Home / Hardware / What is Cache Memory?

What is Cache Memory?

What is Cache  Cache Memory எனறால் என்ன?

கணினியின் மூளையாகச் செயற்படும் ப்ரொஸெஸரின் (CPU) உள்ளேயோ அல்லது மத்ர்போர்டில் ப்ரோஸெஸ்ஸரின் அருகிலேயோ அமையப் பெற்றிருக்கும் ஒரு நினைவகமே (Cache Memory) கேஷ் மெமரி எனப்படுகிறது.

ஒரு ப்ரோக்ரமை இயக்குவதற்குத் தேவையான திரும்பத் திரும்பப் பயன் படுத்தப்படும் அறிவுறுத்தல்களை சேமிப்பதற்காகவே சிபியூ இந்தக் கேஷ் மெமரியைப் பயன் படுத்துகிறது. இதனால் கணினியின் வேகம் குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கிறது.

கணினியில் கேஷ் மெமரி பயன் படுத்தப்படுவதன் முக்கிய அனுகூலம் யாதெனில் டேட்டாவைக் கடத்துவதற்கென அமைக்கப் பட்டிருக்கும் மதர்போர்டில் உள்ள சிஸ்டம் பஸ் (system bus) எனும் பாதைகளைச் சீபீயூ பயன் படுத்த வேண்டிய தேவை அற்றுப் போகிறது.

சிஸ்டம் பஸ் ஊடாக டேட்டா பயணிக்கும்போது மதர்போர்டின் செயற்திறனுக்கமைய அதன் வேகம் குறைகிறது. சிஸ்டம் பஸ்ஸில் நெருக்கடி நிலை தோன்றும் சந்தர்ப்பங்களில் அதனைத் தவிர்த்துச் சீபீயூ கேஷ் மெமரியை அணுகி அதிக வேகத்தில் டேட்டாவைப் ப்ரோஸெஸ் செய்து விடுகிறது.

கேஷ் மெமரியில் இரண்டு வகைகளுள்ளன. சிபியுனுள்ளேயே இணைந்து வரும் கேஷ் மெமரியானது Level 1 (L1) cache எனவும் மதர்பொர்டில் வேறாகப் பொருத்தப்பட்டுள்ள கேஷ் மெமரியானது Level 2 (L2) cache. எனவும் அழைக்கப்படுகிறது.

சீபியுவினுள்ளேயே பொருத்தப்பட்டிருக்கும் கேஷ் மெமரியானது மதர் போர்டில் தனியாகப் பொருத்தப்பட்டிருக்கும் கேஷ் மெமரி சிப்பை விட வேகமாகச் செயற்படக் கூடியது. அதாவது ப்ரோஸெஸ்ஸரின் வேகத்திலேயே இது இயங்கும்.

What is Cache Memory

தனியாகப் பொருத்தப்படும் கேஷ் மெமரியானது பிரதான நினைவகமான் ரேம்மை விட இரண்டு மடங்கு வேகத்தில் இயங்கக் கூடியது. எனவே ப்ரோஸெஸ்ஸரிலேயே பொருத்தப் படும் கேஷ் மெமரியே சிறந்தது எனலாம்.

அதிக வேகம் கொண்ட சீபியூ வுடன் குறைந்தளவு கேஷ் மெமரியைப் பயன் படுத்தும்போது கணினி செயற் திறனில் மாற்றத்தை அவதானிக்க முடியாது. மாறாகக் குறைந்த சீபியு வேகத்துடன் அதிக கேஷ் மெமரியைக் பயன் படுத்தும் கணினிகளின் செயற் திறனில் அதிக மாற்றத்தை அவதானிக்க முடியும்.

சீபியுவில் பயன் படுத்தப்படும் கேஷ் மெமரி போன்றே ஹாட் டிஸ்கிலும் டிஸ்க் கேஷ் எனப்படும் தொழில் நுட்பம் பயன் படுத்தப் படுகிறது. அதாவது ஹாட் டிஸ்கிலிருந்து அடிக்கடி அணுகப்படும் டேட்டாவானது திரும்பத் திரும்ப ஹாட் டிஸ்கிலிருந்தே பெறப்படுவதைத் தவிர்த்து நினைவகத்தின் ஒரு பகுதியில் சேமிக்கப்படும்.

இங்கு ஹாட் டிஸ்கை விடவும் பிரதான நினைவகம் (RAM) வேகம் கூடியது என்பதனாலேயெ இவ்வாறு ரேமில் தேக்கி வைக்கப்படுகிறது, எனினும் இந்தத் தொழில் நுட்பம் எதிர் காலத்தில் மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தற்போது ஹாட் டிஸ்க் ஆனது ப்ளேஷ் மெமரி கேஷ் (flash memory) உடன் வெளி வர ஆரம்பித்துளளது. இந்த ப்ளேஷ் மெமரி ரேம்மை விடவும் வேகமாகச் செயற்படக் கூடியது

இதே ஆட்டிக்கல் கோராவில்

About Imthiyas Anoof

Check Also

Signs of hard disk failure வன்தட்டு பழுதடையப் போவதை கணிப்பது எப்படி?

ஹாட் டிஸ்கிலிருந்து வழமைக்கு மாறானா இரைச்சல் கேட்க ஆரம்பிக்கும்கணினி அடிக்கடி உரைந்து (Freeze) போகும் அல்லது செயலிழக்கும்ஹாட் டிஸ்கில் அதிகளவு Bad …

Leave a Reply