வை–பை இணைப்பப் பாதுகாக்க..
வைபை இணைப்பு மூலம் இணையம் பயன்படுத்துகிறீர்களா? அப்படியானால் நீங்கள் அவசியம் உங்கள் கணினியில் நிறுவ வேண்டிய ஒரு மென்பொருளே SoftPerfect WiFi Guard.
உங்கள் வை–பை இணைப்பிற்குப் பாஸ்வர்ட் இட்டுப் பாதுகாப்பு வழங்கினாலும் அந்தப் பாஸ்வர்டை கொஞ்சம் விசயம் தெரிந்தவர்களால் இலகுவாகக் கண்டறிந்து வைபை இணைப்பைப் பயன் படுத்தலாம். இதனால் நீங்கள் இனையத்தைப் பயன் படுத்தமாலேயே உங்கள் இணைய கணக்குக்குரிய டேட்டாவை இழக்க நேரிடுவதோடு இணைய வேகத்திலும் மந்த நிலையை உணரலாம்.
எனவே உங்கள் வைபை இணைப்பில் அனுமதியின்றி வேறு எவராவது இணைந்து திருட்டுத்தனமாக இணையத்தைப் பயன் படுத்துகிறார்களா என்பதைக் கண்டறிய உதவுகிறது SoftPerfect WiFi Guard எனும் மென்பொருள் கருவி. இதன் மூலம் அனுமதிக்கப்படாத கணினிகளைக் கண்டறிவது மட்டுமன்றி அக்கணினிகள் மறுபடி இணையாமல் பாதுகாக்கவும் முடிகிறது. 1.8 MB பைல் அளவு கொண்ட இதனை www.softperfect.com எனும் இணைய தளத்திலிருந்து இலவசமாய் தரவிறக்கலாம்.
அனூப்