Home / General / USB-Type C என்றால் என்ன?
USB Type C 1

USB-Type C என்றால் என்ன?

USB Type C

இன்று USB (Universal Serial Bus)   கேபல் பற்றியோ USB போர்ட் பற்றியோ அறியாதோர் இல்லை எனுமளவுக்கு  USB கேபல் மற்றும் USB கருவிகளின்  பயன்பாடு தற்போது பரவலாகக் காணப்படுகிறது. விசைப்பலக, சுட்டி, ஸ்பீக்கர், ஸ்கேனர், அச்சுப்பொறி பென் ட்ரைவ், டிஜிட்டல் கேமரா, டேப்லட், ஸ்மாட் போன் என எந்தவொரு மின்னணு சாதனத்தையோ அல்லது கணினி துணைச் சாதனத்தையோ எடுத்தாலும் அவற்றில் USB இணைப்புக்களையோ (connector)  குதைகளையோ (Port) பார்க்க முடியும்

USB-C என்பது USB இணைப்பு வகைகளில் சமீபத்திய வரவாகும். இங்கு C ஆனது வகை C  (Type-C) என்பதைக் குறிக்கிறது. USB இணைப்பு (connector) வகைகளில் ஒன்றான USB Type-C கடந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த Type-C ஆனது USB நியமங்களில் USB 3.1 என்பதை ஆதரிக்கிறது. அதாவது USB-C இணைப்பு மூலம்  10 Gbps வேகத்தில் தரவுப் பரிமாற்றம் செய்ய முடியும். மேலும் USB-C இணைப்பின் மூலம் 20 volts அல்லது 100 watts அளவிலான மின் சக்தியையும் பரிமாற முடியும்.

USB-C ற்கு முந்திய இணைப்பு (connector)   வகைகளான USB Type-A மற்றும்  USB Type-B போலல்லாது  USB-C இணைப்பு சமச்சீரானது. அதாவது அதனை Type-C குதையில் பொருத்தும் போது கேபல் தவறான பக்கத்தில் உட்செலுத்தப்படுமோ என்று கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் இந்த Type-C இணைப்பை Type-C குதையில்  (ports) இரண்டு பக்கமும் உட்செலுத்த  முடியும்.

type a1996 இல் அறிமுகமான  USB இடைமுகப்புக்களில் USB-C ஆனது மிக முக்கியமான வளர்ச்சியாகக் கருதப்படுகிறது. USB 1.1, 2.0, 3.0 என அனைத்து USB நியமங்களும் ஒரே மாதிரியான தட்டையான , செவ்வக வடிவ  USB-A இனைப்பையே (connector)  பயன் படுத்தின. மேலும்  USB-B வகையில்  Mini-USB மற்றும் Micro-USB என  துணைச் சாதனங்களுக்கென வெவ்வேறு வகைகளில் வடிவமைக்கப்பட்ட இணைப்புக்கள் வெளிவந்தாலும் அவ்வகை இணைப்புக் கொண்ட கேபலின் மறுமுனையானது Type-A குதையினுடன் பொருத்தக் கூடியதாய் இருந்தன. எனினும் தற்போது USB 3.1 நியமத்துடன் அறிமுகமாகியிருக்கும் Type-C இணைப்புக் கொண்ட கேபலின்  இரு முனைகளும்  ஒரே மாதிரியானதாவே இருக்கும்.

USB-B வகையில்  போன்று மினி (mini) மற்றும் மைக்ரோ (micro) பதிப்புகள் USB-C இணைப்பில் இல்லை. மேலும்  நியம முறையிலமைந்த  USB-C இணைப்பு மைக்ரோ USB இணைப்பு அளவிலேயே இருக்கிறது. அதாவது அதனை ஸ்மாட் போன், டேப்லட் போன்ற கையடக்கக் கருவிகளிலும் பயன் படுத்தலாம். USB-C இணைப்பு 100 watts அளவவிளான மின்சக்தியையும் ஆதரிப்பதால் மடிக்கணினிகளுக்கான  மின் சக்தியை வழங்கவும் பயன்படுத்த முடியும். Apple நிறுவனத்தின்  MacBook மற்றும் Google நிறுவனத்தின் Chromebook Pixel என்பன USB-C உடனான மின் இணைப்புடன் (Charger) கூடிய மடிக்கணினிகளாகும். . இம்மடிக் கணினிகளில் தனியாக  மின்சக்தி வழங்கக் கூடிய  இணைப்புக்கள் இல்லை.  பதிலாக மடிக்கணினிக்குரிய charger கேபலின் மறு முனை நேரடியாக USB-C குதையுடனேயே இணைக்கப்படுகிறது.

SEE MORE  How to restrict friends from seeing what you share on Facebook

USB-C இணைப்பை (connector)   USB-C குதையில் (port) இல் மட்டுமே பொருத்த முடியும். எனினும் USB-C இணைப்புடன் கூடிய கேபல் இதற்கு முந்திய இணைப்பு வகைகளான USB-B,  USB-A  என்பவற்றையும் ஆதரிக்கும். இதனை பின் நோக்கிய பொருத்தப்பாடு (backwards-compatiblity) என அழைக்கப்படுகிறது. USB-C to USB-A,  USB-C to USB-B வகையிலான விசேட கேபல்கள் அவசியம். ஒரு  USB-C to USB-A மற்றும்  USB-C to USB-B இணைப்புக்கள் கொண்ட கேபல்கள் மூலம் USB-C வசதியில்லாத பழைய சாதனங்களையும் USB-C குதையுடன் இணைக்க முடியும். எனினும் தரவுப் பரிமாற்ற வேகம் மற்றும் மின் சக்தியின் அளவு என்பன முந்திய நியமங்களை ஒத்ததாக இருக்கும்.

About admin

Check Also

kodular

Kodular – No Code Android App Maker

Kodular கோடுலர் /கோடியுலர் (code + modular => Kodular ஆனது) என்பது அண்ட்ராயிட்  மொபைல் செயலிகளை உருவாக்க உதவும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page கொப்பி பன்ணாதீங்க  அய்யா. சுயமா எழுதுங்க