Home / General / What is Augmented Reality ஆக்மெண்டட் ரியாலிட்டி என்றால் என்ன?

What is Augmented Reality ஆக்மெண்டட் ரியாலிட்டி என்றால் என்ன?

What is Augmented Reality  ஆக்மெண்டட் ரியாலிட்டி Augmented Reality என்பது நிஜ உலகச் சூழலுடன் கணினியால் உருவாக்கப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகளையும் தகவல்களையும் கலக்கும் ஒரு வித்தியாசமன தொழில் நுட்பமாகும். தமிழில் இதற்கு  ”மேம்பட்ட யதார்த்தம்” என்று பொருள் கொள்ளலாம். AR என இரு ஆங்கில் எழுத்துக்களால் சுருக்கமாக அழைக்கப்படும் இத்தொழில் நுட்பம் பயன்படுத்தப்படும் பல வகையான கருவிகள் தற்போது பயன்பாட்டில் வர ஆரம்பித்துள்ளன. AR தொழில் நுட்பத்துடன் கூடிய பொதுவான ஒரு பயன்பாடாக வீடியோ விளையாட்டுக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் வழிச்செலுத்தல் (Navigation devices) கருவிகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். கண்ணாடி போல் அணிந்து கொள்ளும் கூகில் க்லாஸ் எனும் விசேட கண்ணாடியும் கூட AR தொழில் நுட்பத்தைப் பயன் படுத்துகிறது.

தொலைக்காட்சியில் கிரிக்கட் போட்டியொன்றைப் பார்த்துக் கொண்டிருக்கு றீர்கள். அப்போது துடுப்பாட்டக்காரர் ஒருவர் அடித்த ஒரு பந்து மைதான எல்லைக் கோட்டில் விழுகிறது. எனினும் அது நான்கு ஓட்டமா ஆறு ஓட்டமா என்பதை அறிவிப்பதில்  நடுவருக்குத் தடுமாற்றம். தொலைக் காட்சி நிலையம் உடனடியாக அக்காட்சிகளை கணினி கிராபிக்ஸ் மற்றும்  எனிமேசனுடன்.  பந்து சென்ற பாதையையும்  அப்பந்து வீழ்ந்த இடத்தையும் மறுபடி ஒளிபரப்புகிறது. நடுவர் தீர்ப்பை சரியாகச் வழங்கி விடுகிறார்.

லண்டன் தெருவொன்றில் நடந்து செல்கிறீர்கள். அப்போது கலை வேலைப் பாடுகளுடன் கூடிய ஒரு  கட்டடத்தைக் காண்கிறீர்கள். இந்தக் கட்டடம் என்ன?  இதை வடிவமைத்தவர் யார் என்ற பல வினாக்கள் உங்கள் மனதில் எழுகின்றன? உடனே உங்கள் ஸ்மாட் போனில் அக்கட்டடத்தை ஒரு போட்டோ எடுக்கிறீர்கள். அப்போது ஸ்மாட் போனிலுள்ள GPS (satellite navigation) வசதி யுடன் உங்கள் ஸ்மாட் தொலைபேசி உங்கள் இருப்பிடத்தை இனம் கண்டு நீங்கள் எடுத்த போட்டோவை ஒத்த படங்களை கூகில் இமேஜில் தேடுகிறது. சில வினாடிகளில் அந்த இடத்தை இனம் கண்டு அந்தக் கட்டடம் சார்ந்த பல தகவல்களை உங்கள் முன்னே காண்பிக்கிறது.

மேற்சொன்ன இரண்டு சந்தர்ப்பங்களிலும் AR தொழில் நுட்பமே பயன் படுத்துகிறது. அண்மையில் ஸ்மாட் தொலைபேசிகளில் அறிமுகமாகி பிரபலமான போகமன்-கோ (Pokémon Go) எனும் சுவாரஸ்யமான வீடியோ விளையாட்டை நீங்கள் அறிந்திருக்கலாம்.  அந்த விளையாட்டின்போது எமது ஸ்மாட் போனிலுள்ள GPS வசதியுடன் உங்கள் இருப்பிடத்தை இனம்  கண்டு கொள்கிறது. நீங்கள் தொலைபேசியுடன் சூழலில் உலாவும் போது உங்கள் தொலைபேசித் திரையில் கேமராவை இயக்கி திரையில் நிஜக் காட்சியுடனான பின்னணியுடன் கற்பனை கலந்த கிரேபிக்ஸ் உருவங்களையும் அனிமேசன்களையும் காண்பிக்கும்.  போகமன்கள் எனப்படும் இவற்றைப் பிடிக்க முயலும் போது உங்கள் சூழலியே அவை ஓடி மறைந்து கொள்ளும். இந்த போகமன்-கோ விளையாட்டிலும்  ஆக்மெண்டட் ரியாலிட்டி தொழில் நுட்பமே பயன் படுத்தப்படுகிறது. இது போன்ற பல விளையாட்டுக்கள் AR தொழில் நுட்பத்துடன் வெளிவர ஆரம்பித்துள்ளன.

ஆக்மெண்டட் ரியாலிட்டி (AR) மற்றும் வேர்ச்சுவல் ரியாலிட்டி (VR) எனும் மெய்நிகர் யதார்த்தம் (கடந்த மாத வானவில் இதழில் அலசப்பட்டது)  இரண்டுமே கம்ப்யூட்டர் கொண்டு உருவாக்கப்படும் இன்னொரு யதார்த்தம் தான். இருப்பினும்  இரண்டும் வெவ்வேறு தொழில் நுட்பங்களாகும். AR நிஜ உலகை மேம்படுத்துகிறது அதாவது சூழலிலுள்ள பொருள்  ஒன்றின் மீது உருவங்களும் தகவல்களும் ஒன்று கலக்கின்றன. இவை அந்த பொருள் சார்ந்த கூடுதல் தகவல்களாக இருப்பதால் அவற்றின் பயன்பாட்டை ஒருபடி உயர்த்தி விடுகின்றன. எனினும் AR நிஜ உலகிற்கு மாற்றீடு அல்ல. VR நீங்கள் இருக்கும் சூழலை முழுமையாக  மாற்றி ஒரு மாய உலகில் இருப்பது போன்ற தன்மையை மெய்நிகர் தன்மை அளிக்கிறது.

About admin

Check Also

Steps Recorder-Windows 10

Steps Recorder-Windows 10 விண்டோஸ் 10 இல்  ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் என்பது உங்கள் கம்பியூட்டரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *