Home / General / What is ICANN?

What is ICANN?

ICANN என்றால என்ன? 
ICANN (ஐகான்என்பது இணையத்தில் இணைந்துள்ள கணினிகளுக்கான ஐபி முகவரிகளை (IP addressesஒதுக்கீடு செய்வதற்கும் இணையதளப் பெயர்களை (domain name system) நிர்வகிப்பதற்கும் என உருவாக்கப் பட்டுள்ள ஒரு வணிக நோக்கற்ற நிறுவனமாகும். Internet Corporation For Assigned Names and Numbers  என்பதே ICANN என்பதன் விரிவாக்கமாகும்
இணையத்தில்இணைந்துள்ள சேர்வர் கணினி முதல் நாம் வீடுகளில் பயன் படுத்தும் தனிநபர் கணிணிவரை அனைத்துக்கும் ஐபி முகவரி எனும் ஒரு தனித்துவமான இலக்கம் வழங்கப்படுகிறது. எனினும் ஐகான் நிறுவனத்தினால் ஒவ்வொரு கணினிக்கும் நேரடியாக ஐபி முகவரிகளை வழங்குவதென்பது சாத்தியமான விடயமல்ல. எனவே ஐகான் அமைப்பு வணிக நிறுவனங்கள், கம்பனிகள், கல்வி சார் நிறுவனங்கள், இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் என மொத்தமாக ஐபி முகவரிகளை வழங்கி விடுகின்றது. இந்நிறுவனங்கள் பின்னர் தமது இணைய சேவையைப் பெறும் வாடிக்கையாளர் கணினிகளுக்கு ஐபி  முகவரிகளைத் தனித்தனியாக வழங்குகிறது.
ஐகான் நிறுவனம் அமெரிக்க நாட்டில் தனது தளத்தைக் கொண்டிருந்தாலும் அது ஒரு உலகலாவிய இணைய சமூகமாகும். பொதுவாக குறிப்பிட்டால் இணையத்தில் வரையறைகளை நிர்ணயித்து அதன்  மேம்பாட்டிற்காக இயங்கி வரும் ஒரு நிறுவனமே ஐகான் ஆகும்.

அனூப்

About Imthiyas Anoof

Check Also

Steps Recorder-Windows 10

Steps Recorder-Windows 10 விண்டோஸ் 10 இல்  ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் என்பது உங்கள் கம்பியூட்டரில் …

Leave a Reply