Home / GIT Online Exam / Output Devices-வருவிளைவுச் சாதனங்கள்

Output Devices-வருவிளைவுச் சாதனங்கள்

கணினிக்கு உள்ளீடு செய்யப்பட்ட தரவுகளை செயற்பாட்டுக்கு உட்படுத்தி வெளியீடாக (வருவிளைவாக) பயனருக்கு வழங்கப் பயன்படும் சாதனங்களை வருவிளைவுச் (வெளியீட்டு) / சாதனங்கள் எனப்படும். 

கணினித் திரை  (Monitor / Screen)

எவ்வகைக் கணினியிலும் காணக்கூடிய பிரபல்யமானயமான ஒரு வெளியீட்டுக் கருவி கணினித் திரையாகும். இது மென் பிரதியாக (soft copy) தகவலை வெளியிடுகிறது. இதனை கட்புலக் காட்சி அலகு  (Visual Display Unit)  எனவும் அழைக்கப்படும்.  கணினித் திரையில் பல வகைகள் உள்ளன. அவையாவன

கதோட்டுக் கதிர்க் குழாயுடன் கூடிய திரை (Cathode Ray Tube (CRT) Monitor கணினியின் தொடக்க காலத்திலிருந்து இன்று வரை வெளியீட்டு உத்தியாகப் பயன்படுத்தப்படும் இவ்வகைத் திரை அளவில் பெரியதாக இருக்கும் அதேவேளை அதிக அளவு மின்சக்திய நுகர்கின்றது. கணினித்திரையில் வெவ்வேறு தொழிற்நுட்பங்களின் வருகையின் காரணமாக தற்போது  இது படிப்படியாகப் பயன்பாட்டிலிருந்து நீங்குகின்றது.

திரவப் படிகக் காட்சி  Liquid Crystal Display – LCD

சமதளக் காட்சித்  (flat bed)  தொழினுட்பத்துடன் கூடிய இக்கணினித்திரை இரு வளைதகு (flexible) முனைவாக்கிய (polarized) iru மின்வாய்களுக்கிடையே ஒரு பளிங்குக் கரைசலைச் (liquid crystal) சேர்த்து இது உருவாக்கப்படுகிறது.  குறைந்தளவு மின் சக்தியை நுகர்வது மற்றும்  மேசைமீது இதனை வைக்க அதிக இடம் அவசியமில்லை.என்பன அணுகூலங்களாகும்.  This is a flat screen type technology. LCD displays utilize two sheets of polarizing material with a liquid crystal solution between them. LED consumes less electricity.

ஒளிகாலும் இருவாயி  – Light Emitting Diode – LED

ஒளி காலும் இருவாயியைப்  (Light Emitting Diode) பயன் படுத்தி உருவாக்கப்படுகின்றன.
 குறைந்த அளவு மின்சக்தியை  நுகர்கிறது. பொது இடங்களில் காட்சிப் பலகைகள், பெயர்ப்பலகைகள் போன்றவற்றில் தற்போது   LED தொழில் நுட்பமே பயன்படுகிறது.

பல்லூடக எறிவை (Multimedia Projector)

ஒரே நேரத்தில்  பல பேர்  பார்க்கக் கூடியவாறு பெரிய திரையில் காட்சியைப் பெற பல்லூடக எறிவை பயன் படுகிறது. பாடசாலைகளில் கற்பித்தல் கருவியாகவும் வணிக நிறுவனங்களில் பல்வேறு  கூட்டங்களை நடத்துவதற்கும் நிகழ்த்துகைகளைக் (presentation) காண்பிப்பதற்கும் வீடியோ காட்சிகளைக்  காண்பிப்பதற்கும்  பயன்படுத்தப்படுகிறது.  This is the device used to get information output to a wide screen so that several people can view it at the same time. This can be used as a visual aid by a teacher to display presentations, to conduct business meetings or to watch videos for entertainment.

வன்பிரதி  (Hard Copy)

காகிதத்தில் அச்சிடப்பட்ட ஆவணங்களை வன் பிரதி எனப்படுகிறது. தொட்டுணரக்கூடிய கணினி வெளியீடாக வன்பிரதியைக் குறிப்பிடலாம்.

அச்சுப் பொறி   – Printers

திரையில் தோன்றும் தகவல்களை காகிதத்தில் பொறிப்பதே அச்சுப்பொறியின் தொழிலாகும். தெரிவு செய்யப்படும் அச்சுப்பொறியினைப் பொருத்தே காகிதத்தில் வருவிளைவின் தரம் காணப்படும்

அச்சுப்பொறிகள் அழுத்தும் அச்சுப் பொறி (impact printers), அழுத்தா அச்சுப் பொறி (non-impact printers)   என இரு வகைப்படும்.

அழுத்தும் அச்சுப் பொறி (Impact Printers)

அச்சிடும் தொழினுட்த்தில் அழுத்தச்சுப் பொறிகள் முதன்மை வரிசைக்கு உரியனவாகும். இங்கு பொறிமுறை உத்தியானது அச்சிடும் தலை (printer head) எனப்படும் பகுதி தாளின் மீது மோதுவதினூடாக அச்சிடல் நடைபெறுகின்றது. இவ்வழுத்தம் காரணமாக அது தொழிற்படும்போது இரைச்சல் ஏற்படுகிறது.  அச்சிட பயன்படுத்தப்படும் மை நாடா (ink ribbon cartridge) விலை மலிவனதால் மிகவும் இலாபகரமானதாகும்.  வங்கிகள், கடைகள் போன்ற இடங்களில் இவை பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.

  1. Daisy Wheel printer
  2. Dot matrix printers
  3. Line printer
  4. Plotter

அழுத்தா அச்சுப்பொறி  (Non Impact Printers)  

இவ்வச்சுப்பொறி பயன்படுத்தப்படும் தாளின் மீது அழுத்துவதில்லை. ஆகையால், இவற்றில் இரைச்சல் ஏற்படுவதில்லை. அச்சுப் பிரதிகள் மிகத் தெளிவாகக் காணப்படும். எனினும், இதற்குப் பயன்படுத்தப்படும் ஊடகம் விலைகூடியது ஆகையால், இதனைப் பயன்படுத்தல் இலாபகரமானதன்று.

  1. Inkjet printers / Bubble jet Printer
  2. Laser printers                          

Daisy Wheel printer

ஆரம்ப கால அச்சுப் பொறிகளில் ஒன்று. தட்டச்சுப் பொறி (type writer) போன்றது.  ஒரு வினாடியில் 25-55 characters per second எழுத்துக்கள் என மிக மெதுவாக அச்சிடும் இவ்வச்சுப் பொறி தற்போது பயன் பாட்டிலில்லை.

Don matrix printers

அச்சுப் பொறியின் தலைப் பகுதியிலுள்ள  ஊசி போன்ற முனைகள் மை தோய்க்கப் பட்ட நாடாவில் மோதுகின்றமையால் சிறிய புள்ளிகளாக தாளின் மீது எழுத்துகளை அச்சிடுகின்றன. அச்சிடுவதற்கு Ribbon cartridge எனும் நாடா பயன் படுத்தப்படுகிறது.

பிற அச்சுப் பொறி;களுடன் ஒப்பிடும் போது இதன் அச்சிடும் வேகம் மிக குறைவானது. இதன் மூலம்; படங்களை துல்லியமாக அச்சிட முடியாததுடன்  அச்சுத் தரமும்; குறைந்தது. ஒரு வினாடியில் 100-600 (உhயசயஉவநசள pநச ளநஉழனெ) எழுத்துக்களை அச்சிடக் கூடியது.

வரி அச்சுப்பொறி (Line Printer)

ஒரு தடவை ஒரு வரி வீதம் அச்சிடும் இப்பொறி

மிகவும் விரைவான அச்சுப்பொறியாகும். இது ஒரு நிமிடத்திற்கு ஏறத்தாழ 3000 வரிகளை அச்சிடத்தக்கது. வணிக நிறுவனங்களில் பாரிய அளவிலான அச்சிடும் தேவைகளுக்கு இது பயன் படுகிறது. 

மைப் பீச்சு அச்சுப் பொறி  Inkjet printers / Bubblejet Printer

Buy Canon Inkjet Printer - PIXMA MG2570S Online in Sri Lanka - SINGER

இவ்வகைப் பிரின்டா; மையை வெப்ப மேற்றுவதன் மூலம்  குமிழிகளை உருவாக்கி எழுத்தாக தெழியச் செய்கிறது. இங்கு அச்சிடுவதற்கு ink cartridge  பயன் படுத்தப்படுகிறது.விலை குறைந்த இவ்வச்சுப் பொறி மூலம்; உயர் தரத்தில் எழுத்துக்களையும் வரைபுகளையும் அச்சிட முடியும். இவை வண்ணத்திலும் அச்சிடக் கூடியது.  மேலும் இவை டொட் மேட்ரிக்ஸ் பிரின்டா;களை விடவும் வேகமானது.. ஒரு வினாடியில் 250  (உhயசயஉவநசள pநச ளநஉழனெ) எழுத்துக்களை அச்சிடக் கூடியது. இதற்கு பயன்படுத்தப்படும் மை விலை அதிகம் என்பதால் அச்சிடுவதற்கான செலவும் அதிகமாகும்.

.லேசர் அச்சுப் பொறி Laser printers

லேசர் அச்சுப்பொறியில் அச்சிடப்பட வேண்டிய பகுதி ஒரு லேசர்க் கற்றையின் மூலம் (ஓர் ஆடியினூடாக) ஓர் ஏற்றிய உருளை (Drum) மீது அனுப்பப்படுவதும் அதன் மீது ஒரு பொறியுறையில் (Cartridge)) உள்ள உலர் மைப்பொடி (Toner) தொடுகையுறுவதனூடாக அச்சிடப்படுதலும் நடைபெறுகின்றன. ஒரு நிமிடத்திற்கு 10 முதல் 20 வரையிலான A4 அளவு தாள்களை அச்சிடுகின்றன.  XU Toner Cartridge  %yk; A4 காகித அலவில் 2000 – 3000 gpujpfis vLf;fyhk.; உயர் தரத்திலான தெளிவான எழுத்துக்களையும் உருக்களையும் அச்சிடுவதற்கு மிகவும் உகந்த சாதனம் லேசர் அச்சுப்பொறியாகும்

வெப்ப அச்சுப்பொறி (Thermal Printer) 

இந்த அச்சுப்பொறியில் வெப்பத்தைப் பயன்ப டுத்தித் தாளின் மீது அச்சிடல் நடைபெறுகின்றது. தன்னியக்கக் காசளிப்புப் பொறி  (ATM) போன்றவற்றில் பற்றுச்சீட்டுகளை அச்சிட்டு வழங்க இது அதிக அளவில் பயன்படுத்தப்படு கின்றது.

வரைவி (Plotter)

கட்டடக் வடிவமைப்புகள், நகரத் திட்டமிடல்கள், கப்பற் பயணத் திட்டங்கள் போன்ற பொறியியல் சார்ந்த வரை படங்களை பெரியளவில் அச்சிட வரைவிகள் பயன்படுத்தப்படுகின்றன.  இங்கு தாளின் மீது ஒரு பேனாவை நகர்த்தி அச்சிடல் நடை பெறுகிறது.  

Audio Output Devices


Speakers

Blaupunkt BLP 3030 TWS Bluetooth Speaker Set - 2x 3W


Headphones / Headsets

Headsets | Dell Shop Sri Lanka

About admin

Check Also

Grade 11 ICT 2021/22 (NWP) HTML

DOWNLOAD THE SOURCE FILES

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *