Home / What is..? / What is Reading List in Chrome?

What is Reading List in Chrome?

What is Reading List in Chrome? குரோம் உலாவியில் (வாசிப்பு பட்டியல்) என்பது என்ன?

இணைய தளங்களில் தினந்தோறும் ஏராளமான சிறந்த ஆக்கங்களைக் காணக் கிடைக்கிறது. ஆனால் , அதையெல்லாம் படித்து முடிக்க நேரம் கிடைப்பதில்லை. குரோம் உலாவியில் Reading List (வாசிப்பு பட்டியல்) அம்சம் இது போன்ற ஆக்கங்களை நேரம் கிடைக்கும் போது வாசித்துக் கொள்ளக் கூடிய வகையில் சேமித்து வைக்க உதவுகிறது. இந்த வசதி மூலம் இனிமேல் சிறந்த ஆக்கங்களை கட்டுரைகளை இழக்க வேண்டியேற்படாது.

Reading List (படித்தல் பட்டியல்) எனும் பெயரிலிருந்தே அது படிக்க வேண்டிய விடயங்களின் பட்டியல் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இது இணைய உலாவிகளில் பல ஆண்டுகளாக முன்னரே  நாங்கள் பயன்படுத்தி வரும்  ‘புக்மார்க்’ (bookmark)  அம்சத்திற்கு நிகரானதுதான். எனினும் புக்மார்க்கை விட Reading List சற்று வேறுபட்டது.

புக்மார்க்கில் ஒரு கட்டுரையை அல்லது கதையை ஒரு கோப்புறையில் சேமிப்பதற்கு பதிலாக, நீங்கள் அதை குரோம் உலாவியில்  வாசிப்பு பட்டியலில் சேர்;க்கலாம். நீங்கள் உங்கள் கூகுல் கணக்கில் உள்நுழைந்திருந்தால் பட்டியல் டெஸ்க்டாப் மற்றும் மொபைலுடன் (sync) ஒத்திசைக்கிறது.  எனவே அந்த “வாசிப்பு பட்டியல்”; உங்கள் டெஸ்க்டாப் மற்றும் தொலைபேசியில் உள்ள குரோம் உலாவிகளில் ஒரே நேரத்தில் கிடைக்கும். இது புக்மார்க்கை அணுகுவதை விட எளிதானது.

மேலும்  புக்மார்க்கை போலன்றி வாசிப்புப் பட்டியலில் ஆஃப்லைன் (offline) அம்சமும் இனைக்கப்பட் டுள்ளது. அதாவது  வாசிப்பு பட்டியலில் சேமிக்கப்பட்ட பக்கங்களை இணைய இணைப்பு இல்லாமல் படிக்க முடியும். எனினும்  பட்டியலில் சேர்ப்பதற்கு இணைய இணைப்பு அவசியம்

ஆன்லைனில் சுவாரஸ்யமான ஒரு கட்டுரையை நீங்கள் காணலாம், ஆனால் அதைப் படிக்க உங்களுக்கு நேரமில்லை. அதை உங்கள் வாசிப்பு பட்டியலில் சேருங்கள். நீங்கள் படிக்கத் தயாராகும் வரை  அது உங்களுக்காக்க காத்திருக்கும்.

வாசிப்புப் பட்டியலைப் பயன்படுத்துவது ஒரு வலைப்பக்கத்தை புக்மார்க் செய்வதற்கு சமம். குரோமில் இந்த வசதி டெஸ்க்டாப் கணினிகளில் விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் இயங்கு தளங்களுக்கும் மொபைலில் ஐ.;ஓ.எஸ்ஸிலும் கிடைக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்த அம்சம் இதுவரை அண்ட்ராயிடில் இல்லை.

Google Chrome இல் வாசிப்பு பட்டியலை எவ்வாறு பயன்படுத்துவது?

டெஸ்க்டாப்பில் வாசிப்பு பட்டியலைப் பயன்படுத்த முதலில், நீங்கள் பின்னர் படிக்க விரும்பும் வலைப்பக்கத்திற்கு செல்லவும். முகவரி பட்டியின் (address bar) இல் வலது பக்கத்தில் உள்ள நட்சத்திர (புக்மார்க்) ஐகானைக் கிளிக் செய்யவும். அப்போது இரண்டு தெரிவுகளைக் கொண்ட ஒரு மெனு தோன்றும். அவற்றில் “Add to Reading List” (வாசிப்பு பட்டியலில் சேர்) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அப்போது அந்த வலைத்தளம் பட்டியலில் சேர்க்கப்படும்.  சேர்க்கப்பட்ட வாசிப்புப் பட்டியலை (Reading List)   பிரவுஸரின்  வலது புறத்தில் காணலாம். அதைக் க்ளிக் செய்து, நீங்கள் சேமித்த அனைத்து கட்டுரைகளையும் ஒரு பட்டியலில் காண முடியும்.

About admin

Check Also

What is NFT?

அண்மைக் காலங்கங்களில் NFT பற்றி அடிக்கடி செய்திகளைக் காணக் கிடைக்கிறது. NFT கள் பல மில்லியன் டாலர்களுக்கு விற்கப்படுவதாகவும் கேள்விப் …

Leave a Reply