Home / What is..? / What is Chipset?

What is Chipset?

Chipset  என்றால் என்ன?

PRO%2B28

கணினியின் மூளையாகச் செயற்படுவது சிபியூ (CPU) என்பதை நீங்கள் அறிவீர்கள்.. அதேபோன்று கணினியின் இதயமாகச் செயற்படுவது எது என்பதை அறிவீர்களா? அதுதான் மதர்போர்டில் சிபியூவிற்கு அருகே பொருத்தப்பட் டிருக்கும். (Chipset) சிப்செட். எனும் மைக்ரோ சிப் ஆகும். கணினியில் சிபியூ, மெமரி, ஹாட் டிஸ்க் என்பன எவ்வகையான பணிகளை மேற்கொள்கின்றன என்பதைப் பலரும் அறிந்திருப்பர். எனினும் இந்த சிப்செட் என்றால் என்ன அதன் முக்கியத்துவம் என்ன என்பதை அனேகர் அறிந்திருப்பதில்லை. (சிப்செட் என்பதில் உள்ள ‘சி’ யிற்கு முன்னாள் ஒரு ‘ச்’ சேர்த்து உச்சரியுங்கள்)..,

சிப்செட் என்பது அதன் பெயருக்கேற்றவாறு பல மைக்ரோசிப்ஸ்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட தனியொரு (Microchip அல்லது IC-Integrated Circuit) சிப்பாகும்.. இது மத்ர்போர்ட் இயங்குவதற்கான அனைத்து மின்சுற்றுக்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. மத்ர்போடில் சிப்செட் என்பது இல்லாவிட்டடல் அதன் பாகங்களிடையே தொடர்பாடலை மேற்கொள்ள முடியாது போய்விடும். .

ஆரம்ப கால தனி நபர் கணினி மதர்போர்டுகளில் ஒவ்வொரு செயற்பாட்டிற்க்குமென தனியான சிப்ஸ்கள பொருத்தப்பட்டு வெளிவந்தன. எனவே கணினியை இயங்க வைப்பதற்குத் தேவையான மின்சுற்றை உருவாக்குவதற்கு ஏராளமான சிப்ஸ்கள் தேவைப்பட்டதோடு மதர்போர்டின் அளவும்கூட பெரிதாக இருந்தது..

PRO%2B29

பின்னர் சிப் தயாரிப்பாளார்கள் பல சிப்ஸ்களை ஒரு பெரிய சிப்பாக ஒன்றிணைத்து வடிவமைத்தனர். பல சிறிய சிப்ஸ்களுக்குப் பதிலாக ஒரு சில பெரிய சிப்ஸ்களைக் கொண்டு மத்ர்போர்டை உருவாக்கினர். இவ்வாறு பல சிப்புகளை ஒன்றி ணைக்கும் தொழிற் நுட்பம் படிப்படியாக வளர ஆரம்பித்ததும் பல சிப்புகளுக்குப் பதிலாக இரண்டு பெரிய சிப்ஸ் அல்லது ஒரே ஒரு பெரிய சிப்பைக் கொண்டு மத்ர்போர்டுகள் அறிமுகமாகின.

சிப்செட்டுகளை Intel, VIA, SiS, ATI, NVIDIA, OPTi என பல நிறுவனங்கள் தயாரிக்கின்றன. Intel நிறுவனம் தயாரிக்கும் ப்ரோஸெஸ்ஸர் போன்று அதன் சிப்செட்டும் அதிக பிரசித்தம் பெற்றது. மத்ர்போட் தயாரிக்கும் நிறுவனங்களே சிப்செட்டுகளையும் தயாரிப்பதாக நீங்கள் எண்ணக் கூடாது.. உதாரண்மாக ஒரு மதர்போட் தயாரிக்குக் நிறுவனம் இண்டெல் நிறுவனத்தின் சிப்செட்டை தமது மதர்போர்டில் பயன்படுத்தியிருக்கலாம். இதற்காக அந்த மத்ர்போர்டை இண்டெல் நிறுவனமே தயாரித்ததாக தவறான எண்ணி விடாதீர்கள்.

மத்ர்போட் தயாரிக்கும் நிறுவனங்களில் ASUS, Gigabyte, MSI, Shuttle, Intel என்பன சில முக்கியமானவையாகும். இவற்றுள் Intel தவிர ஏனைய நிறுவனங்கள் சிப் செட் தயாரிப்பாளர்களிடமிருந்து சிப்செட்டை வாங்கி தமது மத்ர்போர்டை உருவாக்குகின்றன.

கணினியின் செயற் திறனில் சிப்ட்செட் என்பதன் பங்குதான் என்ன?

ஒரு கணினி வாங்கும்போது நாம் ப்ரோஸெஸ்ஸர், மெமரி, ஹாட் டிஸ்க் என்பவற்றிற்கு மாத்திரமே முக்கியத்துவம் கொடுக்கிறோம். கணினியில் பொருத்தப்பட்டுள்ள மதர்போட் என்ன, அதிலுள்ள சிப் செட் ரகம் என்ன, அது எவ்வகையான ப்ரோஸெஸ்சர்கலை ஆதரிக்கும்., எந்த அளவிலான நினைவகத்தை ஆதரிக்கும் என்பன போன்ற விடயங்களையிட்டு நாம் கவலைப் படுவதில்லை. ஆனால் இந்த சிப்செட்டே நாம் பயன் படுத்தக் கூடிய ப்ரோஸெஸ்ஸர், மெமரி, ஹாட் டிஸ்க் என்பவற்றின் வேகம் கொள்ளளவு என்பவற்றைத் தீர்மானிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

SEE MORE  What is Word Verification?

ப்ரோஸெஸ்ஸர், நினைவகம், உள்ளீடு மற்றும் வெளியீடு செய்யும் சாதனங்கள் போன்றவற்றினிடையே தொடர்பாடலை மேற்கொள்வதிலும் டேட்டா பரிமாற்ற வேகத்தைத் தீர்மானிப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் சிப்செட்டுகள் பிரதான பங்கு வகிக்கின்றன.

கணினியில் ஒவ்வொரு பாகங்களிடையே டேட்டா செல்லும் பாதையானது பஸ் (Bus) எனப்படுகிறது,. இந்தப் பாதையில் நெருக்கடி நிகழாமல் சிப் செட்டிலுள்ள பிரிட்ஜ் (Bridge) எனும் பகுதி கவனிக்கிறது. இந்த Bridge இரண்டு பிரதான சிப்புகளைக் கொண்டுள்ளது. இவை North Bridge, South Bridge என அழைக்கப்படுகின்றன. சில சிப் தயாரிக்கும் நிறுவனங்கள் இரண்டு பிரிட்ஜுகளையும் ஒரே ஒரு பெரிய சிப்பாகவும் உருவாக்கி விடுவார்கள். இநத இரண்டு சிப்புகளின் செயற்பாடும் ஒரு கணினியியை இயங்க வைக்க அத்தியாவசியமானவையாகும் இவை இரண்டிலும் ஒரு கணினியின் செயற்பாட்டில் North Bridge மிக முக்கிய பங்காற்றுகிறது. இது சிபியுவுடன் நேரடியாக இணைக்கப் பட்டிருக்கும். சிபியு மற்றும் நினைவகத்தினிடையே தொடர்பாடலை மேற்கொள்ள North Bridge உதவுகிறது. சிபியூ வானது பிரதான நினைவகத்தையோ அல்லது வீடியோ கார்டைடோ நேரடியாக அணுகுவதில்லை. நோத் பிரிட்ஜே மூலமாகவே அப்பகுதிகளை அணுகுகிறது. ப்ரோஸெஸ்ஸசரின் வகை, அதன் வேகம், நினைவகத்தின் வகை, அதன் அள்வு போன்றவற்றையும் North Bridge தீர்மானிக்கிறது.

South Bridge ஆனது சிபியுவுடன் நேரடியாக இணைக்கப்படுவதில்லை. இது North Bridge உடன் தொடர்புற்றிருக்கும் அதே வேளை கணினியில் உள்ளீடு மற்றும் வெளியீட்டு சாதனங்களுக்குப் பொறுப்பாகப் பணியாற்றுகிறது.

PRO%2B30

உங்கள் கணினியில் பொருத்தப்பட்டுள்ள சிப்செட்டின் வகையென்ன என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா? விண்டோஸ் எக்ஸ்பீ இயங்கு தளத்தில் சிப்செட் விவரங்களைப் பார்வையிடுவதற்கு மை கம்பியூட்ட்ர் ஐக்கன் மேல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் Properties தெரிவு செய்யுங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில் ஹாட்வெயார் டேபின் கீழ் Device Manager தெரிவு செய்து அங்கு System devices என்பதற்கு இடப்புறம் உள்ள (+) குறியீட்டில் க்ளிக் செய்து அதனை விரித்தால் அங்கு ALI, AMD, Intel, NVidia, VIA, SIS என ஏதேனும் ஒரு சிப்செட் வகையின் பெயரைக் காண்லாம். சிப்செட் ட்ரைவர் முறைப்படி நிறுவியிருந்தால் மாத்திரமே இந்த விவரங்களைக் காண்பிக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

-அனூப்-

About Imthiyas Anoof

Check Also

cap1

என்ன இந்தக் கேப்ச்சா – CAPTCHA?

  இணையம் தளங்களைப் பார்வையிடும்போது நாம் அடிக்கடி  காண்பவறறில்; விடயங்களில் கேப்ச்சா (CAPTCHA)  சோதனையும் அடங்கும். ஒரு ஆன்லைன் கணக்கை உருவாக்கும் போதோ, சமூக வலைத்தளங்களில் பின்னூட்டமிடும்போதோ …

3 comments

  1. plz tell me how i can send fax from computer through internet.
    tnx

  2. pls tell me about how can i add my webage named alighar.blogspot.com. at google browser

  3. முழுமையான தெளிவான விளக்கம். புதிதாக கணினி கற்பவர்களுக்கு இது மிகப்பெரிய தகவல்.

    தொடரட்டும் தங்க திருப்பணி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page கொப்பி பன்ணாதீங்க  அய்யா. சுயமா எழுதுங்க