Home / Android / True Caller –

True Caller –

True Caller – அழைத்தது யாரோ?

trueதெரியாத இலக்கங்களில் இருந்துவரும் அழைப்புக்களை அறிவது எப்படி?

கையடகத் தொலைபேசிகளில் கிடைக்கும் கோலர் ஐடி (Caller ID) வசதி மூலம் எங்களுக்கு அழைப்பை எடுக்கும் நபர் யார் என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். எனினும் அழைப்பவரின் தொலைபேசி இலக்கமும் பெயரும் எமது தொலைபேசியின் தொடர்பாளர் பட்டியலில் (contact list)  பதியப்பட்டிருந்தால் மட்டுமே அழைப்பவர் யார் என்பதை அறிந்து கொள்ளலாம். எமது தொலைபேசில் சேமிக்கபடாத ஒரு இலக்கத்திலிருந்து அழைப்பு வரும்போது அழைப்பவர் யார் என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியாததுடன் அவ்வாறான அழைப்புக்களுக்கு பதில் சொல்லவும் தயங்குவோம்.

எமக்கு அறிமுகமில்லாத அனாமதேய அழைப்புக்களின் தொலைபேசிகளுக்கு உரிமையாளர் யார் என்பதைக் காட்டிக் கொடுக்கிறது ஒரு எண்ட்ரொயிட் அப்லிகேசன். TrueCaller எனும் இந்த அப்லிகேஸன் உங்களுக்கு  உலகின் எப்பகுயிலிருந்து அழைப்புக்கள் வந்தாலும் அவரின் பெயரோடு புகைப் படத்தையும் காட்டி விடுகிறது.

இந்த எண்ட்ரொயிட் எப் ஆனது உலகிலுள்ள 2 பில்லியன் தொலைபேசிகளின் உரிமையாளர்களின் விவரங்கள் அடங்கிய  தரவுத்தளம் ஒன்றைப் பேணி வருகிறது. இந்த அண்ட்ரொயிட் கருவியை உங்கள் கையடக்கத் தொலைபேசியில் நிறுவும் போதே உங்கள் தொலைபேசியில் உள்ள தொடர்பாளர் பட்டியலுக்குள் ஊடுறுவி அதிலுள்ள தரவுகளை தனது தனது தரவுத் தளத்துக்கு  அனுப்பி விடுகிறது.

இவ்வாறு இந்த எண்ட்ரொயிட் கருவியை நிறுவிக் கொள்ளும் ஒவ்வொரு பயனர்களிடமிருந்தும் தரவுகளைப் பெற்றே மிகப் பெரிய ஒரு தொலைபேசித் தரவுத் தளத்தைக் உருவாக்கியிருக்கிறது ட்ரூ கோலர்.

உங்களுக்கு அடிக்கடி அனாமதேய அழைப்புக்கள் வருமாயின் அவ்வாறான தொலைபேசி இலக்கங்களை தடுக்கவும் வசதி செய்கிறது இந்த எண்ட்ரொயிட் கருவி. மேலும் ஒரு  தொலைபேசி இலக்கத்துக்கு உரிமையாளர் யார் என்பதைத் தேடிக் கண்டறியும் வசதியை www.truecaller.com/ இணைய தளத்திலும் வழங்கியுள்ளது.

உங்களை அழைப்பவர் யார் என்பதை சில வேலைகளில் காண்பிக்காமல் விட்டால் truecaller தரவுத்தளத்தில் அவ்விலக்கம் இன்னும் சேர்க்கப் படவில்லை என்பதே காரணமாகும்.

எமக்கு வரும் அழைப்புக்களுக்கு சொந்தக்காரர் யார் என்பதைக் காட்டிவிட்டாலும் எமது தொடர்பாடல் பட்டியலை உலகறியச் செய்வது என்பது எமது அந்தரங்கத்தை கேள்விக்குறியாக்குகிறது என்பதால் இந்த ட்ரூ கோலர் எண்ட்ரொயிட் கருவியை உங்கள் கையடக்கத் தொலைபேசியில் நிறுவிக் கொள்வதா இல்லையா என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். -அனுப்-

 

About Imthiyas Anoof

Check Also

11df

4 new features in Whatsapp வாட்ஸ்-அப் தரவிருக்கும் நான்கு புதிய வசதிகள்

4 new features in Whatsapp வாட்ஸ்-அப்பை ஒரே நேரத்தில் பல சாதனங்களில் பயன்படுத்த விரைவில் உங்களை அனுமதிக்கும் என …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *