Home / Hardware / What is Graphic Card?கிராபிக்ஸ் கார்ட் என்றால் என்ன?

What is Graphic Card?கிராபிக்ஸ் கார்ட் என்றால் என்ன?

What is Graphic Card நீங்கள் கணினியில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் பார்க்க உங்கள் மானிட்டரை செருகுவதற்கு கிராஃபிக்ஸ் கார்ட் என பொதுவாக அழைக்கப்படும் பகுதி உங்களுக்கு அவசியம். கிராபிக்ஸ் கார்ட் (அட்டை) என்பது கணினியில் ஒரு விரிவாக்க (expansion) அட்டையாகும். இது ஒரு வன்பொருள் (ஹார்ட்வேர்) தான். இதனை VGA Card (VGA Video Graphics Array), வீடியோ அட்டை (Video Card) காட்சி அட்டை Display Card, என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வீடியோ அட்டையில் இருக்கும் வி.ஜி.ஏ போர்டிலேயே மானிட்டர் இணைக்கப்படுகிறது. தற்காலத்தில் ஹெச்.டி.எம்.ஐ (HDMI), (DVI) டி.வி.ஐ வகை போர்டுகளும் பயன் பாட்டில் உள்ளன..

உங்கள் வெளியீட்டு சாதனத்தில் அல்லது மானிட்டரில் காண்பிக்கக் கூடியவாறு அனைத்து படங்களையும் வெளியீட்டையும் ப்ராசஸ் செய்து உருவாக்குவதே கிராபிக்ஸ் அட்டையின் முக்கிய பணி.

முன்னர் இந்த கிராபிக்ஸ் அட்டை அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டு (Printed Circuit Board ) வடிவத்தில் தயாரிக்கப்பட்டு மதர்போர்டுடன் உட்பொதிந்திருக்கும்.

ஆனால் கிராபிக்ஸ் தேவைகள் அதிகரிப்பு மற்றும் முப்பரிமான உருவங்கள், வீடியோ விளையாட்டுக்கள் என பயன் பாடுகள் அதிகரித்திருப்பதால் தனியான கிரேபிக் அட்டைகள் தயாரித்து கணினியில் பொருத்தப்படுகின்றன. இதனை Dedicated Graphic Card எனவும் அழைப்பார்கள்.

இந்த கிராபிக்ஸ் அட்டையில் ஜி.பீ.யூ (GPU – Graphic Processing Unit)) எனும் ஒர் அலகு உட்கார்ந்திருக்கிறது. ஜி.பீ.யூ என்பது ஒரு சிறப்பு மின்னணு சுற்று (electronic circuit) ஆகும்.

இந்த ஜி.பீ.யூ வே படங்கள் மற்றும் கிராபிக்ஸ் தொடர்பான உண்மையான செயலாக்கத்தை (process) செய்கிறது. ஜி.பீ.யூ பிரதான செயலியான CPU வின் பணிச்சுமையைக் குறைக்கிறது.

ஒரு கணினியின் அனைத்து செயல்பாடுகளும் மத்திய செயலாக்க அலகு எனும் CPU (Central Processing Unit) செயலியால் கையாளப்படுகின்றன. இந்த CPU க்கள் ஒரே நேரத்தில் பல செயற்பாடுகளைச் (Process) செய்ய முடியும். CPU இன் அதிக சுமைகளைத் தவிர்க்க, கோ-ப்ரோசஸர்கள் Co-processors எனப்படும் சிறப்பு செயலிகள் உள்ளன. அவ்வாறான ஒரு கோப்ரோசெசரே இந்த ஜி.பீ.யூ ஆகும்.

நவீன கணினிகளில் Intel, NVIDIA, மற்றும் AMD நிறுவனங்கள் தயாரித்த கிராபிக்ஸ் செயலாக்க அலகுகளைக் (ஜி.பீ.யூ) காணலாம்.

தனியான கிரேபிக் அட்டைகளை டெஸ்காப் கணினி மதர் போர்டுகளில் பொருத்துவதற்கு PCI, PCI Express, AGP ஸ்லாட்டுகள் (slots) பயன் படுத்தப்படும்.

கிராபிக்ஸ்க எனும்போது தெளிவுத்திறன் (resolution) மற்றும் புதுப்பிப்பு வீதம் (refresh rate) ஆகிய இரண்டு விடயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். தெளிவுத்திறன் என்பது படத்தைக் காண்பிக்கப் பயன்படுத்தப்படும் பிக்சல் (pixels) எனும் புள்ளிகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது, புதுப்பிப்பு வீதம் ஒரு விநாடிக்குள் படம் எத்தனை முறை மீண்டும் வரையப்படுகிறது என்பதைக் குறிக்கிறது.

மொத்தத்தில் கிராபிக்ஸ் அட்டை காட்சி சார்ந்த செயல்பாடுகளைச் செய்து உதவுவதன் மூலம் பிற பணிகளைச் செய்ய மத்திய செயற்பாட்டு அலகை (CPU) அனுமதிக்கிறது.

ஒரு மென்பொருளை நிறுவ கிராபிக்ஸ் (காணாது = போதாது) எனும் போது எவ்வாறு அதை சரி செய்யலாம்?

முதலில் அந்த மென்பொருளை நிறுவத் தேவையான கிரேபிக்ஸ் அட்டையின் நினைவகத்தின் குறைந்தபட்ச அளவைத் தெரிந்து கொண்டு (minimum requirement) அந்த அளவிலோ அல்லது அதனிலும் கூடிய அளவிளோ கிரேபிக் அட்டையை வாங்கிப் பொருத்தலாம்.

விண்டோஸ் 10 இல் கிரேபிக் நினைவகத்தின் அளவை டெஸ்க்டாப்பில் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் Display Settings தெரிவு செய்து பின்னர் Advanced Display Settings —> Display Adapter Properties ஊடாகக் கண்டறியலாம்.

About admin

Check Also

Signs of hard disk failure வன்தட்டு பழுதடையப் போவதை கணிப்பது எப்படி?

ஹாட் டிஸ்கிலிருந்து வழமைக்கு மாறானா இரைச்சல் கேட்க ஆரம்பிக்கும்கணினி அடிக்கடி உரைந்து (Freeze) போகும் அல்லது செயலிழக்கும்ஹாட் டிஸ்கில் அதிகளவு Bad …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *