச் சந்தித்தாலும் இன்னும் விண்டோஸ் இயங்குதளமே உலகக் கணினிகள் பெரும் பாலானவற்றை ஆக்கிரமித்துள்ளது. எனினும் விண்டோஸின் ஒவ்வொரு பதிப்பும் தனது முத்திரையைப் பதித்துச் சென்றுள்ளது எனக் கூற முடியாது.

1987 ஆம் அண்டு விண்டோஸின் இரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்டது.. விண்டோஸ் 1 ஐ விட மேம்பட்டதாக ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட விண்டோக்களைத் திறக்கக் கூடியதாயும் (multitasking) அதிக கிரபிக்ஸ் மேம்பாட்டுடனும்

அதன் பின்னர் 1990 அம் ஆண்டு வெளியிடப்பட்ட விண்டோஸ் 3 பதிப்புடன் விண்டோஸ் சிறிதளவு பிரபல்யம் பெற ஆரம்பித்தது. அக்கால கட்டத்தில் மேற்குலக நாடுகளில் தனி நபர் கணினிப் பாவனை அதிகரித்த்தும் விண்டோஸின் பிரபல்யத்திற்குக் காரணம் எனலாம். விண்டோஸ் 3 வெற்றியடைந்ததன் பின்னர் அதன் மேம்பட்ட பதிப்புகளான 3.1, 3.11 என்பன அடுத்தடுத்த இரண்டு வருடங்களில் வெளியிடப்படன.

அதன் பின்னர் வணிக நிறுவனங்களை இலக்காக் கொண்டு Windows NT பதிப்பை 1993 ஆம் ஆண்டு வெளியிட்டது. பின்னர் 1995 ஆம் அண்டில் விண்டோஸ் 95 பதிப்பு வெளிவந்தது. . இது விண்டோஸ் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. முதல் இரு வாரங்களிலேயே உலகளவில் விண்டோஸ் 95 பதிப்பு 7 மில்லியன் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. அத்தோடு இணைய பாவனைக்கு ஏற்றதாய் உருவாக்கப்படிருந்தது அதன் சிறப்பம்சமாகும்.

விண்டோஸ் 95 இன் பின்னர் வந்த வெளியீடுகளில் விண்டோஸின் வெற்றிப் பயணம் விண்டோஸ் 98, 2000 என தொடர்ந்தது. 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த விண்டோஸ் 2000 பதிப்பின் பின்னர் அதே ஆண்டில் Windows Millennium Edition எனும் பதிப்பு வெளியானது. எனினும் அதிலிருந்த அதிக வழுக்கள் காரணமாகப் ME பதிப்பு பயனரிடையே வரவேற்பைப் பெறாததால் விண்டோஸ் வரலாற்றில் ஒரு பின்னடைவைச் சந்தித்தது.

அதன் பின்னர் 2001 ஆம் ஆண்டில் விண்டோஸ் எக்ஸ்பீ பதிப்பு வெளியிடப்பட்டது. இது கணினிப் ப்யனரிடையே பலத்த வரவேற்பைப் பெற்றதோடு விண்டோஸ் ME பதிப்பு பெற்றுக் கொடுத்த அவப் பெயரை இல்லாமல் செய்தது. மைக்ரோஸொப்ட் நிறுவனம் இதுவரையில் வெளியிட்டுள்ள விண்டோஸ் பதிப்புகளில் எக்ஸ்பீ பதிப்பே மிகவும் சிறந்த பதிப்பாக இன்றும் போற்றப்படுகிறது, எக்ஸ்பீயின் பின்னர் விஸ்டா , செவன் என மேலும் பதிப்புக்கள் வந்தாலும் எக்ஸ்பீயை இப்போதும் கூட பலரும் பயன் படுத்தி வருவதுடன் புதிய பதிப்புக்கு மாற்வும் தயங்குகிறார்கள்.
எக்ஸ்பி பதிப்பு வெளிவந்து ஐந்து வருடங்க்ளின் பின்னர் விண்டோஸின் விஸ்டா பதிப்பு 2006 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. எனினும் அது எக்ஸ்பீ போன்று பயனரிடையே வரவேற்பைப் பெறவில்லை விஸ்டா கொடுத்த ஏமாற்றத்தின் பின்னர் தனது பெயரைத் தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் வின்டோஸ் செவன். பதிப்பை கடந்த வருடம் இறுதிப் பகுதியில் வெளியிடட்டது. இது எக்ஸ்பீ போன்றே சிறப்பாக செயற்படுவதுடன் ஏராளமன புதிய சிறப்பம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

இதனிடையே சேர்வர்களுக்கான விண்டோஸ் பதிப்பையும் மைக்ரோ ஸொப்ட் அவ்வப்போது வெளியிட்டு வந்துள்ளது. விண்டோஸ் சேர்வர் பதிப்பு உலகில் 70 வீதமன சேர்வர்களிலும் நிறுவப்பட்டுள்ளது
விண்டோஸ் செவன் பதிப்பிற்குப் பின்னர் வின்டோஸ் 8 பதிப்பை அடுத்த வ்ருடம் வெளியிடுவதற்கான முயற்சியில் மும்முரமாய் ஈடு பட்டிருக்கிறது மைக்ரோ ஸொப்ட்.
விண்டோஸுக்குப் போட்டியாக மேக், லினக்ஸ் என பல இயங்கு த:ளங்கள் உருவெடுத்தாலும் கால் நூற்றான்டு காலமாய் விண்டோஸ் வெற்றிப் பாதையில் பயணிக்கிறது..

-அனூப்-

About Imthiyas Anoof

Check Also

Steps Recorder-Windows 10

Steps Recorder-Windows 10 விண்டோஸ் 10 இல்  ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் என்பது உங்கள் கம்பியூட்டரில் …

2 comments

  1. pleas teal me Mack (apple) system
    history

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *