Home / Android / What are Widgets?

What are Widgets?

What are Widgets? மொபைல் கருவிகளில் Apps பற்றி எல்லோருக்கும் தெரியும்.   இது நாம் பயன் படுத்தும் அப்லிகேசன்களைக் குறிக்கின்றன. அதே Apps போன்று  Widgets -விஜ்ஜெட்ஸ் எனும்  பெயரிலும் சில அப்லிகேசன்கள் இருப்பதை அவதானித்திருப்பீர்கள். எனினும் இதனை நீங்கள் மிக அரிதாகவே பயன் படுத்தியிருப்பீர்கள்.

Apps மற்றும் Widgets என்பன பார்வைக்கு ஒரே மாதிரியாகத் தோற்றமளித்தாலும் இரண்டும் வேறுபட்டவை. விஜ்ஜெட் வகை  அப்லிகேசன்கள்  அவ்வப்போது தானாகவே  அப்டேட்  செய்யப்பட்டு  விடும் என்பது  இவற்றின்  தனிச்  சிறப்பு. விஜ்ஜேட்டுக்கு உதாரணமாக  clock, weather, calendar, bookmarks போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

What are Widgets?

வானிலை தகவல்கலைச் சொல்லும் weather விட்ஜெட் பிரதேசத்திற்குரிய வானிலை பற்றிய தகவல்கலை அவ்வப்போது அப்டேட் செய்து கொண்டேயிருக்கும். நாம் விஜ்ஜெட்டைத் திறக்கும் நேரத்துக்குரிய சரியான வானிலை அறிவித்தலை அது  காண்பிக்கும். அதே போன்று காலண்டர் விஜ்ஜெட் எமது அன்றைய / அப்போதைய  நிகழ்வுகள்பற்றிய விவரங்களை எமக்கு நினைவூட்டும்.

சில விஜ்ஜெட்டுகள் மொபைல் கருவியுடன் இணைந்தே வரும். நாம் பயன் படுத்தும் சில அப்லிகேசன்களுக்கான விஜ்ஜட்டுகளும் உள்ளன அவை ப்லே ஸ்டோரிலிருந்து அப்லிகேசன்களை நிறுவும் போது எமக்குத் தெரியாமலேயே  நிறுவப்பட்டு விடும்.

விஜ்ஜெட்டுகளை மொபைல் கருவியின் ஹோம் திரையில் நிறுத்தவும் முடியும்.

அண்ட்ராயிட் கருவிகளில் ஹோம் திரையில் நிறுத்த ஒரு விஜ்ஜெட் ஐக்கான் மீது விரலால் அழுத்திக் கொண்டிருக்க வேண்டும். அப்போது அதனை நகர்த்தக் கூடியவாறு மேலெழுந்து வருவதோடு ஹோம் திரையையும் காண்பிக்கும். ஹோம் திரையில் விஜ்ஜட் ஐக்கானை விரும்பிய இடத்தில் நிறுத்தி விரலைத் தொடுகையிலிருந்து எடுக்க வேண்டும். சில வேளை ஹோம் திரையில் இடமில்லாதபோது No room on this home screen எனும் செய்தியைக் காண்பிக்கும். அப்போது அந்த விஜ்ஜெட்டை இடப்புறமாகவோ அல்லது வலப்புறமாகவோ நகர்த்துவதன்மூலம் வேறொரு திரையில் நிறுத்தி விட முடியும்.

ஐ.ஓ.எஸ்ஸில் முகப்புத் திரையில் நிறுத்த, ஒரு விஜ்ஜெட் அல்லது திரையின் வெற்றிடத்தில்  தொட்டுப் பிடித்திருங்கள். அப்போது இடது  மேல் மூலையில் தோன்றும்  + குறியீடு  பட்டனைத் தட்ட விஜ்ஜெட்டுகள் காண்பிக்கப்படும். பின்னர் விரும்பிய விஜ்ஜெட்டில் தட்டி மூன்று விஜ்ஜெட் அளவுகளிலிருந்து ஒன்றைத் தெரிவு  செய்யுங்கள். அடுத்து Add Widget என்பதைத் தட்டி.  இறுதியாக Done என்பதைத் தட்டுங்கள்.

விஜ்ஜெட்டுகள் மொபைலில் மாத்திரமன்றி கம்பியூட்டர்களிலும் (விண்டோஸ், மேக்-ஓ.எஸ் என்பவற்றிலும் ) பயன் பாட்டில் உள்ளன.

கோராவில்

About Imthiyas Anoof

Check Also

WhatsApp Groups with 512 members rolled out for beta users

 Android மற்றும் iOS பயன் படுத்தும் WhatsApp பீட்டா பயனர்களுக்கென (Beta Users) பெரிய WhatsApp குழுக்களை உருவாக்கும் வசதியை …

Leave a Reply