என்ட்ரொய்டு இயங்குதளம் நிறுவப்பட்ட கையடக்கத் தொலைபேசி மற்றும் டேப்லட் கணிகளில் தமிழில் உள்ளீடு செய்வதற்கான ஒர் மென்பொருள் கருவியே செல்லினம். இதனைக் அன்ட்ரொயிட் கருவிகளில் நிறுவுவதன் மூலம் தமிழில் முரசு அஞ்சல் மற்றும் தமிழ்99 விசைப் பலகை உள்ளீட்டு முறைகளின் மூலம் இலகுவாக டைப் செய்ய முடிகிறது.
குறுஞ்செய்திகள், மின்னஞ்சல் செய்திகள், கூகில் தேடல் மற்றும்பேஸ்புக் போன்ற தளங்களில் பதிவுகளை இடுதல் போன்ற செயற்பாடுகளை தமிழில் தட்டச்சு செய்யும் பணிகளுக்கு இதனைப் பயன் படுத்தலாம்.
2003 ஆம்ஆண்டு முதன் முதலில் அறிமுகமான செல்லினம் பொது மக்கள் பயன் பாட்டுக்காக 2005 ஆம் ஆணடு விடப் பட்டது
செல்லினம்அகராதியும் இணைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் முதலில் டைப் செய்யும் ஓரிரு எழுத்துக்களைக் கொண்டு உங்களுக்குப் பரிந்துரைப்புக்கள் (suggestion list)வழங்கப்படும். இதன் மூலம் டைப் செய்யும் எடுத்துக் கொள்ள நேத்தைக் குறைக்க முடிவதோடு எழுத்துப் பிழைகளையும் தவிர்க்கலாம்.
2003ஆம் ஆண்டு முதன் முதலில் சோதனை முயற்சியாகத் தொடங்கப்பட்ட செல்லினம் 2005ஆம் ஆண்டு பொதுப் பயனீட்டுக்காக வெளியிடப்பட்டது., 2009ஆம் ஆண்டு ஐ–போனில் அறிமுகமான செல்லினம் அண்மையில்கூகில் ப்லே ஸ்டோரில் பதிவேற்றப் பட்டுள்ளது.
என்ட்ரொய்டு கருவிகளைவைத்திருக்கும் பயனர்கள் கூகில் பிளே ஸ்டோரில்இருந்து இலவசமாக இதனை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
என்ட்ராயிட் 2,3 (Ginger Bread) பதிப்பிலும் செல்லினம் இயங்கினாலும் செல்லினத்தின் முழுமையான செயல்பாட்டுக்கு என்ட்ராயிட் 4.1பதிப்பு (ஜெலலி பீன்) அவசியம்.
கூகில் ப்லே ஸ்டோரிலிருந்து செலினத்தை டவுன் லோட் செய்த பின்னர் இதனை செயல் படுத்த பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்.
முதலில் settings – language and Input – Keyboard Method input – sellinam என்பதைதெரிவு செய்யுங்கள். அடுத்து மின்னஞ்சல், கூகில் தேடல் போன்ற எப்லிகேசன் களில்டைப் செய்யும் போது தோன்றும் விசைப் பலகையில் மறு படியும் செல்லினத்தைத் தெரிவு செய்து கொள்ளுங்கள். அப்போது இடது பக்க ஓரத்தில் மு எனும் பட்டன் தோன்றும். அந்த பட்டனில் மறு பட்டி தட்டி த, EN , என ஆங்கிலம் தமிழ் என மொழியை மார்றிக் கொள்ளலாம். இங்கு த் என்பது தமிழ்99 என்பதையும் மு என்பது முரசு அஞ்சல் விசைப் பலகை முறையையும் குறிக்கிறது.