Task Bar Magnifier, Power Calculator, Image Resizer என மொத்தம் 14 பவடோய்ஸ் யூட்டிலிட்டிகள் இது வரை விண்டோஸ் எக்ஸ்பீ இயங்கு தளத்திற்கென வெளியிடப்பட் டுள்ளன. இவற்றுல் இமேஜ் ரீஸைசர் என்பது மிகவும் பயனுள்ள ஒரு யூட்டிலிட்டி. இதன் மூலம் கணினியிலுள்ள ஒளிப்படங்களின் அளவை இலகுவாக மாற்றிக் கொள்ள முடிவதோடு அவற்றின் பைல் அளவையும் (file size) கணிசமாகக் குறைத்துக் கொள்ள முடிகிறது.
இமேஜ் ரீஸைசர் மென்பொருள் கருவியை நிறுவியதும், கணினியிலுள்ள ஒரு படத்தின் (image file) மேல் ரைட் க்ளிக் செய்யும் போது வரும் கன்டெக்ஸ்ட் மெனுவில் Re-size Pictures எனும் கட்டளை தோன்றும். அதன் மேல் க்ளிக் செய்ய ஒரு டயலொக் பொக்ஸ் தோன்றும். அங்கு உங்கள் படத்தை மாற்ற வேண்டிய அளவைத் தெரிவு செய்து ஓகே சொல்ல அடுத்த கணமே அந்தப் படம் அதே போல்டருக்குள் சேர்க்கப்பட்டுவிடும்.
கொள்பவர்களுக்கு இது மிகவும் உபயோகமான ஒரு யூட்டிலிட்டி. 521 கேபீ அளவுள்ள இதனை மைக்ரோஸொப்டின் இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
-அனூப்-