Home / General / What is SSD?

What is SSD?

SSD என்றால் என்ன?
ஹாட்டிஸ்க் ட்ரைவுக்கு மாற்றீடாக எதிர் காலத்தில் கணினிகளில்இடம் பிடிக்கப் போகிறது SSD எனும்  Solid State Drive. இது ஹாட்டிஸ்க் போனறு மின் இணைப்பின்றிடேட்டாவை நிரந்தரமாக சேமித்து வைக்கக் கூடிய ஒருதுணைத் தேக்கச் சாதனமாகும். டேடாவைப்பதிவு (write) செய்வதற்கும் (read) படிப்பதற்கும் SSD ட்ரைவ் ஹாட் டிஸ்க்போன்றே IDE மற்றும்  SATA இடைமுகப்புகளுடன் கணினியில் இணைக்கப் படுகிறது.
SSD

SSD ட்ரைவ்கள் ஹாட்ட்ரைவ் போன்றே தொழிற்பட்டாலும் அவற்றின்உள்ளுறுப்புக்கள் வேறு பட்டவை. ஹாட்டிஸ்க் ட்ரைவில் போன்று SSD இல் அசையும் பாகங்கள்இல்லை. அதனால் தான் அதனைஆங்கிலத்தில்  ளழடனைளவயவந  (திடநிலை) எனப்படுகிறது. ஹாட் டிஸ்க்கில் டேட்டாவைபதிவு செய்யவும்  படிக்கவும்பயன்படும் மின்காந்தப் புல தொழில் நுட்பத்துக்குப்பதிலாக இங்கு  பெண்ட்ரைவ் போன்ற flash memory தொழில் நுட்பம் பயன்படுகிறது.

SSD இல் அசையும்பாகங்கள் இல்லாததனால் டேட்டாவை அணுகவோ படிக்கவோ பயன்படும்ட்ரைவ் ஹெட்டை (drive head)  ட்ரைவின்வெவ்வேறு பகுதிகளுக்கு அசைக்க வேண்டியதில்லை. எனவேஹாட் டிஸ்கை விடை SSD லிருந்துவேகமாக தரவுகளைப் படிக்கலாம்.
ஹாட்ட்ரைவை விட SSD பல அனுகூலங்களைக்கொண்டுள்ளன. உதாரணமாக, ஹாட் டிஸ்கில் ஒருபைலுக்குரிய பகுதிகள் சிதறலாக பல் வேறுஇடங்களில் சேமிக்கப்படுவதால் அதிகளவில் டேட்டா சேமிக்கப்படும் போதுடேட்டாவைப் படிக்கும் ஆற்றல் குறைந்து விடுகிறது. எனினும் இக்குறைபாடு SSD இல் ஏற்படுவதில்லை. அதனால்ஹாட் டிஸ்கைப் போன்று SSD க்களை டிப்ரேக்மன்ட் (defragment) செய்யவும் அவசியம்ஏற்படுவதில்லை. மேலும் SSD இல் காந்தப் புலதொழிநுட்பம் பயன்படுத்தப்படாமையினால் தீவிர காந்தப் புலங்களுக்குஅருகாமையில் இருந்தாலும் டேட்டா இழப்புக்கள் ஏற்படுவதில்லை.
அசையும்பாகங்கள் இல்லாமையினால் அது பழுதடைவதற்கான வாய்ப்புக்களும்குறைவு என கருதப்படுகிறது. மேலும்அது நிறை குறைந்தது. இயங்கும்போதுஇரைச்சலை உண்டாக்காதுகுறைந்தளவுமின் சக்தியையே பயன் படுத்துகின்றது. இதுபோன்ற பல அனுகூலங்களினால் SSD தற்போது  மடிக்கணினிகளில்இடம் பிடிக்க ஆரம்பித்துள்ளது
ஹாட்ட்ரைவை விட பல அனுகூலங்கள்காணப்பட்டாலும் ஒரு சில பிரதிகூலங்களையும் SSD கொண்டுள்ளது. குறிப்பாக அதன் விலை ஹாட்டிஸ்கை விட மிக அதிகமாகவுள்ளது. SSD தொழிநுட்பம் புதிதென்பதாலேயே அதன் அதிக விலைக்குக்காரணம் கூறப்படுகிறது. மேலும் அதன் கொள்ளளவும்இன்னும் சிறிய அளவிலேயே உள்ளதுடேட்டாவைஅழித்து மீள பதிவு செய்யும்எண்ணிக்கையும் மட்டுப் படுத்தப்பட்டதால் காலம்செல்லச் செல்ல அதன் செயற்திறனும் குறைந்து விடும் சாத்தியம் உண்டு.

எனனினும்தற்போது SSD தொழில் நுட்பம் வளர்ந்துவருவதாலும் விலையும் கூட குறைந்து வருவதாலும்தற்போது பயன் பாட்டிலுள்ள ஹாட்டிஸ்குகளுக்கு மாற்றீடாக இன்னும் சில வருடங்களில்கணினிகளில் SSD ட்ரைவ் பரவலாகப் பயன்படுத்தப்படும் என்பதை இப்போதே உறுதியாகக்கூறலாம்.
அனூப்
SEE MORE  What is IPv6?

About Imthiyas Anoof

Check Also

kodular

Kodular – No Code Android App Maker

Kodular கோடுலர் /கோடியுலர் (code + modular => Kodular ஆனது) என்பது அண்ட்ராயிட்  மொபைல் செயலிகளை உருவாக்க உதவும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page கொப்பி பன்ணாதீங்க  அய்யா. சுயமா எழுதுங்க