Home / General / Synchronization என்றால் என்ன?

Synchronization என்றால் என்ன?

Synchronization இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சாதனங்களில் உள்ள ஒரே தரவுகள் சமப்படுத்தப் படுவதைக்  சிங்க்ரனைசேஸன் (Synchronization) எனப்படுகிறது. இதனைச் சுருக்கமாகச் சிங்க் – Sync எனப்படுகிறது. இரண்டு கணினிகளை Sync செய்வதன் மூலம்குறித்த ஒரு  நேரத்தில் இரண்டு கணினிகளிலுமுள்ள ஒரே தரவுகளை ஒன்றை மற்றையதுடன் சமப்படுத்தப்படுகிறது அல்லது ஒரே தரவு மற்றைய கணினியில் பிரதி செய்யப் படுகிறது.

Synchronization
Synchronization

உதாரணமாக நேற்று உங்கள் கணினியில் உள்ள சில பைல்களை வேறொரு கணினியில் பிரதி செய்தீர்கள். இன்று உங்கள் கணினியில் உள்ள அதே பைல்களுள் சிலவற்றை அழித்து விடுவதோடு புதிதாகச் சில பைல்களையும் சேர்த்து விடுகிறீர்கள். இப்போது மறுபடியும் அதே பைல்களை மற்றைய கணினியுடன் Sync செய்யும்போது இன்று அழித்த அதே பைல்களை மற்றைய கணினியிலும் அழிக்கப்படுவதோடு புதிய பைல்களும் சேர்க்கப்பட்டுவிடும். விண்டோஸ்  இயங்கு தளத்திலும் சிங்க் வசதியுள்ளது.

இப்போது சிங்க் வசதி மொபைல் கருவிகளிலும் கிடைக்கின்றன.

எடுத்துக்காட்டாக உங்களிடம் ஒரு கம்பியூட்டர், ஸ்மார்ட்ஃபோன் மற்றும் டேப்லெட் என ஒன்றிற்கு மேற்பட்ட சாதனங்கள் இருக்கும் பட்சத்தில், ஜிமெயில் கணக்கை மூன்று சாதனங்களிலிருந்தும் அணுகக்கூடியதாக இருந்தால் மூன்று சாதனங்களிலும் ஒரே தகவல் இருப்பதை Sync உறுதி செய்யும். கணினியிலிருந்துஒரு செய்தியை நீக்கும்போது, அது மொபைல் மற்றும் டேப்லெட்டிலிருந்தும் அது நீக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

சில தினங்கள் ஏதோ ஒரு சாதனத்தைப் பயன் படுத்தாமலிருந்து மறுபடி அந்தச் சாதனத்தில் ஜிமெயிலைப் பயன் படுத்தும்போது புதிய செய்திகளை அந்தச் சாதனத்தில் காண்பிக்காது. காரணம் அந்தச் சாதனம் இன்னும் சிங்க் செய்யப்படவில்லை.

எனவே அந்தச் சாதனத்தில் ஜிமெயில் கணக்கு சிங்க் செய்யப்பட வேண்டும். எனினும் நீங்கள் எதுவும் செய்வதற்கில்லை. சில நிமிடங்களில் தானாகவே ஜிமெயில் கணக்கு சிங்க் செய்யப்பட்டு புதிய செய்தியைக் காண்பிக்கும்.

இதே ஆட்டிக்கல் கோராவில்

About admin

Check Also

WhatsApp rolls out Message Yourself feature

நீங்களே உங்களுக்கு செய்திகளை அனுப்பக் கூடிய வசதியை வாட்சப் தற்போது அறிமுகம் செய்துள்ளது. Message Yourself  எனும்  இந்த அம்சம் மூலம்  பயனர்கள் வாட்சப்பில் குறிப்புகள்-notes, படங்கள்-images நினைவூட்டல்கள்-reminders மற்றும் இணைப்புகள்-links  போன்றவற்றை  தங்களுக்கே அனுப்பி அவற்றை சேமித்து தேவையான போது பயன் படுத்திக்  கொள்ள முடியும் இந்த அம்சத்தைப் பெற வாட்சப்பின் புதிய பதிப்பிற்கு அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.  வாட்சப் வெப் -இல் தற்போது இதனைப் பயன் படுத்த …

Leave a Reply