Home / TechNews / Use Android Apps on your PC

Use Android Apps on your PC

Use Android apps on your PC |மொபைல் செயலிகளை கணினியிலும் இயக்கலாம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10 அடிப்படையிலான Your Phone எனும் பயன்பாட்டு மென்பொருள் உங்கள் கணினியுடன் அண்ட்ராய்டு கருவிகளை இணைக்க அனுமதிக்கிறது. இதன் மூலம் கணினியிலிருந்தே உங்கள் மொபைல் தொலைபேசியில் இருக்கும் புகைப்படங்களைப் பார்க்கவும் , எஸ்எம்எஸ் அனுப்பவும் மற்றும் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவும் முடியும்.

மேலும் மொபைல் தொலைபேசியில் உள்ள அனைத்து செயலிகளையும் எந்த சிக்கலும் இல்லாமல் உங்கள் கணினியில் பயன்படுத்த முடியும் . Your Phone மென்பொருளின் சமீபத்திய புதுப்பிப்பு மூலம் மைக்ரோசாப்ட் இந்த அம்சத்தை கிடைக்கச் செய்துள்ளது,

Use Android Apps on your PC
se Android Apps on your PCUse smartphone apps on your PC

Use Android Apps on your PC | இந்த மென்பொருளில் உள்ள ஸ்கிரீன் மிரர் (Screen mirror) அம்சம் மூலம்  உங்கள் தொலைபேசி திரையை டெஸ்க்டாப் மற்றும் மடிக்கணினிகளில் பிரதிபலிக்க வைக்கவும்  மொபைல் அறிவிப்புகளைப் பெறவும் கூட உங்களை அனுமதிக்கிறது

இந்த மென்பொருள் மூலம் மூலம் மொபைல் போன் மற்றும் கணினி இணைக்கப்பட்டவுடன், உங்கள் தொலைபேசியின் மாதிரி கணினித் திரையின் இடது பக்கத்திலும், தொலைபேசியின் அனைத்து செயலிகளையும் வலது பக்கத்திலும் காண்பிக்கும்.மொபைலில் ஒரு செயலியில் தட்டும் போது கணினித் திரையில் பாப் அப் (pop up) விண்டோ திறக்கும்.

தற்போது நீங்கள் ஒரு நேரத்தில் ஒரு செயலியை மட்டுமே பயன்படுத்த முடியும். இருப்பினும், மைக்ரோசாப்ட் அதனை பல செயலிகளுக்கு மேம்படுத்த தயாராகி வருகிறது.

நீங்கள் அடிக்கடி பயன் படுத்தும் செயலிகளை விண்டோஸ் டெஸ்க்டொப் டாஸ்க்பாரில் பின் செய்து பொருத்தவும் முடியும்.

எனினும் துரதிர்ஷ்டவசமாக, இந்த வசதி தற்போது Samsung  நிறுவன தொலைபேசிகளுக்கு மட்டுமே கிடைக்கிறது. இந்த வசதியைப் பெறக் கூடிய இணக்கமான ஸ்மாட் போன் மாடல்களின் பட்டியலை மைக்ரோசாஃப்ட் இணையதளத்தில் காணலாம்.

இந்த வசதியை செயற்படுத்த முதலில் விண்டொஸ் 10 இயங்கு தளத்தில் மைக்ரோசாப்ட் ஸ்டோரிலிருந்து Your phone App மென்பொருளைக் கணினியிலும், ப்லே ஸ்டோரிலிருந்து Your phone App Companian கம்பேனியன் செயலியை உங்கள் மொபைல் ஃபோனிலும் டவுன்லோட் செய்து நிறுவிக் கொள்ள வேண்டும்.

About admin

Check Also

WhatsApp’s privacy update, August 2022

வாட்சப்பின் – Whatsapp சமீபத்திய அப்டேட்டில் பல தனியுரிமை சார்ந்த வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நீங்கள் அங்கம் வகிக்கும் வாட்சப் குரூப்பிலிருந்து …

Leave a Reply