Home / Video / What is Microsoft BitLocker?

What is Microsoft BitLocker?

What is Microsoft BitLocker? மைக்ரோசாப்ட் பிட்லாக்கர் Microsoft BitLocker  என்பது விண்டோஸ்  உடன் இணைந்து வரும்  ஒரு  பாதுகாப்பு மென்பொருள் கருவி. இது கணினியில் உள்ள உங்களது அனைத்து டேட்டாவையும் மறைக் குறியாக்கம் செய்து பாதுகாக்கிறது.  

பிட்லாக்கர் மூலம் ஹாட் டிஸ்க் மற்றும் பென்டிரைவ் போன்றவற்றை மறைக் குறியாக்கம் செய்யலாம்.  சரியான மறைக்குறியாக்க விசை encryption key  உள்ளவர்கள் மட்டுமே கோப்புகள் மற்றும் தரவுகளை மறைக்குறியாக்கம் நீக்கி decrypt அவற்றைப் பார்வையிட முடியும்.

BitLocker மூலம் உங்கள் ஹாட் டிஸ்கை என்கிரிப்ட் செய்யும்போது ஒரு  மீட்பு விசையை recovery key உருவாக்கும், ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்கள் கணினியைத் தொடங்கும்போது, ​​ஒரு குறிப்பிட்ட இரகசிய எண்ணை (கடவுச்சொல்லை) வழங்க வேண்டும். கடவுச்சொல்லை மறந்துவிட்டால் பயன்படுத்தக்கூடிய மீட்பு விசையை (recovery key) அதே கணினியில் சேமிக்காது  வேறு எங்காவது பாதுகாப்பாகச் சேமித்துக் கொள்ள வேண்டும்.  

தரவு மீறல்கள் மற்றும் ஊடுருவல்களுக்கு எதிராகக் கணினிகள் மற்றும் டிரைவ்களைப் பாதுகாப்பதே பிட்லாக்கரின் நோக்கம். ஃபோல்டர்கள் மற்றும் ஃபைல்களை பாஸ்வர்ட் வழங்கிப் பாதுகாப்பதை விட பிட் லாக்கர் மூலம் என்கிரிப்ட் செய்து பாதுகாப்பது வலிமையானது. உதாரணமாக உங்கள் என்கிரிப்ட் செய்த மடிக் கணினியோ அல்லது பென் டிரைவோ தொலைந்து விட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ அவற்றில் உள்ள உங்கள் டேட்டாவை பிறரால் கண்டு பிடிக்க முடியாது.

எனினும் அனைத்து கணினிகளிளும் பிட்லாக்கரைப் பயன்படுத்த முடியாது. விண்டோஸ் தற்போது பின்வரும் இயக்க முறைமைகளை ஆதரிக்கிறது:

விண்டோஸ் 10 இன் புரோ, எண்டர்பிரைஸ் மற்றும் கல்விப் பதிப்புகள் பிட்லாக்கரைப் உள்ளடக்கியுள்ளன.

About admin

Check Also

WhatsApp Web Now Lets you Create Custom Stickers

WhatsApp Web Now Lets you Create Custom Stickers ஸ்டிக்கர்களை உருவாக்க அனுமதிக்கும் புதிய அம்சத்தைச் சேர்த்துள்ளது வாட்சப் …

Leave a Reply