கணினியில் பலரும் அடிக்கடி பயன்படுத்தும் இரண்டு கட்டளைகளே கொப்பி – பேஸ்ட். சரி.. Paste Special அறிவீர்களா? Paste Special என்பது Word, Excel போன்ற பயன் பாட்டு மென்பொருள்களிலுள்ள ஒரு விசேட கருவியாகும். இந்த வசதி மூலம் வேறொரு ஆவணத்திலிருந்து அல்லது பிரவுசரிலிருந்து பிரதி செய்யப்படும் டெக்ஸ்ட் பகுதியை வழமையான பேஸ்ட் கட்டளையை விட அதிக கட்டுப்பாடுகளுடன் பயன் படுத்திக் கொள்ளலாம். .
எடுத்துக் காட்டாக, ஒரு இணைய பக்கத்திலிருந்து பிரதி செய்யப்படும் டெக்ஸ்ட் பகுதியை வழமையான் பேஸ்ட் பட்டன் கொண்டு பிரதி செய்யும்போது HTML எழுத்து சீரமைப்புடன் (text formatting) காண்பிக்கும். அதாவது அந்த டெக்ஸ்ட் பகுதியிலிருக்கும் எழுத்துரு, நிறம், ரேடியோ பட்டன் மற்றும் ஹைபலிங்க் போன்ற எழுத்துச் சீரமைபுகளுடன் பிரதி செய்யப்படும். சில நேரங்களில் அந்த சீரமைப்பு எமது தேவைக்குப் பொருத்தமில்லாமல் இருக்கும் எனினும் விசேட பேஸ்ட் வசதியைப் (பேஸ்ட் ஸ்பெஸல்) வசதியைப் பயன் படுத்தும் போது இது போன்ற அவசியமற்ற போமடிங்கை தவிர்க்கலாம். அது மட்டுமன்றி எக்ஸல் போன்ற மென்பொருளில் பேஸ்ட் செய்யும் பொது சமன்பாடுகளைப் பிரதி செய்து கணித்தல்களையும் பெறலாம்.
மைக்ரோஸொப்ட் ஒபிஸ் தொகுப்பின் புதிய பதிப்புகளில் ஹோம் டேபின் கீழ் க்லிப்போட் எனும் பகுதியில் பேஸ்ட் பட்டன் காணப்படும். அதனோடு கீழிருக்கும் அம்புக் குறியில் க்ளிக் செய்யும்போது பேஸ்ட் ஸ்பெஸல் எனும் தெரிவைக் காணலாம். அதன் மீது க்ளிக் செய்யும் போது ஒரு டயலொக் பொக்ஸ் தோன்றும். பிரதி செய்யப்பட வேண்டிய டெக்ஸ்ட் பகுதியை எழுத்துச் சீராக்களுடன் பிரதி செய்ய வேண்டிய அவசிய மில்லை எனின் இங்கு Unformatted text என்பதைத் தெரிவு செய்ய வேண்டும்.. இது போல் இன்னும் பல தெரிவுகள் அங்கிருப்பதைக் காணலாம். அவற்றை உங்கள் தேவைக்கேற்ப பயன் படுத்திக் கொள்ள முடியும்.