Home / Android / Timbre – அண்ட்ராயிட் செயலி

Timbre – அண்ட்ராயிட் செயலி

உங்கள் Android தொலைபேசியில் உள்ள ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகளை நேரடியாக மொபைல் கருவியிலேயே  திருத்த (edit)  அனுமதிக்கிறது டிம்பர் எனும் இலவச செயலி.  சிறிய திருத்தங்களுக்கான நீங்கள் ஆடியோ வீடியோ கோப்புகளை கணினிக்கு மாற்றி திருத்தங்கள் செய்ய  வேண்டிய அவசியமில்லை!

இச் செயலியின் மூலம் இலகுவாக  ஆடியோ  வீடியோ கோப்புகளை ஒன்றிணைக்கவும் தேவையற்ற பகுதிகளை வெட்டி நீக்கவும்  முடிகிறது. மேலும் ஒலி  மற்றும் கணொளி கோப்புக்களை வெவ்வேறு கோப்பு வகைகளுக்கு மாற்றும் (convert)  வசதியும் உள்ளது.

ஒலி  மற்றும் கணொளி கோப்புக்களைத்  திருத்துவதற்கான கருவிகளை  இரண்டு வெவ்வேறு பிரிவுகளாக பிரித்துக் காண்பிக்கும் அழகான இடை முகப்பையும் இச்செயலி கொண்டிருப்பது இதன் சிறப்பம்சம்.

டிம்பர் செயலியை கூகுல் ப்லே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்யலாம்  என்பதை நான் சொல்லத்தான் வேண்டுமா?

About admin

Check Also

BlueStacks X-Play Android Games in Your Browser

BlueStacks X-Play Android Games in Your Browser PBlueStacks X-Play Android Games in Your Browser விண்டோஸில் …

Leave a Reply