Home / General / Raster Graphic,  Vector Graphic என்னவேறுபாடு?

Raster Graphic,  Vector Graphic என்னவேறுபாடு?

கணினித் திரையில் பார்க்கும் பெரும்பாலானபடங்கள் ராஸ்டெர் கிரேஃபிக்ஸ் (Raster Graphic – பரவல் வரைபு)  வகையைச் சார்ந்தவையாகும். டிஜிட்டல் கேமராவினல் எடுக்கப்பட்டபடங்கள் இணையதளங்களில் பார்க்கும் படங்கள்  மற்றும் தரவிறக்கம்  செய்யும்  படங்களும் ராஸ்டெர் கிரேஃபிக்ஸ் ஆகும்.  ராஸ்டர் கிரேஃபிக்ஸ் படங்கள் (பிக்சல்களின் – Pixels) பட மூலங்களின் கட்டங்களால் உருவாக்கப்படுகின்றன.

இவை பொதுவாகபிட்மேப் (bitmap) படங்கள்  எனவும் அழைக்கப்படுவதுண்டு.  ரஸ்டர்கிரேஃபிக்ஸ் படத்தின் அளவுபெரிதாகும் போதுஅதிக  இடத்தையும் அதுபிடித்துக் கொள்ளும்.

உதாரணமாக,ஒரு 640 X 480 பிக்ஸல் அளவுகொண்டஒருபடத்தில் 307,200 பிக்சல்களுக்கானதரவுகள் சேமிக்கப்படவேண்டும் அதேபோன்று 3072 X 2048 படத்தில்  6,291,456 பிக்சல்களின் தரவுகள்  தகவல்களைசேமிக்கப்படவேண்டும்.

 ராஸ்டெர்கிரேஃபிக்ஸ் அதிகளவுதகவல்களைசேமிக்கவேண்டும் என்பதால்,பெரிய பிட்மாப் படங்கள் பெரிய கோப்புஅளவுகள் கொண்டவையாக இருக்கும். எனினும் அதிர்ஷ்டவசமாக, இந்த கோப்பு அளவுகளைக்  குறைக்க உதவும் பல பட சுருக்கநெறிமுறைகள் ((image compression algorithm உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றுள்  JPEG மற்றும் GIF போன்றவை பொதுவான சுருக்கப்பட்ட படவகைகளாக இருக்கின்றன

ராஸ்டர்கிரேஃபிக்ஸ் படங்களைத்  தர இழப்பு இல்லாமல் அளவினைக்  குறைக்கலாம் ஆனால் படத்தைபெரிதாக்கும் போது அதன் தரம் குறைந்துவிடுகிறது. இந்தநிலையை ”பிக்ஸலேட் – Pix-elate” எனஅழைக்கப்படும்.

நிறுவன இலட்சினை (logo -லோகோ) போன்ற படங்களை பல்வேறு அளவுகளில் எடுக்க வேண்டிய தேவை ஏற்படும் போது ராஸ்டர் கிரேஃபிக்ஸ் படங்களை விட வெக்டர் கிரேபிக் படங்களே அதிகம் விரும்பப் படுகின்றன.  வெக்டர் கிரேபிக் (vector Graphic – நெறியவரைபு)  என்பது JPEG, GIF படங்கள் போன்று பிக்சல்களின் கட்டத்தினால் உருவாக்கப்படுவதில்லை.  மாறாக,வெக்டர்கிரேஃபிக்ஸ் பாதைகளைக் (paths)  கொண்டிருக்கும்,  இது ஆரம்பப்புள்ளி,  இறுதிபுள்ளி,மற்றும். வளைவுகள் கோணங்களினால் இணைத்துவரையறுக்கப்படுகின்றது.

ஒருபாதை என்பது ஒரு கோடாக, சதுரமாக, முக்கோணமாகஅல்லது ஒரு வளைந்த வடிவமாக இருக்கலாம்.  இப்பாதைகளைப் பயன் படுத்தி எளிமையான ஒருபடத்தையோ அல்லது சிக்கலான ஒருபடத்தையோ உருவாக்க முடியும்.

வெக்டர் கிரேஃபிக்ஸ் படங்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புள்ளிகளினால் உருவாக்கப்படவில்லை என்பதால் தர இழப்பு இல்லாமலேயே அதனைபெரிதாக்கமுடியும்.

ஒரு வெக்டர் கிரேஃபிக்கினைப் பெரிதாக்கும் போது,​​ அப்படத்திலுள்ள சிறுவிளிம்புகளும் கூட பார்வைக்குத்  தெளிவாகத் தோன்றும்.  இதன் காரணமாக லோகோ போன்ற கிரேஃபிக்ஸ் படங்களைஉருவாக்க வெக்டர் கிரேஃபிக்ஸ் சிறந்தத் தேர்வாகஅமைகிறது.

வெக்டர்கிரேஃபிக்ஸ் படங்களைஉருவாக்ககோரல் ட்ரோ,அடோபி இல்லஸ்ட்ரேட்டர்,மேக்ரோமீடியா ஃப்ரீஹேண்ட்  போன்ற மென்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.

About admin

Check Also

Steps Recorder-Windows 10

Steps Recorder-Windows 10 விண்டோஸ் 10 இல்  ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் என்பது உங்கள் கம்பியூட்டரில் …

Leave a Reply