What is Google Doodle கூகுல் தேடற்பொறியின் லோகோவை இணைய பயனர் எவரும் இலகுவில் மறக்கமாட்டார்கள். எனினும் சில நாட்களில் இந்த வழமையான லோகோவிற்குப் பதிலாக வெறொரு லோகோவினை கூகுல் தளத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதை அவதானித்திருப்பீர்கள். சிலவேளை அது ஒரு எனிமேசன் படமாகவும் இருக்கும். இதனையே கூகுல் டூட்ல் (doodle) எனப் படுகிறது.

இந்த கூகுல் டூட்ல் சில விசேட தினங்களிலும், புகழ் பெற்ற நபர்களை நினைவு கூர்வதற்காகாவும், உலகில் சில விசேட நிகழ்வுகள் நடைபெறும் போதும் கூகுல் தளத்தில் இடம்பெறும். மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கூகுல் டூட்ல் இரண்டொரு தினங்கள் மட்டுமே கூகில் தளத்தில் நீடிக்கும். பின்னர் வழமையான லோகோவைக் காண்பிக்கப்படும். எனினும் முன்னர் பதிவிட்ட கூகுல் டூட்ல்கள் அனைத்தையும் கூகுல் தனது வேறொரு இணைய பக்கத்தில் வெளியிட்டுவருகிறது. அவற்றை www.google.com/doodles/ எனும் பக்கத்தில் காணலாம். கூடவே அவை பற்றிய மேலதிக தகவல்களையும் கூகுல் இங்கு வெளியிட்டுவருகிறது.