Home / General / What is OTT?
What is OTT?

What is OTT?

What is OTT? OTT என்றால் என்ன? OTT என்பது ஓவர்-தி-டாப் (Over The Top) என்பதன் சுருக்கமான வடிவம். இது திரைப்படங்கள், தொலைக் காட்சி நாடகங்கள், மற்றும் வீடியோ படங்களை இணையத்தினூடாக வழங்கும் ஒரு வழி முறையாகும்.

ott5

மேலும், உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை உங்களுக்கு வசதியான நேரத்தில் பார்ப்பதற்கான எளிமையான அணுகலை இந்த OTT சேவை வழங்குகிறது. உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளை இடையூறுகளின்றி பார்க்க உதவும் ஒரு சேவை வழங்குநரைக் கண்டறிவது மட்டும்தான் உங்கள் வேலை.

உங்களிடம் “அதிவேக, எல்லையற்ற இணைய இணைப்பு” இருக்குமானால் கேபிள் டிவி மற்றும் செய்மதி தொலைக் காட்சி சேவைகளுக்கு மாதாந்தம் சந்தா கட்டணம் செலுத்துவதுபோல் OTT சேவைக்கும் சாந்தா செலுத்தி (subscription) பெற முடியும். இங்கும் DTH சேவை போன்று வெவ்வேறு பொதிகளுக்கு (Packages) வெவ்வேறு கட்டணங்கள் அறவிடப்படுகின்றன.

1586090697 1349077 inline

கணினி, ஸ்மார்ட் டிவி, மொபைல் தொலைபேசி மற்றும் உங்கள் டேப் OTT சேவையை உரிய செயலிகள் மூலம் உள்ளடக்கத்தைப் பார்க்கலாம் .

எனினும் மொபைல் செயலி (apps) வழியாக OTT சேவைகளை அணுகுவது இநநாட்களில் மிகவும் பிரபலமாக உள்ளது. ஏனெனில் இது எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் பார்க்கக் கூடிய வசதியைத் தருகிறது.

smrt

உங்களிடம்  ஸ்மார்ட் டிவி இல்லை என்றால், ஃபயர் டிவி ஸ்டிக், டயலொக் வியூமினி, அண்ட்ராய்டு-செட்-டாப் பாக்ஸ், அமேசான் ஸ்டிக் போன்ற ஸ்மார்ட் ஸ்டிக் துணை சாதனங்களுடன் உங்கள் சாதாரண தொலைக் காட்சியையும் ஸ்மாட் டிவியாக மாற்றி இந்த OTT சேவைகளை அணுகலாம்.

1586090734 19097 inline

அமேசான் பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ், ஆப்பிள் டிவி + மற்றும் டிஸ்னி + ஹொட்ஸ்டார் என்பன இந்தியாவில் OTT சேவைகள் வழங்கி வரும் பிரதான நிறுவனங்களாகும்.

இந்த OTT வருகைக்கு முன்னர் IPTV (Internet Protocol TV) எனும் இணையத்தினூடாக தொலைக் காட்சி சேவை வழங்கும் (உதாரணம் SLT Peo Tv) தொழிநுட்பம் இருந்து வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம். ஐபிடிவி மற்றும் ஓடிடி இரண்டும் ஒரே மாதிரியாகத் தோன்றினாலும் இரண்டிற்குமிடையில் சிறு வேடுபாடுகள் உள்ளன. அவற்றில் பிரதான வேறுபாடு என்னவென்றால், உங்கள் மின்னஞ்சல் மற்றும் வலை உலாவலின் (web browsing) போது பயன் படுத்தும் அதே திறந்த, நிர்வகிக்கப்படாத வலையமைப்பில் (open and un-managed network) OTT ஸ்ட்ரீம் (stream) செய்யப்பட்டு வருகிறது. அதே வேளை ஐபிடிவி சேவைக்காக ஒரு நிலையான, அர்ப்பணிப்பு நெட்வொர்க் (stable and dedicated line) பயன்படுத்தப்படுகிறது.

அதே போன்று இந்தியாவில் ஏற்கனவே DTH (Direct to Home satellite TV )சேவை வழங்கி வரும் நிறுவனங்களான dishtv (dish SMRT Hub) , Videocon (d2h Magic) , Sun Direct (Sun NXT) கூட தமது வழமையான DTH சேவைக்குப் புறம்பாக அதே தொலைக் காட்சி சேனல்களையும் (VOD-Video On Demand) திரைப்படங்களையும் OTT ஊடாக வழங்கி வருகின்றன.

YouTube TV

இலங்கையில் இன்னும் OTT சேவைகள் பிரபலமாகாவிட்டாலும் ஏற்கனவே இலங்கையிலும் OTT சேவைத் தளங்கள் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் SLT Filmhall, Peotv Go, டயலோக் நிறுவனத்தின் VIU போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம். இவை தவிர மேற் சொன்ன NetFlix, Amazon prime, Youtube TV, Disney+ Hotstar, Apple TV + களும் இலங்கையிலும் அணுகக் கூடியவைதான்.

What is OTT?

இந்தியாவில் லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் மக்கள் இப்பொது OTT சேவையிலேயே பொழுதைக் கழிக்கிறார்கள். புதிய திரைப்படங்களை வெளியிட முடியாத சூழலில் பல கோடிகள் செலவு செய்து எடுக்கப்பட்டுள்ள படங்களை இந்த OTT தளத்தில் வெளியிடுவதன் மூலம் தமது முதலீட்டில் ஓரளவையாவது திரும்பப் பெற திரைப்பட தயாரிப்பாளர்களுக்குக் கை கொடுக்கின்றன இந்த OTT தளங்கள்

PeoOTT img2

இன்னும் திரைக்கு வராமலேயே ”பொன் மகள் வந்தாள்” எனும் திரைப்படம்  அண்மையில் OTT தளத்தில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேபோல் இன்னும் பல புதிய படங்கள் இது வரை திரைக்கு வராத நிலையில் OTT தளத்தில் வெளியிடப்படவுள்ளன.

About admin

Check Also

whatsapp 2 Small

How to Find Out if You Have Been Blocked by Someone on WhatsApp

How to Find Out if You Have Been Blocked by Someone on WhatsApp வாட்சப்பில் ஏதோ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

கொப்பி பண்ணாதீங்கய்யா, சுயமா எழுதுங்க!