Home / GIT Online Exam / Storage Devices தேக்கச் சாதனங்கள்

Storage Devices தேக்கச் சாதனங்கள்

துணை நினைவகம்   அல்லது துணை தேக்கச் சாதனம் (Secondary Memory / Auxiliary Storage)

image 42

துணை நினைவகம் அல்லது துணைத் தேக்கம் என்பது தரவுகளை நிரந்தரமாக தேக்கி வைக்கும் துணையுறுப்பாகும். இது புறத் தேக்கம் எனவும் அழைக்கப்படும். தேக்கச் சாதனக்களின் கொள்ளளவு பைட் (byte) இல் அளவிடப்படுகிறது.

காந்த  ஊடகச் சாதனங்கள் Magnetic Devices

காந்த ஊடகச் சாதனங்கள் காந்த ஏற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் தரவுகளைத் தேக்கி வைக்கின்றன.

வன் வட்டு (Hard Disk)

image 43

தரவுகளைத் தேக்கி வைக்கப் பயன்படும் மிகப் பிரபலமான ஊடகமாகிய வன்வட்டு பொதுவாகக் கணினியினுள்ளே நிலையாகப் பொருத்தப்பட்டிருக்கும். எனவே அதனை Fixed Disk அழைக்கப்படுகிறது.  எனினும் புறத்தேயிருந்து கணினிக்குத் தொடுக்கப்படக் கூடிய  வன்வட்டுகளும் (external hard disk)  உள்ளன.  தற்போது 250 GB இற்கும் 4 TB இற்குமிடையிலான பெரிய கொள்ளளவைக் கொண்ட வன் தட்டுக்கள் பயன் பாட்டிலுள்ளன. . ஒரு வன் தட்டில் புதிதாக தரவுகளைப் பதியவோ (write)  பதிந்ததைப் படிக்கவோ  (read) முடியும்..

காந்த நாடா (Magnetic Tape)

image 44

குறைந்த கதியையும் உயர் கொள்திறனையும் கொண்டிருப்பதனால் தரவுகளைப்  பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கு (backup)  மாத்திரம் இவை பயன்படுத்தப்படுகின்றன. தினசரி பயன் பாட்டில் இவற்றைக்  காண முடியாது. .

நெகிழ் வட்டு / ப்லொப்பி டிஸ்க் (Floppy Disk)

image 45

ஹாட் டிஸ்க் போலன்றி தேவையேற்படும் போது மட்டும் கணினியில் பொருத்தி பயன் படுத்தத் தக்கதாகவும் (removable disk)  இடத்துக் இடம் எடுத்துச் செல்லக் கூடியதாகவும் (portable) வடிவமைக்கப்பட்ட முதல் தேக்கச் சாதனம் ப்லொப்பி டிஸ்க் ஆகும்.  இது 3.5 அங்குல நீல அகலத்தில் சதுர வடிவில் காணப்பட்டது. எனினும் இதன் உச்ச கொள்ளளவு 1.44 MB அளவிலேயே இருந்தது. இக்கொள்ளளவு இன்றைய எமது தேவைக்கு எவ்வகையிலும் போதாமையால் பாவனையிலிருந்து முற்றாக நீங்கியுள்ளது.

ப்லொப்பி டிஸ்க்கில் எழுதவும், படிக்கவும் Floppy Disk Drive பயன் படுத்தப்பட்டது. எம்.எஸ்.டொஸ் மற்றும் விண்டோஸ் இயங்கு தளங்களில்  A, B எனும் இரண்டு ட்ரைவ் எழுத்துக்கள் இந்த ப்லொப்பி டிஸ்க் ட்ரைவிற்காகவே ஒதுக்கப்பட்டுள்ளன

சிப் டிஸ்க் – Zip Disk

image 46

ப்லொப்பி டிஸ்க்கின் சிறிய கொள்ளளவு காரணமாக அதே தொழில் நுட்பத்துடன்  அதனை விட கூடிய கொள்ளளவு கொண்டதாய் (100 MB)  சிப்டிஸ்க் வடிவமைக்கப்படு வெளிவந்தன. ஆனால் அதே கால கட்டத்தில் சிடி மற்றும் டிவிடி போன்றவற்றின் வருகை காரணமாக சிப் டிஸ்க் பிரபல்யமடையவில்லை. பின்னர் அதன் கொள்ளளவு 250 MB,  750 MB என அதிகரித்தாலும் பென் ட்ரைவ்களின் அறிமுகம் காரணமாக அதனோடு போட்டிபோட முடியாமல் பிரபல்யமடையாமலேயே பாவனையிலிருந்து இல்லாமல் போனது.

ஒளி சார்ந்த சேமிப்பு ஊடகங்கள் (Optical Storage media)

image 47

ஓர் உலோகத் தட்டில் குறிப்பதன் (வெட்டுவதன்) மூலம் தரவுகள் தேக்கி வைக்கப்படுகின்றன. தரவுகளை இடத்துக்கிடம் கொண்டு செல்வதற்கு அதிகளவில் பயன்படுத்தப்படும் இவை  பல வகைகளில் கிடைக் கின்றன. CD, DVD, BD என்பன இதற்கு உதாரணங்களாகும். இவற்றின் வருகையினால் ப்லொப்பி டிஸ்க் , சிப் டிஸ்க் போன்றவற்றின் பயன் பாடு இல்லாமல் போய் விட்டன.

திண்ம நிலைச் சாதனங்கள்  (Solid state devices)

USB flash drive, Memory card என்பன திண்ம நிலைச் சாதனங்கள்  எனப்படுகின்றன.

ssd

ஹாட் டிஸ்க் ட்ரைவ் மற்றும் சிடி ட்ரைவ் போன்று  உள்ளே அசையும் பாகங்கள்  இல்லாத திண்ம நிலையில் இருப்பதனால் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.  

USB பளிச்சீட்டுச் செலுத்தி
(USB flash drive / Pen Drive / Thumb Drive / Memory Stick)

image 48

எளிதாக இடத்துக்கிடம் கொண்டு செல்லத் தக்கதாக இருப்பதனாலும் விரைவாகத் தரவுகளைக் அணுகக் குடியதாக இருப்பதனாலும் பென் ட்ரைவ் எனும் USB பளிச்சீட்டுச் செலுத்தி  தற்போது அதிக பயன் பாட்டிலுள்ளன. இவை தற்போது 4 முதல் 128 GB வரையில் பல் வேறு கொள்ளளவுகளில் கிடைக்கின்றன இதனை கணினியின் USB குதையில் பொருத்தப்படும்.

நினைவக அட்டை (Memory card)

பளிச்சீட்டு இயக்கியை ஒத்த தொழிற் பாட்டைக் கொண்டுள்ளது. ஆனால், கணினியுடன் தொடுப்பதற்கான தொழினுட்பம் மாறும் அதே வேளை அளவும் சிறிதாகும். இலக்கமுறைக் கமரா, செல்பேசி, கணினி விளையாட்டுக் கருவிகளில் பயன்படுத்தப்படுகின்றது. இவற்றைக் கணினியோடு தொடுப்பதற்கு card reader எனும் கருவி பயன் படுகிறது.

sd

உதாரணம்

SD Card – Secure Digital Memory Card
Micro SD Memory cards
MMC -Multi Media Cards
SDHC (Secure Digital High Capacity) Memory Cards.

Cloud Storage
தற்போது இணையம் என்பது சர்வ சாதாரணமாக மனித வாழ்க்கையோடு ஒன்றி விட்டதன் காரணமாக இணைய சேர்வகளும் தரவுத் தேக்கத்திற்காகப் பயன் படுத்தப்பட ஆரம்பித்துள்ளன. இதற்கு வேறு எவ்வித துணைத் தேக்கச் சாதனங்களையும் பயன் படுதாமல் இனணைய இணைப்புடன் கூடிய ஒரு கணினியோ அல்லது கையடக்கக் கருவியோ இருந்தாலே போதுமானது

google drive

About admin

Check Also

bb

Grade 11 ICT 2021/22 (NWP) HTML

DOWNLOAD THE SOURCE FILES