OnlineVNC
OnlineVNC என்பது தொலைவிலிருந்து ஒரு கணினியை நிர்வகிக்கவும் கட்டுப் படுத்தவும் என உருவாக்கப் பட்டுள்ள ஒரு மென்பொருள் கருவியாகும். இது போன்ற பல கருவிகள் பயன் பாட்டிலிருந்தாலும் ஒரு வெப் பிரவுசரைப் பயன் படுத்தி தொலைவிலுள்ள கணினியை அணுக முடியும் என்பதில் OnlineVNC மாறு பட்டு நிற்கிறது. மேலும் ஒரு கணினியை Offline இல் இயக்குவது போன்றே மிக வேகமாக ஒன்லைனில் இயங்குவது இதன் தனித்துவமான அம்சமாகும்.
அனறாட கணினிப் பாவனையின் போது ஏற்படும் சிக்கல்களைத் தொலைவிலிருந்தே தீர்ப்பதற்கான் ஒரு சிறந்த கருவி என OnlineVNC ஐக் குறிப்பிடலாம். உங்கள் கணினியில் ஏற்படும் சிக்கலைத் தீர்க்க தொலைவிலுள்ள நண்பரின் உதவி தேவைப் படுமிடத்து அவருக்கு மின்னஞ்சலில் உங்கள் கணினிக்கான ஒரு லின்க்கை அனுப்பி விட்டால் போதுமானது. அவர் வேறு எந்த மென்பொருளும் நிறுவாமலேயே அந்த லின்க்கில் க்ளிக் செய்து பிரவுஸர் மூலம் உங்கள் கணினியின் டெஸ்க்டொப்பைக் அணுக முடியும்.
மேலும் உங்கள் கணினியில் OnlineVNC மென்பொருளை நிறுவி சீரமைத்த பின்னர் கணினி இயக்கத்திலிருக்கும் போது உங்கள் கணினியிலுள்ள பைல் மற்றும் போல்டர்களை பயனர் கணக்கொன்றினுள் லொகின் செய்யாமலேயே அக் கணினியை அணுகக் கூடிய வசதியையும் தருகிறது.
லினக்ஸ் மேக் போன்ற விண்டோஸ் அல்லாத இயங்கு தளம் நிறுவப் பட்ட கணினிகளிலிருந்தும் விண்டோஸ் கணினியை அணுகக் கூடியதாயிருப்பது OnlineVNC மென்பொருளின் மற்றுமொரு சிறப்பம் சமாகும். 14.6 எம்.பீ பைல் அளவு கொண்ட இதனை www.onlinevnc.com எனும் இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்யலாம்.
-அனூப்-
-அனூப்-