Home / Tips / Screen Shot in MS Windows 7

Screen Shot in MS Windows 7

Screen Shot in MS Windows 7 திரையில் தோன்றுவதைப் படம் பிடிப்பதற்குப் புதிய வசதிகள்

விண்டோஸ் இயங்கு தளத்தின் பழைய பதிப்புக்களில் கீபோர்டில் உள்ள PrintScreen விசையை அழுத்தி க்லிப் போர்டில் அதனை சேமித்துக் கொண்டு பின்னர் எம்.எஸ்.பெயிண்ட் திறந்து பேஸ்ட் செய்தே திரைக் காட்சிகளைப் (screenshots) படம் பிடித்து வந்தோம். அல்லது அதற்கென மூன்றாம் தரப்பு மென்பொருள்களைப் பயன் படுத்தினோம்.

எனினும் விண்டோஸின் விஸ்டா பதிப்பில் ஆரம்பித்து அதன் பின்னர் வந்த எல்லா விண்டோஸ் பதிப்புகளிலும் திரைக் காட்சிகளைப் படம் பிடிப் பதற்கென்றே Snipping Tool எனும் தனியான ஒரு கருவி தரப்பட்டுள்ளது.

Snipping Tool பயன் படுத்தி நீங்கள் விரும்பும் திரையின் எப்பகுதியையும் மவுஸைக் கொண்டு தெரிவு செய்து அதனை ஒரு இமேஜ் பைலாக JPG> GIF மற்றும் PNG வடிவில் சேமித்துக் கொள்ளலாம்.

அதே போன்று திரையில் தோன்றுவதைப் படம் பிடித்து உடனடியாக அதனை உங்கள் ஆவணத்தில் சேர்க்கும் வசதி எம்.எஸ்.வர்ட் 2010 மற்றும் அதன் பின்னர் வந்த அனைத்து ஆபிஸ் பதிப்புகளிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் இலகுவாகவும் விரைவாகவும் திரைக் காட்சிகளைப் படம் பிடிதது ஆவணத்த்தில் செருகலாம்.

அதற்கு எம் எஸ் வர்ட் திறந்து Insert டேபில் க்ளிக் செய்யுஙகள். தோன்றும் பட்டன்களில் Screenshot என்பதைக் க்ளிக் செய்யுங்கள்.

அப்போது திறந்திருக்கும் விண்டோக்களை சிறிய அளவில் காண்பிக்கும். நீங்கள் விரும்பும் வேறு ஒரு பகுதியைப் படம் பிடிக்க Screen Clipping என்பதைக் க்ளிக் செய்யுங்கள். தெரிவு செய்துள்ள விண்டோ படம் நேரடியாக ஆவனத்திற்குள் நுளைக்கப்படுவதோடு தேவைப் படின் அதனை மேலும் எடிட் செய்வதற்கான கருவிகளும் தோன்றும்.

ஒரு விண்டோவின் குறிப்பிட்ட பகுதியைப் படம் பிடிக்க Screen Clipping தெரிவு செய்யும் போது திரை மங்களாக மாறுவதோடு விரும்பிய பகுதியை மவுஸைக் கொண்டு ட்ரேக் செய்து தெரிவு செய்ய வேண்டும். உடனடியாக அந்தப் பகுதி உங்கள் ஆவனத்தில் நுளைக்கப்பட்டு விடும்.

-அனூப்-

About Imthiyas Anoof

Check Also

Signs of hard disk failure வன்தட்டு பழுதடையப் போவதை கணிப்பது எப்படி?

ஹாட் டிஸ்கிலிருந்து வழமைக்கு மாறானா இரைச்சல் கேட்க ஆரம்பிக்கும்கணினி அடிக்கடி உரைந்து (Freeze) போகும் அல்லது செயலிழக்கும்ஹாட் டிஸ்கில் அதிகளவு Bad …

Leave a Reply