எதற்குஇந்த Read only file?
கணினியில்காணப்படும் ஃபைல்களில்”வாசிக்க மட்டும்” எனும்பண்பைக் கொண்ட ஃபைல் வகைகளைRead only file எனப்படுகிறது. விண்டோஸ் இயங்கு தளத்தில் boot.ini, io.sys, msdos.sys போன்ற சிஸ்டம் பைல்கள்read-only எனும் பண்பையே கொண்டிருக்கும்.
இவ்வாறானread-only பண்புகளைக் கொண்ட பைல்களை திறந்துபார்க்க முடியும். எனினும் அந்த பைல்களில்மாற்றங்கள செய்ய இயலாது. அதாவதுwrite செய்வதுதடுக்கப்பட்டிருக்கும். மேலும் வழமையான பைல்களைப்போல் அழிக்கவும் இடமாற்றம் செய்யவும் முடியும். எனினும் .சிஸ்டம்பைல்களான Read only file களை அழிக்கவோஇடமாற்றம் செய்யவோ முடியாது.

ஒருபைல் Read only file என்பதை அறிந்துகொள்ள அந்த பைலின் மீதுவலது க்ளிக் செய்து வரும்மெனுவில் Properties தெரிவுசெய்யுங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில் Attributes எனும்பகுதியின் கீழ் Read only file என்பதுதெரிவு நிலையில் இருக்குமாயின் அது ஒரு Read only file ஆகும். தெரிவை நீக்குவதன் மூலம்அதனை ஒரு சாதாரண பைலாகவும்மாற்றி விட முடியும்.
அனூப்