Home / General / Run Commands

Run Commands

ரன் கமாண்ட்

விண்டோஸ் இயக்கச் சூழலில் ஸ்டாட் மெனுவில் உள்ள ரன் கமாண்டை அறிந்திருப்பீர்கள். இதன் மூலம் கணினியில் நிறுவியுள்ள ஒரு ப்ரோக்ரமை திறந்து கொள்ளலாம். எப்லிகேசன் ப்ரோக்ரமை பல வழிகளில் திறக்க முடிந்தாலும் ரன் கமாண்ட் மூலம் இலகுவாகவும், விரைவாகவும் திறந்து பணியாற்றலாம். 

ப்ரோக்ரம்ஸ் லிஸ்டில் அல்லது டெஸ்க் டொப்பில் இல்லாத ஒரு ப்ரோக்ரமை திறக்கவும் ரன் கமாண்ட் உதவுகிறது. ப்ரோக்ரம் மட்டுமன்றி ஒரு போல்டரை அல்லது பைலையும் கூட ரன் கமாண்ட் மூலம் திறந்து கொள்ளலாம். ஒரு கணினி வலையமைப்பில் இணைந்திருந்தால் வலையமைப்பிலுள்ள ஏனைய கணினிகளை அணுகுவதோடு இணையத்தில் இணைந்திருந்தால் இனையதள முகவரிகளைக் கூட டைப் செய்து ரன் கமாண்ட் மூலம் அத்தளங்களை அடையலாம். டெஸ்க்டொப் short cut மூலமாகவும் இலகுவாக எப்லிகேசன்களைத் திறக்க முடிந்தாலும் அனைத்து ப்ரோக்ரம்களுக்கும் டெஸ்க்டொப்பில் short cut உருவாக்கி விட்டால் டெஸ்க்டொப், ஐக்கன் வனமாக மாறிவிடும். அதனால் டெஸ்க்டொப் short cut ஐ விடவும் ரன் கமாண்ட் ஒரு எப்லிகேசனைத் திறப்பதற்கான சிறந்த வழி எனலாம்.

ஒரு ப்ரோக்ரமை போல்டரை அல்லது பைலை ரன் கமாண்ட் மூலம் திறப்பதானால் open பொக்ஸில் அதன் அமைவிடத்துக்குரிய வழியை Browse பட்டனில் க்ளிக் செய்து காட்டி ஓகே சொல்லிவிட்டால் போதும்.

அதேபோல் அண்மையில் திறந்து பார்த்த ப்ரோக்ரம் மற்றும் பைல்களை ரன் டயலொக் பொக்ஸில் open எனுமிடத்தில் பட்டியலிடும். அதிலிருந்து தேவையான ப்ரோக்ரமை தெரிவு செய்து அல்லது புதிதாக பெயரை டைப் செய்து திறக்கலாம்.

ஆனால் சில எப்லிகேசன்களை முழுமையான (path)பாதையைக் காட்டாமல் அதன் பெயரை மட்டும் டைப் செய்தும் திறக்கலாம். Path environment க்குள் அடங்கும் எப்லிகேசன்களையே இவ்வாறு திறக்கலாம். பாத் சூழல் எனப்படுவது கணினியிருக்கும் குறிப்பிட்ட சில போல்டர்களையே குறிக்கிறது. இந்த போல்டர்களுக்குள் இருக்கும் பைல்களைத் திறக்க Path ஐ குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. Windows மற்றும் Windows system32 போல்டர்கள் பாத் என்வயரன்மென்ட் போல்டர்களுள் அடங்கும். இந்த போல்டர்களுக்குள் இருக்கும் எப்லிகேசன், எக்ஸசரீஸ் மற்றும் எப்லட்ஸ் போன்றவற்றை அதன் .exe பைல் பெயரை மட்டும் ரன் டயலொக் பொக்ஸில் டைப் செய்து திறக்கலாம். regedit, msconfig என்பவற்றை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். இவற்றை Start- All Programs மூலம் திறந்து கொள்ள முடியாது. ரன் டயலொக் பொக்ஸ் மூலம் மட்டுமே இது போன்ற எப்லிகேசன்களைத் திறக்க முடியும்.

பாத் என்வயரன்மென்டுக்குள் இல்லாத பைல்களைத் திறப்பதானால் அவற்றின் முழுமையான பாதையை காட்டிக் கொடுப்பதனால் மட்டுமே திறக்கலாம். நீளமான பாத்தாக இருந்தால் அதனைப் டைப் செய்யாம லேயே Browse பட்டனில் க்ளிக் செய்து உரிய பைலைக் காட்டி விடலாம். அடிக்கடி பயன்படுத்தும் எப்லிகேசனை பாத் என்வயரன் மென்டில் சேர்த்து விடுவது நல்லது. ரன் டயலொக் பொக்ஸைத் திறந்து வைத்து டெஸ்க்டொப்பில் உள்ள எந்த ஒரு short cut ஐக்கனையும் ட்ரேக் என்ட் ட்ரொப் செய்து போடுவதன் மூலமும் அந்த பைலுக்குய பாத்தை ரன் லைனில் உருவாக்கி விடலாம்.

சில எப்லிகேசன்களை கணினியில் நிறுவும் போதே அந்த எப்லிகேன் பாத் சூழலில் சேர்க்கப்பட்டு விடும். உதாரணமாக எம்.எஸ்.ஒபிஸை நிறுவும்போது வேர்ட், எக்ஸல், எக்ஸஸ் போன்ற எப்லிகேசன்கள் பாத் என்வயரென்மென்டில் சேர்க்கப்பட்டு விடும். அதனால்தான் winword என டைப் செய்ய Microsoft Word ம் excel என டைப் செய்ய Microsoft Excel ம் திறக்கப்படுகின்றன.

எந்தவொரு எப்லிகேசனையும் பாத் என்வயரென்மென்டில் சேர்த்து விட பின்வரும் வழிமுறையைக் கையாளலாம்.

ரன் டயலொக் பொக்ஸில் regedit என டைப் செய்து ஓகே சொல்ல Registry Editor விண்டோ தோன்றும். அங்கு HKEY_LOCAL_MACHINE எனும் போல்டருக்கு இடது புறமுள்ள (+) குறியீட்டில் க்ளிக் செய்ய விரியும் போல்டர் களிலிருந்து software எனும் போல்டரை விரியச் செய்யுங்கள். இவ்வாறு HKEY_LOCAL_MACHINESoftwareMicrosoftWindowsCurrentVersionApp Paths என ஒவ்வொரு போல்டராகத் திறந்து கொண்டு வந்து க்ளிக் App Paths க்ளிக் செய்ய ஏராளமான .exe எனும் `ட்டிப்புடன் கூடிய போல்டர் களைக் காணலாம். இங்கு எடிட் மெனுவில் க்ளிக் செய்து New Key தெEவு செய்ய ஒரு போல்டர் உருவாகும். உங்கள் ரன் கமாண்ட் மூலம் திறக்க விரும்பும் எப்லிகேசனுக்குரிய பொருத்தமான சுருக்கமான நீங்கள் விரும்பிய ஒரு பெயரை .exe எனும் நீட்டிப்புடன் வழங்க வேண்டும். (இந்தப் பெயரையே ரன் கமாண்டாகப் பயன்படுத்த வுள்ளீர்கள் என்பதை மறக்க வேண்டாம்.) பின்னர் அந்த போல்டரைத் தெரிவு செய்து விண்டோவுக்கு வலப்புறமுள்ள பகுதியில் default எனும் பெயரிலிருக்கும் ஐக்கனில் க்ளிக் செய்து Edit மெனுவில் Modify தெரிவு செய்யுங்கள். அடுத்து தோன்றும் டயலொக் பொக்ஸில் Value Data எனுமிடத்தில் அந்த எப்லிகேசனுக்குரிய முழுமையான பாத்தை வழங்க வேண்டும். இப்போது ரன் கமாண்ட் மூலம் அந்த எப்லிகேசனை நீங்கள் ஏற்கனவெ கொடுத்த பெயர் கொண்டு திறக்கக் கூடியதாயிருக்கும்.

விண்டோஸ¤டன் இணைந்து வரும் சில ப்ரோக்ரம்களுக்கான ரன் கமாண்ட் இங்கு பட்டியலிடப் படுகிறது. ரன் கமான்ட் எவ்வளவு வேகமாகச் செயல்படுகிறது என்பதை நீங்களும்தான் பரீட்சித்துப் பாருங்கள்..

-அனூப்-

About Imthiyas Anoof

Check Also

ஃபேஸ்புக் அறிவிப்புகள் மின்னஞ்சலிற்கு வருவதைத் தடுப்பது எப்படி?

Avoid Facebook notifications in Email ஃபேஸ்புக் சார்ந்த அனைத்து அறிவிப்புகளும் உங்கள் மின்னஞ்சலிற்கும் வந்து தொல்லை தருகிறதா?. அதனை …

Leave a Reply