Home / What is..? / NFC என்றால் என்ன?
nfc2

NFC என்றால் என்ன?

NFC என்பதுகுறுகிய தூர பயன்பாட்டிற்கான கம்பியில்லா தொடர்பாடல் (வயர்லெஸ்) தொழில் நுட்பமாகும்.  Near Field Communication என்பதன் சுருக்கமே NFC. தமிழில் இதனை “அருகாமைப் புல் தொடர்பாடல்” எனலாம். இது மின்னணு சாதனங்களுக்கிடையே எளிய மற்றும் பாதுகாப்பான தகவல் தொடர்பாடலை வழங்குகிறது. இதனை ப்லூடூத் போன்ற பிறவ யர்லெஸ் தொழில் நுட்பங்களுடனோஅல்லது இதேபோன்ற NFC தொழிநுட்பம்  உட்பதிந்த பிறசாதனங்களுடனோ  இணைத்துப்  பயன்படுத்தமுடியும்.

nfc2NFC இன் தொடர்பாடல் வீச்சு சுமார் 10 சென்டிமீட்டர் தூரம் ஆகும். இருப்பினும், ஒரு அண்டெனாவை பயன் படுத்தி 20 சென்டிமீட்டர் தூரம்  வரை நீடிக்க இயலும். இந்தகுறுகிய எல்லை என்பது வேண்டுமென்றே தீர்மானிக்கப்பட்டவிடயம்தான்.  ஏனெனில்  இதன் மூலம். மிக அருகாமையிலுள்ள  இரண்டு சாதனங்களுக்கிடையே மாத்திரம்  ஒன்றோடொன்று பாதுகாப்பாகத்  தொடர்பு கொள்ள முடிகிறது.   இதன் காரணமாக பணபரிவர்த்தனைகளுக்கும் NFC ஐ பொருத்தமான ஒரு தொழில் நுட்பமாகக் கருதப்படுகிறது.

NFC Tags 2 1பணம் செலுத்தும் கவுண்டர்களில் பணத்தையோ கடனட்டைகளையோ தொடாமலேயே பணத்தை செலுத்தக் கூடிய வசதியை NFC தருகிறது. உங்கள் ஸ்மார்ட்ஃபோன் அல்லது ஸ்மார்ட்வாட்ச் NFC ஐ ஆதரிக்குமாக இருந்தால் Apple Pay, Android Pay போன்ற தொடுகையற்ற கட்டணம் செலுத்தும் (contactless payment) தெரிவுகளைசெயற்படுத்தமுடியும். உங்கள் கிரெடிட் கார்ட் விவரங்களையு Apple Pay, Android Pay போன்ற மொபைல்-பே (mobile pay) செயலிகளோடு இணைத்தபிறகு,NFC செயல்படுத்தப்பட்ட பணம் செலுத்தும்  இயந்திரத்தின் அருகே உங்கள் ஸ்மாட் ஃபோனை வைப்பதன் மூலம்  இலகுவாகபணத்தைச் செலுத்தலாம்.

மேலேகுறிப்பிட்டது NFC தொழில் நுட்பபயன்பாட்டிற்கான ஒரு உதாராணம் மட்டுமே.

எனினும் என்எப்சி தொழில் நுட்பத்தில் பல் வேறு பயன்பாடுகள் உள்ளன. அவற்றிற்கான சில உதாரணங்கள் கீழேதரப்படுகின்றன.

  • பஸ் அல்லதுரயில் போன்றபொதுபோக்குவரத்தில் கட்டணம் செலுத்துதல்
  • ஒரு கச்சேரிஅல்லதுவிளையாட்டுநிகழ்வில் உங்கள் அனுமதிபத்திரத்தை (டிக்கட்டை) உறுதிப்படுத்துதல்
  • நீங்கள் ஒரு கடையில் நுழையும்போதேஉங்கள் தொலைபேசியில் அக்கடையில் வழங்கப்படும் சிறப்புசலுகையைப் பார்க்கும் வசதி
  • ஒரு தேசியபூங்காவில் நுழையும் போதுஅதன் வரைபடம் மற்றும் தொடர்புடையதகவலைப் பார்க்கும் வசதி.
  • ஒரு உணவகத்தில் உள்ளஉனவுப் பட்டியலை (மெனு) காண்பித்தல்
  • கதவில் பொருத்தியுள்ளNFC- செயற்படுத்தப்பட்டபூட்டைதிறத்தல் மூடுதல் எனNFC பயன் பாட்டினைநீண்டபட்டியலிடமுடியும்.

NFCதொழில் நுட்பத்தைமேற்குறித்தவணிகவணிகநோக்கிலானதேவைகளுக்குமத்திரமன்றிஎமதுஅன்றாடதேவைகளுக்கும் கூட பயன் படுத்தலாம்.

nfc4மேலும் NFCtags எனும் NFC Chip பதித்த ஸ்டிக்கர்களும் பயன் பாட்டில் உள்ளன. அவற்றில் நாம் விரும்பும் கட்டளைக் குறியீடுகளைஅதற்கெனஉருவாக்கப்படுள்ளசெயலிகள் மூலம் முன் கூட்டியே பதிவுசெய்து எந்தவொரு NFC வசதியுள்ள கருவியினாலும் வாசித்தரியமுடியும். உதாரணமாக ஒரு இணையதளமுகவரியை என்.எப்.சிடேகில் பதிவுசெய்துவைத்துஅந்தடேகைஎன்.எப்.சிசெயற்படுத்தியகருவியினருகேகொண்டுசெல்லும் போதுகுறித்த இணையதளத்தை அதன் முகவரியை பிரவுசரில் டைப் செய்யாமலேயே பார்வையிடமுடியும்.

NFC தொழில் நுட்பத்தைபெரும்பாலும் QR குறியீடுகளுக்குமாற்றீடாகக் கருதப்படுகிறது.  NFCமற்றும் QR இரு தொழில்நுட்பங்களும்  குறுகிய-வரம்புசெயற்பாடுகளுக்காகவேவடிவமைக்கப்பட்டுள்ளன. QR தொழில் நுட்பத்தில்  உங்கள் ஸ்மாட் கருவி மூலம் சதுரவடிவிலுள்ளகுறியீட்டை ஸ்கேனிங் செய்யவேண்டும். மேலும்QRகுறியீடு ஸ்கேனிங்கிற்கு ஒரு கேமராதேவைப்படுகிறது. அதேநேரத்தில் NFCதகவல்தொடர்புக்குNFC Chip தேவைப்படுகிறது. எனினும்,உங்கள் சாதனத்துடன் எதையும் கைமுறையாக ஸ்கேன் செய்யவேண்டிய அவசியம் இல்லைஎன்பதால் NFC தொடர்பு QR ஐ விடஎளிமையாகஉள்ளது. மேலும் என்.எஃப்.சி. இரு வழி (duplex) தொடர்பாடலைவழங்குகிறது,அதேசமயம் QRகுறியீடு ஸ்கேனிங் என்பதுஒற்றை வழி (Simplex) தகவல் பரிமாற்றமாகும்.

உங்கள் ஸ்மாட் ஃபோனில் NFC தொழில் நுட்பம் இருக்குமாயின் ஃபோனின் பின்புறம் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரில் அதுபற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கும் அல்லதுஅந்த ஃபோன் மாடலின் விவரக் கூற்றிலிருந்து (specifications) தெரிந்துகொள்ளமுடியும். எனினும் தற்போதுவெளியாகும் அனைத்து ஸ்மாட் ஃபோன்களிலும் NFCதொழில் நுட்பம் இணைக்கப்படிருக்கும் என்பதைஉறுதியாகக் கூற முடியாது. அண்ட்ராயிட் கருவிகளில் என்எப்சி வசதிஉள்ளதா என்பதை settings > Connections > More connections settings இல் தட்டுவதன் மூலம் அறிந்துகொள்ளமுடியும்.

About admin

Check Also

cap1

What is CAPTCHA?

What is CAPTCHA? இணையம் தளங்களைப் பார்வையிடும்போது நாம் அடிக்கடி  காண்பவறறில்; விடயங்களில் கேப்ச்சா (CAPTCHA)  சோதனையும் அடங்கும். ஒரு ஆன்லைன் கணக்கை உருவாக்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

கொப்பி பண்ணாதீங்கய்யா, சுயமா எழுதுங்க!