Home / General / What is SEO ?

What is SEO ?

SEO  என்றால்என்ன?
இணையத்தில்தேடற் பொறிகளைப் பயன் படுத்தி தகவல்தேடும் போது நாம் தேடும்தகவல் அடங்கியிருக்கும் இணைய தளம் தேடல்முடிவுகளில் அனேகமாக முதலாவது பக்கத்திலேயேஅதுவும் பட்டியலில் முதல் ஐந்து இடங்களிலேயேஇடம் பெற்றிருக்கக்  காணலாம். மேலும் அவ்விணைய தளம் ஒரு பிரபலமானஇணைய தளமாகவும் கூட இருக்கும். இவ்வாறுஒரு இணைய தளத்தை தேடற்பொறிகளின் தேடல் முடிவுகளின் பட்டியலின்ஆரம்பத்தில் இடம் பெற வைப்பதுஎன்பது ஒரு இலகுவான விடயமல்ல. இணையதளங்களை விருத்தி செய்பவர்கள் இதற்குப் பயன் படுத்தும் ஒரு(தொழில்) நுட்பமே SEO  எனப்படுகிறது.
Search Engine Optimization  (தேடற்பொறி உகப்பாக்கம்என்பதன்சுருக்கமே SEO  . ஒவ்வொருஇணைய தள விருத்தியாளரும் (web developers) தனதுஇணையதளம் அனைத்து தேடற் பொறிகளின்தேடல் முடிவுகளில் முதலிடத்தில் வருவதையே விரும்புவர். உதாரணமாக ரவி என்பவர் ஒருஓன்லைன் உதைபந்தாட்ட பாதனி வணிகத்திலீடுபடுபவர்உதைப்பந்தாட்டபாதனி சோடியொன்றை ஓன்லைனில் கொள்வனவு செய்ய விரும்பும் ஒருவர்தேடற் பொறிகளைப் பயன் படுத்தி soccer shoes எனதேடலை மேற்கொள்ளும் போது ரவியின் ஒன்லைன்வணிக இணையதளம் தேடல் முடிவுகளின் பட்டியலில்ஆரம்பத்தில்  இடம்பெற வேண்டும் என்பதையே ரவி விரும்புவார். அதன்மூலம் அவரது தளத்திற்கு வந்துசெல்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவதுடன் அதிக விற்பனையையும், அதிகவருமானத்தையும் அவரால் பெற முடியும்
ஆனால்இங்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. ரவியைப் போன்றே மேலும்  ஆயிரக்கணக்கான  வேறுபல ஓன்லைன் பாதணி விற்பனையாளர்களும்அவர்களது இணையதளங்களை விருத்தி செய்பவர்களும்  இதேஇலக்கினையே  கொண்டிருப்பர்இங்குதான்கை கொடுக்கிறது ளுநுழு எனும் தொழிநுட்பம்.

இங்குSEO  ஆனதுஇணைய தளத்தின் ஒவ்வொர் பக்கத்திலும் உள்ளHTML  (இணையதளங்களை உருவாக்க உதவும் ஒரு மொழி) குறிப்புக்களில் பல் வேறு மாற்றங்களைசெய்வதன் மூலம் தேடற் பொறிகளின்தேடல் முடிவுப் பட்டியலில் ஆரம்ப  இடத்தைஅடைய உதவுகிறது. முதலில் இணைய தளபக்கத்தின் பெயர் உள்ளடக்கம் சார்ந்ததாயிருத்தல்வேண்டும்முன்னர்குறிப்பிட்ட உதாரணத்தில் ரவியின் இணைய பக்கத்தின்பெயர் (இணைய தள முகவரிஅல்ல) “Ravi’s Soccer Store — Soccer Shoes and Equipment ”   என்றவாறுஇருத்தல் வேண்டும். இணைய பக்கமொன்றின் தலைப்பே  ளுநுழுநுட்பத்தில் முக்கிய அம்சமாகும். இத்தலைப்பானதுதேடற்பொறிகளிடம் இவ்விணைய தளம் எவ்வாறான இணையதளம் என்பதைக் கூறி விடுகிறது. மேலும்  ரவியின்இணைய தளத்தின் முதற் பக்கத்தில் (home page) “soccer”, “soccer shoesபோன்ற வார்த்தைகள் பலதடவைகள் இடம் பெறக் கூடியதாகவும்அமைத்தல் வேண்டும்.

அடுத்துMETA tags  (மீடாடேக்ஸ்) எனப்படும் ஒட்டுக்கள் கை கொடுக்கின்றன. META tags  எனப்படும்  இந்தர்வுஆடு  ஒட்டுக்கள்உண்மையிலேயே உங்கள் இணைய தளத்தைஇதே போன்ற ஒரு இணையதளக் குவியலிலிருந்து வேறுபடுத்திக் காண்பிக்க உதவுகின்றன. META tags எனப்படுவது தேடற் பொறிகளால் இலகுவாகவேறுபடுத்தக் கூடியதாக ஒரு இணைய தளம்பற்றிய மேலதிக விவரங்களையும் பிரதானதேடற் சொற்களையும் (key words) உள்ளடக்கியதாக இருக்கும்  இந்தMETA tags இன் உள்ளே இணையதளம் பற்றிய ஒரு சுருக்கமானவிவரக் குறிப்பு அடங்கியிருக்கும். ஒவ்வொரு இணைய பக்கத்திலும்இடம் பெறும் அவ்விவரம் இணையதளத்தின் தலைப்புப் போன்றதாயும் மேலதிக விவரத்தைக் கொண்டதாயுமிருத்தல்வேண்டும். பிரதான தேடற் சொற்களின்பட்டியலில் 5 முதல் 20 வரையான சொற்களை உள்ளடக்கியதாகவும்அவை இணைய தளத்தின் உள்ளடக்கம்சார்ந்ததாகவும் இருத்தல் வேண்டும்META tags பயன்படுத்துவதன் மூலம் தேடற் பொறிகளில்உங்கள் தளம் முன்னணியில் இடம்பெறும் வாய்ப்பை அதிகரிக்கிறது.  
சரி.. ஒரே விதமான தலைப்பையும், உள்ளடக்கத்தையும், மீடா ஒட்டுக்களையும் கொண்டதாய் ஏராளம் இணைய தளங்கள்இருப்பின் என்ன செய்வது? இவ்வாறானசந்தர்ப்பங்களில் மிகப் பிரபலமான இணையதளங்களை தேடற் பொறிகள் முன்னணியில்நிறுத்தும்.

மிகப்பிரபலமான இணைய தளப் பட்டியலில்எவ்வாறு இடம் பெறுவது? அதற்கானசிறந்த வழி தேடற் பொறிகளுக்குமட்டுமல்லாது இணைய தள விவரக்கொத்துக்களிலும் (web directories) உங்கள் இணைய தளம்பற்றிய விவரங்களை சமர்ப்பித்தலாகும். பிற இணைய தளங்களிலிருதுஉங்கள் இணைய தளத்திற்கு இணைப்புக்களை(links) உருவாக்குவதன் மூலம் ஏராளமான பார்வையாளர்களைப்பெற முடிவதோடு தேடற் பொறிகளிலும் ஆரம்பப்பக்கங்களில் பட்டியடலிடப் படலாம்.

அனூப்

About Imthiyas Anoof

Check Also

Steps Recorder-Windows 10

Steps Recorder-Windows 10 விண்டோஸ் 10 இல்  ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் என்பது உங்கள் கம்பியூட்டரில் …

Leave a Reply