Home / What is..? / What is Encryption?

What is Encryption?

What is Encryption? என்கிரிப்ஷன் (encryption) என்பது தரவுகளைப் பிறரால் கண்டறியப்பட முடியாத வேறொரு வடிவத்திற்கு மாற்றும் செயற்பாட்டைக் குறிக்கிறது. இது பொதுவாக அதிக உணர் திறன் மிக்க (sensitive) தகவல்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயெ பயன் படுத்தப்படுகிறது.

டேட்டாவை என்க்ரிப்ட் செய்வதன் மூலம் அதிகாரம் பெற்ற நபர்கள் மாத்திரமே அதனைப் பார்க்க முடியும். இந்த டேட்டா என்பது எமது கணினியின் தேக்கி வத்திருக்கும் ஃபைல்களாவோ அல்லது வலையமைப்பு மற்றும் இணையத்தினூடாக அனுப்பப்படுபவையாகவோ இருக்கலாம்.

ஒரு ஃபைல், ஃபோல்டர் அல்லது முழுமையான ஹாட்டிஸ்க் பாட்டிசனையும் GnuPG, AxCrypt போன்ற கருவிகளைப் பயன் படுத்தி என்க்ரிப்ட் செய்ய முடியும். ஃபைல்களைச் சுருக்குவதற்காகப் பயன் படும் 7-Zip எனும் கருவியையும் கூட என்க்ரிப்ட் செய்யப் பயன் படுத்தலாம்.

என்க்ரிப்ட் செய்யப்பட்ட ஃபைல் வழமையான தோற்றத்தில் காணப்படாது. அந்த ஃபைலைத் திறந்து பார்ப்பதற்கு முதலில் அதனை டீகிரிப்ட் (decryption) செய்ய வேண்டும். ஒரு பாஸ்வர்டை வழங்கியே டீகிரிப்ட் செய்ய முடியும். இந்தப் பாஸ்வர்ட் அந்த ஃபைலை அணுக அதிகாரம் பெற்றவர்கள் மாத்திரமே அறிந்தவர்களாயிருப்பர்,

இணையத்தில் கடத்தப்படும் உணர் திறன் மிக்க டேட்டா என்க்ரிப்ட் செய்யப்பட்டே அனுப்பப்படுகின்றன. அதேபோல் வைஃபை எனும் கம்பியில்லா தொடர்பாடலிலும் டேட்டா WEP எனும் என்க்ரிப்சன் முறை பயன் படுத்தப்படுகிறது.

பல இணைய தளங்கள் மற்றும் ஆன்லைன் சேவைகள் வழங்கும் நிறுவனங்களும் என்க்ரிப்ட் தொழிநுட்பத்தைப் பயன் படுத்துகின்றன. உதாரணமாக “https://” என ஆரம்பிக்கும் இணைய தளங்கள் SSL (Secure Sockets Layer) எனும் என்கிரிப்ட் முறையைப் பின்பற்றுகின்றன. இதன் மூலம் அந்தச் சேவையை வழங்கும் சர்வர் கணினிக்கும் உங்கள் கணினி வெப் பிரவுசருக்கும் இடையில் நடைபெறும் டேட்டா பரிமாற்றம் பாதுகாப்பாக நடை பெறுகிறது. மேலும் மின்னஞ்சல் சேவைகளை வழங்கும் நிறுவனங்களும் கூட டேட்டாவை என்க்ரிப்ட் செய்தே பரிமாறுகின்றன.

What is Encryption?
What is Encryption?

இவை அனைத்தையும் விட நம் எல்லோருக்கும் பரிச்சயமான வாட்சப் செயலியில் அனைத்து செய்திகளும் என்கிரிப்ட் செய்யப்பட்டே அனுப்பப்படுகின்றன. அவ்வாறு என்கிரிப்ட் செய்யப்படும் தகவல்களை வாட்சப் நிறுவனத்தினரால் கூடப் பார்க்க முடியாது என்பதை வாட்சப்பும் அடிக்கடி திரையில் காண்பிப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

வாட்சப் மாத்திரமன்றி, வைபர் மற்றும் ஃபேஸ்புக் மெஸ்ஸெஞரிலும் செய்திகள் என்கிரிப்ட் செய்யப்பட்டே அனுப்பப் படுகின்றன.

தற்போது அடிக்கடி இணையத்தில் பார்க்கக் கூடியதாயிருக்கும் Cryptocurrency கிரிப்டோகரன்சி எனும் டிஜிட்டல் நாணயம் கூட encryption தொழிநுட்பத்தைப் பயன் படுத்துகின்றன.அந்தப்பெயர் கூட encryption அல்லது அதற்குக் கிட்டிய cryptography எனும் வார்த்தையிலிருந்தே பிறந்திருக்கிறது.

என்கிரிப்ஷன் என்பது புதிதாக அறிமுகமான விடயமல்ல அல்ல. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் கூட யுத்த களங்களில் தகவல்களை என்கிரிப்ட் செய்தே பரிமாறியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

இதே ஆட்டிக்கல் கோராவில்

About admin

Check Also

What is NFT?

அண்மைக் காலங்கங்களில் NFT பற்றி அடிக்கடி செய்திகளைக் காணக் கிடைக்கிறது. NFT கள் பல மில்லியன் டாலர்களுக்கு விற்கப்படுவதாகவும் கேள்விப் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *