What is the use of Fn Key?Function விசைகளை எல்லோரும் அறிந்திருப்பீர்கள். இவ்விசைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு பயன் பாட்டு மென்பொருள்களில் வெவ் வேறு பணிகளைச்செய்யும்.
அதே போன்று மடிக் கணினி விசைப் பலகையில் Fn எனும் ஒரு விசை, விசைப் பலகையின் கீழ்ப் பகுதியில் இடது புறம் இருப்பதை அவதானித்திருப்பீர்கள். ஆனால் இந்தப் பயன் பாடு பற்றிப் பலரும் அறிந்திருப்பதில்லை.
இந்த Fn விசையும் ஒரு Function விசைதான். ஆனால் Fn விசை Shift மற்றும் Ctrl விசைகள் போன்று செயற்படுகிறது. அதாவ்து இந்த விசை தனித்து இயங்காமல் பிற விசைகளுடன் சேர்த்தே இயக்கப் படுகிறது. இவ்வாறான விசைகளை (modifier) மாடிஃபயர் விசை எனப்படுகிறது. மேலும் இது சில விசேட பயன்பாடுகளுக்கே பயன் படுத்தப்படுகிறது
இது கனினித் திரையின் பிரகாசத்தை அதிகரித்தல், குறைத்தல், கனினி ஒலிக் கட்டுப் பாடு, மல்டி மீடியா ப்ரோஜெகட்ர் இணைத்தல், வைஃபை இணைப்பை இயங்க வைத்தல் போன்ற விசேட பணிகளுக்காகப் பயன் படுத்தப் படும்.
மேலும் Fn விசை எப்போதும் ஒரே பணியைச் செய்யாது. வெவ்வேறு மடிக்கணினி தயாரிப்புகளிலும், இயங்கு தளங்களிலும் வெவ்வேறு பணிகளைச் செய்யும்.
இந்த Fn விசையுடன் இணைந்து இயங்கும் விசைகளின் பெயர்கள் , மேலுள்ள Function விசைக்ளின் மீது கீழ்ப் பகுதியில் அச்சிடப் பட்டிருப்பதைக் காணலாம்.
சில மடிக்கணினி விசைப் பலகைகளில் Fn விசையும் அதனோடு ஒத்திசையும் பிற விசைகளும் ஒரே நிறத்தில் அச்சிடப்பட்டிருக்கும்.
இந்த Fn விசையை அழுத்திய வாறே அதனோடு ஒத்திசையும் பிற விசைகளை ஒரே நேரத்தில் இயக்க வேண்டும்.