Home / General / What is DNS?

What is DNS?

What is DNS? நீங்கள் தமிழ்டெக்(.lk) தளத்திற்குப் பிரவேசிக்க நினைத்து http://tamiltech.lk என address bar இல் டைப் செய்கிறீர்கள். ஆனால் நிஜமான தமிழ்டெக் தளத்திற்குப் பதிலாக வேறொரு தளத்தையே உங்களது பிரவுசர் காண்பிக்கிறது. இது போன்ற அனுபவம் உங்களில் சில பேருக்குக் கிடைத்திருக்கலாம். இதற்குக்காரணம் என்ன என நீங்கள் அறிய முன்னர் DNS பற்றி சிறிது அறிந்து கொள்ள வேண்டும்.

இணைய சேவைகளில் ஒன்றான world wide web எனும் சேவைக்கு DNS என்பது அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது. மனிதரால் புரிந்து கொள்ளக் கூடிய சொற்களைக் கொண்ட இணையதள முகவரிகளை கணினியால் புரிந்து கொள்ளக் கூடியவாறு இலக்கங்களைக் கொண்ட ஐபிமுகவரிக்ளாக (IP address) மாற்றுவதில் DNS சர்வர்கள் பின்னணியில் இயங்கி தமது பங்களிப்பைச் செய்கின்றன.

What is DNS?

DNS என்பது Domain Name System என்பதைக் குறிக்கிறது. Domain Name என்பது மனிதரால் புரிந்து கொள்ளக்கூடிய சொற்களே. இவை இணையதள முகவரிகளையே குறிக்கின்றன. உதாரணமாக கூகுல் தளத்தின் டொமேன் பெயர் Google ஆகும். கூகுல் தளத்தைப் பார்வையிட google .comஎன நீங்கள்பிரவுசரில் டைப் செய்யவேன்டும். இநத டொமேன் பெயர் எனும் சொற்களுக்குப் பின்னணியில் இலக்கங்களிலான ஐபி முகவரிகளே உள்ளன. இலக்கங்களிலான ஐபி முகவரிக்குப் பதிலாக சொற்களிலான டொமேன் பெயர்களைப் பயன் படுத்துவதன்காரணம் இலக்கங்களைவிட சொற்களை எம்மால் இலகுவாக நினைவில் கொள்ளமுடியும் என்பதே.

எனினும் உங்கள் கணினிக்கு கூகுல் தளம் உலகலாவிய வலைத் தளத்தில் எந்த வெப்சேர்வரில் இருக்கிறது என்பது தெரியாது. Google எனும் டொமேன் பெயருக்குப் பின்னணினியில் 173.194.39.78 எனும் ஐபிமுகவரி உள்ளது. அதாவது Google தளம் இணையத்தில் 173.194.39.78 எனும் ஐபி முகவரிகொண்ட சேர்வரில் அமையப் பெற்றுள்ளது.. பிரவுஸரில் Google என்பதற்குப் பதிலாக இந்த ஐபிமுகவரியை வழங்குவதன் மூலமும் கூகுல் தளத்தை அடைய முடியும். கூகுல் மட்டுமன்றி எந்தவொரு இணையதளத்தையும் அதன் ஐபி முகவரி மூலம் அடைய முடியும்.

இங்கு DNS சர்வர்கள் ஒரு தொலைபேசி விவரக்கொத்தைப் போல் செயற்படுகிறது. அதாவது நாம் வழங்கும் டொமேன் பெயருக்குரிய ஐபி முகவரியைக் கண்டறிந்து பிரவுஸருக்குக்ச் சொல்லி விடுகிறது.

பிரவுசரில் google .com என டைப்செய்யும் போது கணினி உங்கள் தற்போதைய DNS சர்வரை தொடர்பு கொண்டு google .com ற்குரிய ஐபி முகவரியை வேண்டுகிறது. பீன்னர் DNS சேர்வர் வழங்கும் அந்த ஐபிமுகவரியை அடைந்து கூகுல் தளத்தை பிரவுஸரில் காண்பிக்கிறது, இந்த செயற்பாடு எமது குறுக்கீடு இல்லாமல் கணப் பொழுதில் நடை பெற்று முடிகிற்து.

இந்த DNS சர்வர் கணினிகள் உங்களுக்கு இணைய இணைப்பு வழங்கும Internet service provider (ISP) நிறுவனத்தில இருக்கும். இவ்வாறான பல்லாயிரம் DNS சேர்வர்கள் இணையத்தில்உள்ளன.

DNS சேர்வர் வழங்கும் ஐபி முகவரி மற்றும் விவரங்களை உங்கள் கணினி அவ்வப்போது பிரவுசரில் (ஹாட் டிஸ்கில்) சேமித்து விடும். எனவே ஒவ்வொருமுறையும் நீங்கள் கூகில் தளத்தை அணுகும் போது உங்கள் பிரவுசர் DNS சர்வரை அணுகாது. ஏற்கனவே சேமித்து வைத்துள்ள விவரங்களின் உதவி கொண்டு கூகுல் தளத்தை பிரவுசரில் காண்பிக்கும். இதன் காரணமாக தொடர்பாடல் வேகம் ஓரளவு அதிகரிக்கிறது.

சில வேளை வைரஸ் போன்ற கணினி நச்சுநிரல்கள் உங்கள் கணினிக்குரிய DNS சேர்வர் முகவரியை மாற்றி வேறொரு தீய நோக்கம் கொண்ட ஒரு நிறுவனத்தின் DNS முகவரியை அடையுமாறு செய்து விடும். இந்த DNS சர்வரானது ஒருபிரபல்யமான ஒரு இணைய தளத்திற்க்குப் பதிலாக வேறொரு ஐபி முகவரிக்கு உங்கள் கணினியை திசை திருப்பி விடும் சாத்தியம் உள்ளது.

அதாவது நான் ஆரம்பத்தில் சொன்னதுபோல http://tamiltech.lk எனும் முகவரியை நீங்கள் வழங்க வெறொரு போலியான தளத்தை உங்கள்பிரவுஸர் காண்பிக்கும். எனினும் பிரவுசர் முகவரி பட்டையில் http://tamiltech.lk என்றே இருக்கும்.

சில வருடங்களுக்கு முன்னர் DNSChanger எனும் வைரஸ் இணையத்தில் இணையும் கணினிகள் அனைத்தையும் முடக்கப் போகின்றன என பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

இதே அட்டிக்கல் கோராவில்

About Imthiyas Anoof

Check Also

Steps Recorder-Windows 10

Steps Recorder-Windows 10 விண்டோஸ் 10 இல்  ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் என்பது உங்கள் கம்பியூட்டரில் …

Leave a Reply