விண்டோஸ் இயங்கு தளத்துடன் வெளிவரும் ஒரு சிறியமென்பொருள் கருவியே கேரக்டர் மேப். இது விண்டோஸின் ஆரம்ப காலப் பதிப்பு முதல் தற்போதையவிண்டோஸ் 10 வரையிலானஅனைத்து பதிப்புகளிலும் இடம் பெறும் ஒரு பயனுள்ள யூட்டிலிட்டியாகும்.
கீபோர்டில் இல்லாத விசேட குறியீடுகளையும் பிற மொழி எழுத்துக்களையும் உள்ளீடு செய்யும் வசதியை இந்தக் கேரக்டர் மேப் தருகிறது. கேரக்டர் மேப்பானதுஎம்.எஸ்.வர்டில் இன்சர்ட் மெனுவின்கீழ் வரும் சிம்பல் (Symbol) எனும் கருவிக்குநிகரானது

தேவையான குறியீடுகளைடொகுயுமெண்டில் நுளைப்பதற்குமுதலில் கேரக்டர்மேப் விண்டோவில்உரிய குறியீட்டின்மேல் இரட்டை க்ளிக் செய்ய வேண்டும்அல்லது Select பட்டனில்க்ளிக் செய்து கொள்ள வேண்டும். பின்னர் Copy பட்டனில் க்ளிக் செய்ய விண்டோஸ் க்ளிப் போர்டில்(Clipboard) அது சேமிக்கப்படும்.
பின்னர் அதனை டொகுயுமெண்டில் சேர்ப்பதற்குகேரக்டர் மேப் விண்டோவை மினிமைஸ் செய்து விட்டு அதனைப் பிரதி செய்து கொள்ள வெண்டிய எப்லிகேசனைத் ஆரம்பிக்க வேண்டும்.. உதாரணமாக எம்.எஸ். வர்ட் ஆவணமொன்றில்ஒரு குறியீட்டைசேர்ப்பதற்கு அதனை நுளைக்க வேண்டிய இடத்திற்குகர்சரை நகர்த்திEdit மெனுவில் Paste தெரிவு செய்ய வேண்டும் அல்லது கீபோர்டில் Control + V அழுத்த வேண்டும்..
உங்களுக்குத் தேவையான விசேட குறியீடு குறிப்பிட்டஒரு எழுத்துருவில்இல்லையெனின் எழுத்துருவை மாற்றிக் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில்ஒன்றுக்கு மேற்பட்டகுறியீடுகளையும் தெரிவு செய்து கொள்ளலாம.
சிலகுறியீடுகளை கேரக்டர் மேப்பைத் திறக்காமலேயே கீபோர்டில் உள்ளஇலக்கங்களை டைப்செய்வதற்கென வரும்நியூமெரிக் கீபேட்(Numeric Keypad) மூலமாகவும் நுளைக்கலாம். சிலவிசேடகுறியீடுகளை நீங்கள் அடிக்கடி உபயோகிப்பவரானால் கேரக்டர் மேப்பைவிடவிரைவாக அதனைப்பெற்றுக் கொள்ளலாம். ஆனால்அந்தகுறியீட்டுக்குரிய இலக்கத்தினை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு குறியீட்டினையும் குறிக்கும் இலக்கங்களை (Keystroke) அக்குறியீட்டினைத் தெரிவுசெய்யும்போது கேரக்டர் மேப்பின் வலதுபக்கமூலையில் காண்பிக்கப்படும்.
நியூமெரிக் கீபோட்மூலமாககுறியீடுகளை நுளைக்கும்போது கீபோர்டில் உள்ளNum Lock கீயைOn நிலையில் வைப்பதோடு ‘Alt’ கீயை அழுத்தியவாறே உரியஇலக்கத்தை டைப்செய்யவேண்டும்.