பொதுவாக எந்த வொரு பைலையோ மென்பொருளையோ இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யும் போது அதனை முழுமைகயாகத் தரவிறக்கம் செய்த பின்னரே எம்மால் அவற்றை இயக்கவோ அல்லது திறந்து பார்க்கவோ முடிகிறது. எனினும் ஓடியோ மற்றும் வீடியோ பைல்களை இணையத்தின் ஊடாக இயக்கும் போது அவறை முழுமையாக தரவிறக்கம் செய்யாமலேயே. அவற்றைப் பார்வையிடவோ அல்லது செவி மடுக்கவோ முடிகிறது. இவ்வாறு ஓடியோ மற்றும் வீடியோ பைல்களை முழுமையாகத் தரவிறக்கம் செய்யாமல் டவுன்லோட் நடைபெறும் சந்தர்ப்பத்திலேயே. எமக்குக் காட்சி படுத்தபப் படுவதையே streamingஎனப்படுகிறது. மேலும் அதி வேகம் கொண்ட இணைய இணைப்பில் ஒரு நேரடி நிகழ்வையும் கூட ஸ்ட்ரீமிங் தொழில் நுட்பத்தின் மூலம் நேரடியாகப் பார்வையிடலாம்.