Home / What is..? / What is Bitcoin?

What is Bitcoin?

பிட்கொயின் என்பது காகிதத்தில் அச்சிடப்படாத கண்ணுக்குப் புலப்படாத ஒரு மெய்நிகர் (Virtual Currency) நாணயமாகும். இது 2009 ஆம் ஆண்டில் சடோஷிநகமோட்டா என்பரால் அறிமுகப்படுத்தப்பட்டது. மின்னணு (digital) வடிவில் இருக்கும் பிட்காயின் நாணய கொடுக்கல் வாங்கல் அனைத்தும் இணையத்தின் ஊடாகவே நடைபெறுகின்றன. இந்த பிட்காயின் நாணயம் வழமையான பாரம்பரிய நாணயம் போன்று எந்த ஒரு வங்கியினாலோ அரசினாலோ கட்டுப்படுத்தப்படுவதில்லை. பதிலாக பிட்காயின் கணக்குகளை வைத்திருக்கும் பயனர்களின் வலையமைப்பினூடாக பிட்காயின்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்கிறார்கள்.  எந்த ஒரு வங்கியினாலோ அரசினாலோ கட்டுப்படுத்தப்படுவதில்லை. என்றாலும் ஏராளமான  நாடுகள் பிட்காயினை அங்கீகரித்துள்ளன.
பிட்காயின் நாணயங்களை இரண்டு வழிகளில் பெற முடியும். முதலாவது வழி வழமையான நானயங்களை பிட் காயினுடன் பறிமாற்றம் செய்வதாகும்.  கணினி மென்பொருள் மூலம் பிட்காயின்களை உருவாக்குதல் (பிட்காயின் மைனிங்) இரண்டாவது வழி முறையாகும்.
முதலாவது வழி முறையான வழமையான நாணயங்களை பிட் காயினுடன் பறிமாற்றம் செய்வதே பொதுவாக  அதிக பயன் பாட்டிலுள்ள முறையாகும்.  Mt. Gox மற்றும்  CampBX  போன்ற பிட்காயின் வர்த்தகத்திலீடுபடும் நிறுவனங்களின் இணைய தளங்கள் மூலம் உடனடியாக பரிவர்த்தனை செய்யலாம். இந்நிறுவனங்கள் வழமையான நாணயங்களான டொலர், யூரோ போன்ற வேறு நாணயங்களுக்கு பிட்காயினை வழங்குகின்றன.  அன்று முதல் இந்த பிட்காயின் சமூகம் அதிவிரைவாக வளர்ந்து வருகின்றது.
பிட்காயின்களைப் பெறும் இரண்டாவது வழி பிட்காயின் வலையமைப்பினால் உருவாக்கப்படும் கணித சமன்பாடுகளை கணினி மென்பொருளைப் பயன்படுத்தி தீர்ப்பதன் மூலம் பிட்காயின்களை உருவாக்குதலாகும். இதனை பிட்காயின் மைனிங் (Bitcoin mining)  எனப்படுகிறது.

ஒரு பிட்காயின் பயனர் கணித சிக்கல்களை தீர்க்கும்போது  அவரது கணக்கில் உரிய  பிட்காயின் வரவு வைக்கப்படும். இது பிட் காயின்களைப் பெறுவதற்கான ஒரு இலகுவான வழியாக இருப்பதால் மென்மேலும் கடினமான கணித பிரச்சினைகளை உருவாக்குமாறு பிட்காயின் வலையமைப்பு  வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக  ஒரு திடமான விகிதத்தில் பிட் காயின்கள் உருவாக்கப்படுவது உறுதி செய்யப் படுகிறது. மேலும் பிட்காயினில் பின்பற்றப்படும்  நெறிமுறைகளும் (protocol ) பிட் காயின் உருவாக்கும்  மென் பொருளும் ஒரு திறந்த மூல நிரல் open source  மென்பொருளாகவும் இருப்பதானல் பிட்காயின் வலை யமைப்பை எந்தவொரு தனி நபரலோ குழுவினராலோ கட்டுப்படுத்த முடியாமல்  இருப்பதையும் உறுதி செய்கிறது.

ஒருவர் பிட்காயினைப் பெறும்போது அவை பாதுகாப்பான மறைகுறியாக்கம்(encrypted)  செய்யப்பட்ட wallet  எனப்படும் அவரது பிட்காயின் கணக்கிற்குரிய பணப் பையில் வைப்பிலிடப்படுகிறது. பிட்காயினைப் பயன் படுத்தி இணையம் வழியே பொருட்கள் சேவைகளைப்  பெறும்போது இரு தரப்பினரதும் பிட்காயின் கணக்கு கள் பிட்காயின் வலையமைப்பில் வங்கிக் கணக்கைப் போல் (update)  இற்றைப் படுத்தப்படுகின்றன. இங்கு கொடுக்கல் வாங்கலை அனுமதிக்க மத்திய வங்கியின் ஆணைகள்  அவசியமில்லை.
பிட்காயின் நாணய பரிமாற்றத்திற்கு மிகக்  குறைவான தொகையே கட்டணமாக அறவிடப்படுகின்றன. மேலும் ஒருவர் பிட்காயின் கணக்கொன்றை உருவாக்கிக் கொள்வதற்கு எந்தவொரு முன் நிபந்தனைகளும் இல்லை.மேலும் கொடுக்கல் வாங்கலில் எல்லைகளும் நிர்ணயிக்கப்பட வில்லை.   .

பிட்காயின்களை உலக நாடுகள் எங்கும் பரிமாறிக் கொள்ள முடியும். எனினும் பிட்காயின் மூலம் பொருட்களையோ சேவையையோ பெறுவதாயின் பிட்காயின் நாணயங்களை ஏற்றுக் கொள்ளும் வணிகர்களிடமிருந்து மாத்திரமே பெற முடியும் .


பிட்காயின் தயாரிக்க உதவும் கணித சமன்பாடுகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட பல்வேறு மென்பொருட்கள் பயன் பாட்டிலுள்ளன. இவற்றை  இலவசமாக இணையத்திலிருந்து தரவிறக்கலாம். கணினிகளுக்கு  மட்டுமன்றி கையடக்கக் கருவிகளுக்காகவும் பிட்காயின் செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன.  

About Imthiyas Anoof

Check Also

What is NFT?

அண்மைக் காலங்கங்களில் NFT பற்றி அடிக்கடி செய்திகளைக் காணக் கிடைக்கிறது. NFT கள் பல மில்லியன் டாலர்களுக்கு விற்கப்படுவதாகவும் கேள்விப் …

Leave a Reply