Skip to content
InfotechTamil
InfotechTamil

A Blog for IT Related Articles in Tamil

  • Home
  • General
  • Software
  • Hardware
  • Networking
  • How to..?
  • What is..?
  • Tips
  • Sites
  • Android
  • TechNews
  • O/L ICT
  • A/L GIT
InfotechTamil

A Blog for IT Related Articles in Tamil

Types of Computer கணினி வகைகள்

admin, June 5, 2014June 5, 2022

வடிவமைப்புத் தொழினுட்ப அடிப்படையில் வகைப்படுத்தல்

ஒத்திசைக் கணினி  (Analog Computers)

சூழலில் ஏற்படும் தொடர்ச்சியான பௌதிக மாற்றங்களான (கதி, வோல்ட் அளவு, அமுக்கம், வெப்பநிலை) போன்ற ஒத்திசைச் சைகைகளை (Analog Signals)எனப்படும். இவற்றை இனங்கண்டு அதற்கேற்பத் தொழிற் படும் கணினிகள் ஒத்திசைக் கணினிகள் எனப்படும். வேகமானி, உணரிகள் (sensors) உள்ள வீதி விளக்குகள், வானிலை அளவிடும் கருவிகள் போன்றன  இதற்கு உதாரணங்களாகும். ஒட்திசைக் கணினிகள் எண்கலளைப் பயன் படுத்தாது கணித்தல்களை மேற்கொள்கின்றன.

இலக்கமுறைக் கணினி (Digital Computers)

நாம் தினசரி வாழ்வில் பயன்படுத்தும் கணினிகள் இலக்கமுறைக் கணினிகள் ஆகும். இக்கணினிகள் இலக்கமுறைச் சைகைகளை (Digital Signals)) இனங்கண்டு தொழிற்படுகின்றன. இவை 0, 1 எனும் இரு இலக்கங்களைக் கொண்ட துவித எண் முறையில் எல்லாவிதமான தரவுகளும் பிரதிநிதித்துவப் படுத்துவதோடு கணித்தல்களும் மேற்கொள்ளப் படுகின்றன.


கலப்பினக் கணினி (Hybrid Computers)

ஒத்திசைக் கணினிகள் (Analog Computers), இலக்கமுறைக் கணினிகள் (Digital Computers)  ஆகிய இரு வகைகளினதும் ஒரு கலப்பாகக் கலப்பினக் கணினிகளை அறிமுகஞ் செய்யலாம். இதயத்தின் தொழிற்பாட்டை அவதானிப்பதற்கு மருத் துவமனையில் பயன்படுத்தப்படும் ECG இயந்திரம் ஒரு கலப்பினக் கணினியாகும். ஒத்திசைச் சைகையாகிய (analog signals) இதயத்தின் தொழிற்பாட்டை இனங்கண்டு அதனை இலக்கமுறைச் சைகையாக மாற்றி அச்சைகைகளை அச்சிடுதல் இப்பொறியின் மூலம் நடைபெறுகின்றது

பருமன் மற்றும் செயற்திறனுக்கேற்ப வகைப்படுத்தல்

மீக்கணினிகள் (Super Computers)

இக்கணினிகள் அதியுயர் ஆற்றல் மிக்கவை. விஞ்ஞான, பொறியியல் பணிகளுக்காகவும் சிக்கலான கணிதப் பிரசினங்களுக்காகவும் பயன்படுத்தப்படும் இக்கணினிகள் நாசா (NASA) போன்ற வானியல் ஆராய்ச்சி மையங்களிலும் பெரிய வியாபார நிறுவகங்களிலும், பயன்படுத்தப்படுகின்றன. இணையத்தில் (internet)  சேர்வர் கணினியாகவும் பயன்படுத்தப்படுகின்றன

Server  – Computers that provide shared resources to networks கணினி வலையமைப்பிலுள்ள ஏனைய கணினிகளுக்கு சேவைகளை வழங்க இவ்வகைக் கணினிகள் பயன்படுத்தப்படும். இவற்றின் நினைவக ஆற்றல் அதிகளவு தரவுகளை சேமிக்கக் கூடியதாக இருக்கும். சேவையக கணினிகள் செயற்படும் வேகமும் பொதுவான கணினிகளை விட அதிகமானதாகும். பல கணினிகளை இணைத்து உருவாக்கப்பட்ட கணினித் தொகுதியே கணினி வலையமைப்பு எனப்படும;

Client –  Computers that access shared networks resources provided by server  
ஒரு சேர்வரிலிருந்து சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் கணினி

இது ஒரு பல் பயனர் (multi user) கணினியாகும். அதாவது பல பயனர்கள் ஒரு கணினியுடன் இணைந்து பல முடிவிடங்களைப் பயன்படுத்தித் தரவுகளையும் தகவல்களையும் பரிமாறிக்கொள்ளல், தேக்கி வைத்தல், மீண்டும் பெறுதல் ஆகியவற்றை மேற் கொள்ளல் ஆகும்.

பெருமுகக் கணினிகள் (Mainframe Computers)


இவை மீக்கணினிகளிலும் பார்க்க வேகம், ஆற்றல், குறைந்தவை. பெருமுகக் கணினித் தொழினுட்பவியல் என்பது பெரிய வணிக நிறுவனக்களில், வங்கிகளில் சேர்வர் கணினியாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதுவும் ஒரு பல் பயனர் கணினியாகும். இணையத்திலும் சேர்வர் கணினியாகப் பயன்படுத்தப்படுகின்றன.

சிறு கணினிகள் (Mini Computers)

பெருமுகக் கணினிகளிலும் பார்க்க வேகம், ஆற்றல், குறைந்தவை.. பயன்படுத்துவதற்கு எளிதானது இது ஒரு பல் பயனர் (multi user) கணினியாகும். வணிக நிறுவனக்களில், வங்கிகளில் சேர்வர் கணினியாகப் பயன் படுத்தப்படுகின்றன. இணையத்திலும் சேர்வர் கணினியாகப் பயன்படுத்தப்படுகின்றன.

பணிநிலையக் கணினிகள் (Workstations)

அதிக ஆற்றல்களுடன்அமைக்கப்பட்ட தனியாள் கணினிகள் (Destop PC) பணிநிலையக் கணினிகள் (Workstations) எனப்படும். 3D Graphic Designing இல் இவ்வகைக் கணினிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.

தனி நபர் கணினிகள் / நுண் கணினிகள் (Personal Computers – PC / Micro Computers)

தனி நபர் பயன் பாட்டிற்குப் (single user) பயன்படுத்தப்படும் இக்கணினிகள் மேற்குறிப்பிட்ட கணினி வகைகளோடு ஒப்பிடும் போது குறைந்த செயற் திறனைக் கொண்டவை. அளவிலும்  சிறியதாகும்.

இவற்றிற்கு Desktop computers, Laptop computers, Note Book computers, Tablet PCs, Wearing Computers என்பவற்றை உதாரணமாகக் கொள்ளலாம். பொதுவாக நாம் வீடுகளிலும் பாடசாலைகளிலும் பயன் படுத்துவது தனி நபர் கணினிகளே.       

GIT Online Exam O/L ICT

Post navigation

Previous post
Next post

REAL-TIME UNICODE CONVERTER

OL ICT Pastpapers

G I T O N L I N E E X A M

WEB DESIGNING SERVICES

a n o o f . i n

t a m i l t e c h . l k

Online Web Designing Class

Infotechtamil

©2023 InfotechTamil | WordPress Theme by SuperbThemes