Home / General / What is DuckDuckGo டக் டக் கோ எனும் ….

What is DuckDuckGo டக் டக் கோ எனும் ….

What is DuckDuckGo டக் டக் கோ (DuckDuckGo) என்பது தனியுரிமை (privacy) பாதுகாப்பை மையமாகக் கொண்ட ஒரு தேடற்பொறி. இது கூகுல், பிங் மற்றும் யாகூ போன்று  உங்கள் நடவடிக்கைகளைக்  கண்காணிப்பதில்லை. அதன் காரணமாக  இந்த மாற்று தேடுபொறி  வேகமாக வரவேற்பைப் பெற்று வருகிறது.

டக் டக் கோ தேடற்பொறியைப் பயன்படுத்த, நீங்கள் google.com அல்லது bing.com க்கு பதிலாக duckduckgo.com எனும் தளத்திற்குச் செல்ல வேண்டும்.  அங்கு வழக்கம்போல தேடலை ஆரம்பிக்கலாம். ஆனால் டக் டக் கோ உங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பதாகவும் உங்களைக் கண்காணிப்பதில்லை என்றும் உறுதியாக்க கூறுகிறது.

குரோம், சஃபாரி, பயர்ஃபாக்ஸ் மற்றும் எட்ஜ் போன்ற உலாவிகளில் டக் டக் கோவை உங்கள் இயல்புநிலை (default) தேடுபொறியாகவும்  மாற்றலாம். அப்போது இணைய உலாவியில் புதிய டேபை எடுக்கும்போது  Google க்கு பதிலாக DuckDuckGo க்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.

DuckDuckGo இயல்புநிலை விருப்பங்களில் ஒன்றாக நவீன வலை உலாவிகளில் கட்டமைக்கப்பட்டுள்ளது, மேலும் DuckDuckGo  விலிருந்து மாறுவதும் கூட இலகுவான செயற்பாடுதான்.  

DuckDuckGo கூகுல் போன்றதுதான். இதன் மூலம் வலைத்தளங்கள், படங்கள், வீடியோக்கள், செய்தி கட்டுரைகள் மற்றும் ஷாப்பிங் வலைப்பக்கங்களைத் தேடலாம். மேலும் இது ஆப்பிள் மேப்ஸினால் (Apple Maps) இயக்கப்படும் வழிசெலுத்தலுடன் (navigation) உள்ளமைக்கப்பட்ட வரைபடங்களைக் கொண்டுள்ளது. இது கூகுள் போன்றே அகராதி (dictionary)  முடிவுகள், விக்கிபீடியா ஒருங்கிணைப்பு மற்றும் பிற உடனடி பதில்களைக் கொண்டுள்ளது.

எனினும், கூகிள் தரும்  அதே தேடல் முடிவுகளை டக் டக் கோ வழங்காது. DuckDuckGo இன் முடிவுகள் வித்தியாசமாக இருக்கும்.

DuckDuckGo உங்கள் தனியுரிமையை எவ்வாறு பாதுகாக்கிறது?

கூகுலலைப் பயன் படுத்த வேண்டுமானால் ஒரு கணக்கை account உருவாக்க உங்களைப் பரிந்துரைக்கிறது. மேலும் கூகுலில் உங்கள் தேடல்களின் வரலாறு (history) இயல்புநிலையாக (default)உங்கள் Google செயல்பாட்டில் Google Activity இல்  சேமிக்கப்படுகிறது. உங்கள் தேடல் முடிவுகளைத் தனிப்பயனாக்க (customize)  கூகுல் உங்கள் செயல்பாட்டைப் பயன்படுத்துகிறது. அதன் மூலம் தனிப்பயனாக்கப்பட்ட , பொருத்தமான தேடல் முடிவுகளை வழங்க கூகுல் முயற்சிக்கிறது. நீங்கள் கூகுல் கணக்கில் உள்நுழையாவிட்டாலும் (sign in) என்றாலும், கூகுல் உங்கள் தேடல் வரலாற்றை (ஹிஸ்டரி) நினைவில் வைக்க உலாவி குக்கீ ஃபைலுடன் (cookie) இணைக்கிறது.

What is DuckDuckGo

எனினும் DuckDuckGo உங்கள் தேடல் வரலாற்றை பதிவு செய்வதில்லை. இல்லை. DuckDuckGo நிறுவனத்தின் கூற்றுப்படி, அதன் சேவையக பதிவுகளில் தேடலுடன் தொடர்புடைய ஐபி முகவரியைக் கூட பதிவு செய்யாது. DuckDuckGo கணக்கு போன்ற எதுவும் இல்லை, மேலும் DuckDuckGo தேடல் வரலாற்றை தனிப்பயனாக்கப்பட்ட குக்கீயுடன் இணைக்காது.

இது உங்களைப் பற்றிய எந்த தகவலையும் கண்காணிக்காததால், உங்கள் உலாவலின் அடிப்படையில் தனிப்பயனாக்கப்பட்ட தேடல் முடிவுகளையும் டக் டக் கோ வழங்காது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மற்றவர்களுக்குக் காண்பிக்கும் அதே வித்தியாசமான தேடல் முடிவுகளைத்தான் உங்களுக்கும் காண்பிக்கும். “

DuckDuckGo தேடற்பொறியை டெஸ்க்டாப் கணினியில் duckduckgo.com தளத்திற்குச் சென்று அணுக முடிவதோடு வெவ்வேறு இணைய உலாவிகளுக்கான நீட்சிகளும் (extension) கிடைக்கின்றன. மேலும் அண்ட்ராயிட் மற்றும் ஐ.ஓ.எஸ் கருவிகளுக்குமான தனியான செயலிகளும் உள்ளன.

DuckDuckGo அதன் முடிவுகளை பிங் (Bing)மற்றும் 400 க்கும் மேற்பட்ட வேறு பல மூலங்களிலிருந்து பெறுகிறது. எடுத்துக்காட்டாக, சில “உடனடி பதில் Instant Answer” முடிவுகள் விக்கிபீடியாவிலிருந்து வருகின்றன. எனினும் கூகிளில் இருந்து எதுவும் எடுப்பதில்லை.”

டக் டக் கோ வின் பெரும்பாலான தேடல் முடிவுகள் பிங் தேடற் பொறியின் தரவிலிருந்து பெறப்படுகின்றன எனினும் டக் டக் கோ என்பது வெறும் பிங் தேடற்பொறி அல்ல. அதனை விட அதிகம் தேடல் முடிவுகளைத் தரக்கூடியது. ஆனால் டக் டக் கோ தனது கூட்டாளர்களுடன் (partners) தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் பகிர்ந்து கொள்ளாது என்று கூறுகிறது.

நீங்கள் டக் டக் கோவில் தேடும்போது, டக் டக் கோவின் சேர்வர்கள் (servers) பிங் மற்றும் அதன் பிற கூட்டாளர்களுடன் (partners) தொடர்பு கொள்கின்றன. எனினும் அந்த கூட்டாளர்களால் உங்கள் ஐபி முகவரியைக் கூட காண முடிவதிவில்லை அல்லது உங்களைப் பற்றி எதுவுமே அவர்களுக்குத் தெரியாது. அதனால் அவர்களால் தனிநபர்களைக் கண்காணிக்க முடியாது.

DuckDuckGo தேடற்பொறி சேவை இலவசம்தான். ஆனால் அதுவும் விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கிறது. எனினும் இந்த விளம்பரங்கள் (personalized) தனிப்பயனாக்கப்படவில்லை. அவை தனிப்பட்ட தேடல்களுடன் தொடர்புடையவை. எனவே, நீங்கள் “laptop” பற்றித் தேடும்போது, தேடல் முடிவுகளில் மடிக்கணினி விளம்பரங்களைக் காண்பீர்கள். பின்னர், நீங்கள் “mobile phone” என்று தேடும்போது, “மொபைல்போன் விளம்பரங்களைக் காண்பீர்கள். எனினும் உங்களைப் பின்தொடரும் மடிக்கணினி விளம்பரங்களை தொடர்ந்து காண மாட்டீர்கள்.

டக் டக் கோ தேடற்பொறி 2008 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. டக் டக் கோ நிறுவனம் அமெரிக்காவில் பென்சில்வேனியாவின் (Pennsylvania) மாநிலத்தில்  Paoli, Pennsylvania, United States பாவ்லியைச் உள்ளது, மேலும் ஜனவரி 2021 வரை உலகம் முழுவதும் வெறும் 124 ஊழியர்களையே இந்நிறுவனம் கொண்டுள்ளது

டக் டக் கோவின் முடிவுகள் முன்னரைவிட இப்போது விட சிறப்பாக உள்ளன. உங்கள் தேடல்களைத் தனிப்பட்டதாக வைத்திருக்க விரும்பினால், பெரிய நிறுவனங்களுக்குச் சொந்தமான தேடற்பொறி சேவைகளை விலக்கி விட்டு , நீங்கள் முயற்சிக்க வேண்டிய தேடுபொறி தான் டக் டக் கோ.

About admin

Check Also

Steps Recorder-Windows 10

Steps Recorder-Windows 10 விண்டோஸ் 10 இல்  ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் என்பது உங்கள் கம்பியூட்டரில் …

Leave a Reply