Home / What is..? / What is TEMP file?

What is TEMP file?

TEMP FILE   என்றால் என்ன?

கணினியில் பணியாற்றும்போது .TMP எனும் பைல் நீட்டிப்பைக் (Extension) கொண்ட பைல்களை நீங்கள் அவ்வப்போது அவதானித்திருக்கலாம். இவற்றை TEMP  டெம்ப் பைல்கள் எனப்படும். என்ன இந்த டெம்ப் பைல்கள்?

டெம்ப் பைல்கள என்பவை அவற்றின் எக்ஸ்டென்சனால் குறிப்பிடப்படுவது போல் அவை தற்காலிக (temporary) பைல்களே. டெம்ப் பைல்களை பொதுவாக நாம் பயன்படுத்தும் எப்லிகேசன்களே உருவாக்கி விடுகின்றன. அதாவது சில எப்லிகேசன்கள் இயங்குவதற்குத் தேவையான தற்காலிக மான சில டேட்டாவை தற்காலிக நினைவகமான ரேமில் (RAM) சேமிக்காமல் நிரந்தரமாகவே ஹாட் டிஸ்கில் சேமித்து விடுகின்றன. நினைவகத்தில் போதிய இடம் இல்லாமல் போகும் போது அல்லது ப்ரோஸெஸ்ஸிங் பணிக்கு உதவு முகமாக இவ்வாறு ஹாட் டிஸ்கில் டெம்ப் பைல்களை சேமித்து விடுகின்றன.

தற்போது பயன்பாட்டிலுள்ள இயங்கு தளங்கள் (Operating Systems) வேர்ச்சுவல் மெமரி (Virtual Memory) எனும் முறையினைப் பயன் படுத்துகின்றன. அதாவது ஒரு எப்லிகேசன் இயங்குவதற்கு ஒதுக்கப்படும் நினைவகத்தின் அளவை விட அதிகமான நினைவகம் அவசியப் படும்போது பிரதான நினைவகத்துக்குப் பதிலாக ஹாட் டிஸ்கைப் பயன் படுத்துன் வண்ணம் வடிவமைக்கப் படுகின்றன. அதிக நினைவகத்தை பயன் படுத்தும் வீடியோ எடிட்டிங் மென்பொருள்கள் அதிக எண்ணிக்கையிலான டெம்ப் பைல்களை உருவாக்கி விடுகின்றன.

டெம்ப் பைல்களின் தேவை முடிந்ததும் அதனை உருவாக்கும் எப்லிகெசன்களே அவற்றை அழித்து விடும். எனினும் சில வேளைகளில் இந்த டெம்ப் பைல்கள் முறையாக அழிகப்படாமல் ஹாட் டிஸ்கிலேயே தங்கி விடும். இவ்வாறு தினமும் ஹாட் டிஸ்கிலேயே தங்கி விடும்போது ஹாட் டிஸ்கில் இவை அதிக இடத்தைப் பிடித்து ஹாட் டிஸ்கை நிரப்பி விடும். அந்த டெம்ப் பைல்களை உருவாக்கிய எப்லீகேசன் இயங்கிக் கொண்டிருக்கும் போது இடையே எதிர்பராமல் கணினி க்ரேஷ் ஆகி விடுவது அல்லது அந்த எப்லிகேசனை உருவாக்கியவர் டெம்ப் பைல்களை இறுதியில் அழித்து விடும் படியான ப்ரோக்ரம் வரிகளை சேர்க்க மறந்து விடுவது போன்றன இதற்குக் காரணங்களாகும்.

விண்டோஸ் இயங்கு தளத்தில் அனேகமாக டெம்ப் பைல்கள் ஹாட் டிஸ்கில் C:WINDOWSTemp எனும் போல்டரில் சேமிக்கப்படும்.. இந்த போல்டரில் மாத்திரமன்றி ஹாட் டிஸ்கில் வெவ்வேறு பகுதிகளிலும் கூட சிதறலாக டெம்ப் பைல்கள் சேமிக்கப்படும்.

அனேகமாக டெம்ப் பைல்கள் கணினியில் மறைந்தே காணப்படும். அவற்றைப் பார்வையிட வேண்டுமாயின் Folder Options தெரிவு செய்ய வரும் டயலொக் பொக்ஸில் Show hidden files and folders தெரிவு செய்து கொள்ள வேண்டும்

டெம்ப் பைல்கள அதிகமாக உருவாக்கும் ஒரு எப்லிகேசனாக இணைய தளங்களைப் பார்வையிட உதவும் இணைய உலாவிகளைக் (Web Browsers) குறிப்பிடலாம். இண்டர்நெட் எக்ஸ்ப்லோரர் உருவாக்கும் டெம்ப் பைல்கள் C ட்ரைவில் C:Documents and Settings(User)Local SettingsTemporary Internet Files எனும் போல்டரில் பொதுவாக் சேமிக்கப்படும். விண்டோஸில் ஒரு இணைய தளத்தை அணுகும்போது அந்த இனைய தளம் சார்ந்த சில பைல்களை தற்காலிகமாக ஹாட் டிஸ்கில் இந்த Temporary Internet Files எனும் போல்டரிலேயே சேமித்து விடும். அடிக்கடி பார்வையிடும் இணைய தளங்களை முன்னரை விட வேகமாக காண்பிப்பதற்கே இந்த ஏற்பாடு.

இந்த போல்டரும் விண்டோஸில் மறைந்தே (Hidden) காணப்படும். தொடர்ச்சியான இணைய பாவனையின் போது இந்த Temporary Internet Files போல்டரும் ஹாட் டிஸ்கை நிரப்பி விடலாம். எனவே அந்த பைல்களையும் தேவைப் படும் பட்சத்தில் அழித்து விட வேண்டும்.

மைக்ரோஸொப்ட் ஓபிஸ் தொகுப்பைப் பயன் படுத்தும் போதும் டெம்ட் பைல்கள் உருவாக்கப்படுகின்றன. உதாரணமாக எம்.எஸ்.வர்டைப் பயன் படுத்தி ஒரு பைலை ஏதோவொரு பெயரில் சேமித்து விட்டு (Jeesa.doc) தொடர்ந்து அதே பைலில் பணியாற்றும் போது அதே பைல் பெயருடன் ஒரு டெம்ப் பைலும் (Jeesa.tmp) அவ்வப்போது தொடர்ச்சியாக் ஹாட் டிஸ்கில் சேமிக்கப்பட்டுக் கொண்டிருக்கும். நீங்கள் அந்த பைலை சேமிக்கு முன்னரே கணினி க்ரேஷ் ஆகி விடும் சந்தர்ப்பத்தில் இந்த டெம்ப் பைலிலிருந்து அந்த பைலை மீட்டுக் கொள்ளவே இந்த வசதி செய்யப் பட்டுள்ளது.

டெம்ப் பைல்களை முறையாக நீக்குவதற்கு விண்டோஸில் Disk Cleanup எனும் யூட்டிலிட்டி இணைந்து வருகிறது. அதன் மூலம் இலகுவாக டெம்ப் பைல்களை நீக்கி விடலாம் விண்டோஸ் எக்ஸ்பீயில் டெம்ப் பைல்களை டிஸ்க் க்ளீன் அப் யூட்டிலிட்டி மூலம் நீக்குவதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்.

Start → Programs → Accessories → System Tools → Disk Cleanup தெரிவு செய்யுங்கள். அப்போது எந்த ட்ரைவை சுத்தம் செய்ய வேண்டுமென் உங்களிடம் வினவும். உரிய ட்ரைவை தெரிவு செய்ததன் பின்னர் டிஸ்க் க்ளீனப் யூட்டிலிட்டியை இயக்குவதன் மூலம் ஹாட் டிஸ்கில் எவ்வளவு வெற்றிடத்தை மீளப் பெறலாம் என்பதை கணித்து ஒரு டயலொக் பொக்ஸைக் காண்பிக்கும். அங்கு பல தெரிவுகள் இருக்கும் அதிலிருந்தி டெம்பரரி பைல்ஸ் தெரிவு செய்து ஓகே சொல்லி விடுங்கள்.

-அனூப்-

About Imthiyas Anoof

Check Also

What is NFT?

அண்மைக் காலங்கங்களில் NFT பற்றி அடிக்கடி செய்திகளைக் காணக் கிடைக்கிறது. NFT கள் பல மில்லியன் டாலர்களுக்கு விற்கப்படுவதாகவும் கேள்விப் …

Leave a Reply